காசாவில் போரை நிறுத்த இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்பந்தம்: ட்ரம்ப், பைடனுக்கு நெதன்யாகு நன்றி!

காசாவில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 15 மாத காலமாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வர உள்ளது. போர்நிறுத்தம் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், இதற்காக நடவடிக்கை எடுத்த அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் ட்ரம்ப் மற்றும் தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார். போர் நிறுத்தத்துக்கான மத்தியஸ்தப் பணியில் அமெரிக்கா மற்றும் கத்தார் நாடுகள் ஈடுபட்டன. காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் … Read more

‘‘அமெரிக்காவை ஆட்சி செய்யப்போகும் சுயநலக்குழு’’ – இறுதி உரையில் பைடன் எச்சரிக்கை

வாஷிங்டன்: மிகப் பெரிய செல்வந்தர்களின் கைகளில் அமெரிக்காவின் ஆட்சி அதிகாரம் செல்வதால் நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் நிகழ்த்திய தனது இறுதி உரையில் கேட்டுக்கொண்டார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து அவர் வரும் 20ம் தேதி அதிபராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் நேற்று (புதன்கிழமை) நாட்டுமக்களுக்கு அதிகாரபூர்வ இறுதி உரையை நிகழ்த்தினார். அப்போது அவர், … Read more

லாஸ் ஏஞ்சல்ஸில் மீண்டும் அதி தீவிர அச்சம் – காட்டுத் தீ உயிரிழப்பு 25 ஆக அதிகரிப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வரும் காட்டுத் தீயைத் தூண்டிய காற்று மேலும் அதிகமாகும் என்று முன்னெச்சரிக்கை, நகரின் பல பகுதிகளும் அதி தீவிர அச்சத்தை எதிர்கொண்டுள்ளன. இதனிடையே, கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. காற்றின் வேகம் அதிகரிக்கும் என்ற முன்னறிவிப்பால், ஏற்கெனவே எரிந்து வரும் நான்கு காட்டுத் தீயை மேலும் தீவிரமாக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. புதன்கிழமைக்கு பின்பு காற்றின் … Read more

இது தென்கொரிய போலீஸின் ‘அசாதாரண சம்பவம்’ – பதவி இழந்த அதிபரின் கைதும் பின்னணியும்!

சீயோல்: தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் யூன் சாக் யோல் மீதான கைது நடவடிக்கைக்கு கடந்த டிசம்பர் 31ம் தேதியே நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில், மிக நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இன்றுதான் அவர் கைது செய்யப்பட்டார். தான் கைது செய்யப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை யூன் சாக் யோல் மேற்கொண்டிருந்த நிலையில், அனைத்து ஏற்பாடுகளையும் தாண்டி இன்று (ஜன.15) அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவரை கைது செய்தது காவல் துறையினருக்கு … Read more

3,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டம்

வாஷிங்டன், ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு மீது உலகின் முன்னணி நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை நடத்தும் மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தமது நிறுவனத்தில் பணியாற்றும் 3,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளார்.மேலும் அவர்களுக்கு பதில் புதிய ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிறுவனத்தின் கொள்கைகளை சீரமைக்கும் ஒரு பணியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பணிதிறன் … Read more

அமெரிக்கா: காட்டுத்தீ பாதிப்புக்கு 25 பேர் பலி

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு உட்பட்ட லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால், பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். விலங்குகள் மற்றும் பறவைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வேறு இடங்களுக்கு செல்லும்படி உத்தரவிடப்பட்டு உள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நீடித்து வரும் காட்டுத்தீயில் சிக்கி 25 பேர் பலியாகி உள்ளனர். 30 பேர் காணாமல் போயுள்ளனர். 12 ஆயிரம் கட்டிடங்கள் முற்றிலும் சேதமடைந்து … Read more

ரஷியா அதிரடி தாக்குதல்.. உக்ரைனில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிப்பு

கீவ்: உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பை தொடங்கிய ரஷியா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. சமீப காலமாக உக்ரைனின் உள்கட்டமைப்புகளை ரஷியா தாக்குகிறது. அவ்வகையில், ரஷிய படைகள் இன்று உக்ரைனின் மின் உற்பத்தி மையங்கள் மற்றும் எரிசக்தி சேமிப்பு மையங்களை குறிவைத்து மிகப்பெரிய அளவில் ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. இதனால் பல இடங்களில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை உக்ரைன் எரிசக்தி துறை மந்திரி ஹெர்மன் … Read more

உடலுறவு மாரத்தான்! 12 மணிநேரத்தில் 1,057 ஆண்களுடன்… யார் அந்த பெண்?

World Bizarre Latest News: ஆபாச பட மாடலான போனி ப்ளூ என்பவர், 12 மணிநேபத்தில் 1,057 ஆண்களுடன் உடலுறவு மேற்கொண்டதாக அறிவித்துள்ளார்.

ரஷியா: ராணுவ தளங்கள் மீது உக்ரைன் தாக்குதல்

கியேவ், ரஷியாவின் ராணுவ தளங்கள் (ராணுவத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் இடங்கள்) மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் … Read more

வங்காளதேச பணமோசடி விசாரணை; இங்கிலாந்து பெண் மந்திரி பதவி விலகல்

லண்டன், இங்கிலாந்தில் பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அவருடைய அரசில் லஞ்ச ஒழிப்பு துறை மந்திரியாக இருந்தவர் துலிப் சித்திக் (வயது 42). இந்நிலையில், அவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். வங்காளதேச முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனாவின் (வயது 77) மருமகளான சித்திக், வங்காளதேசத்தில் நடந்து வரும் நிதி மோசடி தொடர்பான விசாரணையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதனால், அவரிடம் விசாரணை நடைபெற உள்ளது. இது இங்கிலாந்து பிரதமருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. … Read more