3,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டம்

வாஷிங்டன், ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு மீது உலகின் முன்னணி நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை நடத்தும் மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தமது நிறுவனத்தில் பணியாற்றும் 3,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளார்.மேலும் அவர்களுக்கு பதில் புதிய ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிறுவனத்தின் கொள்கைகளை சீரமைக்கும் ஒரு பணியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பணிதிறன் … Read more

அமெரிக்கா: காட்டுத்தீ பாதிப்புக்கு 25 பேர் பலி

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு உட்பட்ட லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால், பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். விலங்குகள் மற்றும் பறவைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வேறு இடங்களுக்கு செல்லும்படி உத்தரவிடப்பட்டு உள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நீடித்து வரும் காட்டுத்தீயில் சிக்கி 25 பேர் பலியாகி உள்ளனர். 30 பேர் காணாமல் போயுள்ளனர். 12 ஆயிரம் கட்டிடங்கள் முற்றிலும் சேதமடைந்து … Read more

ரஷியா அதிரடி தாக்குதல்.. உக்ரைனில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிப்பு

கீவ்: உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பை தொடங்கிய ரஷியா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. சமீப காலமாக உக்ரைனின் உள்கட்டமைப்புகளை ரஷியா தாக்குகிறது. அவ்வகையில், ரஷிய படைகள் இன்று உக்ரைனின் மின் உற்பத்தி மையங்கள் மற்றும் எரிசக்தி சேமிப்பு மையங்களை குறிவைத்து மிகப்பெரிய அளவில் ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. இதனால் பல இடங்களில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை உக்ரைன் எரிசக்தி துறை மந்திரி ஹெர்மன் … Read more

உடலுறவு மாரத்தான்! 12 மணிநேரத்தில் 1,057 ஆண்களுடன்… யார் அந்த பெண்?

World Bizarre Latest News: ஆபாச பட மாடலான போனி ப்ளூ என்பவர், 12 மணிநேபத்தில் 1,057 ஆண்களுடன் உடலுறவு மேற்கொண்டதாக அறிவித்துள்ளார்.

ரஷியா: ராணுவ தளங்கள் மீது உக்ரைன் தாக்குதல்

கியேவ், ரஷியாவின் ராணுவ தளங்கள் (ராணுவத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் இடங்கள்) மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் … Read more

வங்காளதேச பணமோசடி விசாரணை; இங்கிலாந்து பெண் மந்திரி பதவி விலகல்

லண்டன், இங்கிலாந்தில் பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அவருடைய அரசில் லஞ்ச ஒழிப்பு துறை மந்திரியாக இருந்தவர் துலிப் சித்திக் (வயது 42). இந்நிலையில், அவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். வங்காளதேச முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனாவின் (வயது 77) மருமகளான சித்திக், வங்காளதேசத்தில் நடந்து வரும் நிதி மோசடி தொடர்பான விசாரணையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதனால், அவரிடம் விசாரணை நடைபெற உள்ளது. இது இங்கிலாந்து பிரதமருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. … Read more

ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களை விடுவிக்க வேண்டும்: இந்தியா மீண்டும் கோரிக்கை

புதுடெல்லி: ரஷ்ய ராணுவத்தில் பணியில் இருந்த கேரள மாநிலத்தை சேர்ந்தவர் யுத்த களத்தில் தாக்குதலில் உயிரிழந்த நிலையில் அங்கு ராணுவப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியர்கள் அனைவரையும் விரைந்து விடுவிக்க வேண்டும் என இந்தியா மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது. இதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் உறுதி செய்துள்ளார். “ரஷ்ய நாட்டு ராணுவத்தில் பணியில் இருந்த கேரளவைச் சேர்ந்த இந்தியர் உயிரிழந்த தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. இது துரதிர்ஷ்டவசமானது. தாக்குதலில் காயமடைந்த மற்றொரு இந்தியர் … Read more

மார்டின் லூதர் கிங் ஜூனியர் 95-வது பிறந்தநாள்: நினைவுகூரத்தக்க மேற்கோள்கள் சில…

நிறவெறிக்கு எதிராக காந்தியவழியில் அறப்போராட்டம் நடத்தி வரலாறு படைத்த மார்டின் லூதர் கிங்-ஜூனியர் பிறந்த தினம் இன்று (15 ஜனவரி). அவரது 95-வது பிறந்தநாளில் அவரைப் போற்றும் வகையில் அவருடைய சக்திவாய்ந்த, பிரபலமான மேற்கோள்கள் சிலவற்றை நினைவுகூர்கிறோம். * உண்மையான சமாதானம் என்பது பிரச்சினைகள் இல்லாமை அல்ல; மாறாக நீதி நிலவுதலே உண்மையான சமாதானம். * நமக்கான வாய்ப்புகள் மறுக்கப்படும்போது நாம் கையறு நிலையில், ஆடையற்று, நிற்கதியாக இருக்கச் செய்யப்படுகிறோம். * மனம் அடிமைப்பட்டு கிடக்கும் வரை … Read more

ராணுவ சட்டத்தை அமல்படுத்திய தென்கொரிய அதிபர் கைது

சியோல்: தென் கொரிய நாட்டில் பதவி நீக்கத்துக்கு ஆளான அதிபர் யூன் சாக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார். இதை அந்த நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அதிபர் மாளிகை வளாகத்துக்கு முன்பாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று (ஜன.15) அதிகாலை நேரத்தில் குவிந்தனர். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். கறுப்பு நிற எஸ்யூவி வாகனங்கள் சைரனை ஒலிக்க செய்தபடி அதிபர் மாளிகை வளாகத்தை விட்டு … Read more

இஸ்ரேல் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 

ஏமனின் ஹவுதி படைகள் இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளன. இதனால் டெல் அவிவ் நகரம் மற்றும் மேற்குக் கரையில் உள்ள சில இஸ்ரேலிய குடியிருப்பு பகுதிகளில் சைரன்கள் எழுப்பப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. எனினும் இந்த தாக்குதலில் ஜெருசலேமின் புறநகரில் உள்ள மேவோ பெய்டார் மற்றும் த்சூர் ஹடாசாவில் வீடுகள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சேதத்தை மதிப்பிடுவதற்கும் தளத்தைப் பாதுகாப்பதற்கும் வெடிகுண்டு … Read more