ஐவரி கோஸ்ட்டில் நடந்த சாலை விபத்தில் 26 பேர் பலி

அபித்ஜன், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஐவரி கோஸ்ட்டின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள பிரோகோவா என்ற கிராமத்தில் இரண்டு மினி பஸ்கள் நேருக்கு நேர் மோதியது. இந்த மோதலில் இரண்டு மினி பஸ்களில் தீ பிடித்தது. இந்த கோர விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர் மற்றும் 28 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி தகவறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி … Read more

சிரியாவில் பதற்ற நிலை: பயணங்களை தவிர்க்க குடிமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

டமாஸ்கஸ், சிரியா நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். சில ஆண்டுகளாக பெரிய அளவில் வன்முறை எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது. இதில், சிரியாவுக்கான அல்-கொய்தா கிளை அமைப்புடன் தொடர்பிலுள்ள ஹயத் தஹ்ரீர் அல்-ஷாம் அமைப்பின் தலைவர் அபு முகமது கூறும்போது, அதிபர் பஷார் அல்-ஆசாத்தின் ஆட்சிக்கு முடிவு ஏற்படுத்த வேண்டும் என்பதே இலக்கு என்றார். … Read more

சிரியாவின் முக்கிய நகரங்களை கைப்பற்றிய கிளர்ச்சிப் படைகள்: வெளியேறிய ராணுவம் – நடப்பது என்ன?

டமாஸ்கஸ்: சிரியாவில் கிளர்ச்சி படைகளின் தொடர் தாக்குதலால், அந்நாட்டு ராணுவம் தெற்கின் பெரும்பான பகுதிகளில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், தரா மற்றும் ஸ்வீடா நகரங்களை கிளர்ச்சிப் படைகள் கைப்பற்றின. 2011-ம் ஆண்டு அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு எதிராக தராவில் இருந்துதான் கிளர்ச்சி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வாரத்தில் சிரியாவின் ராணுவம் இழந்திருக்கும் நான்காவது மிகப் பெரிய நகரம்தான் தரா. கடந்த மாத இறுதியில் சிரியாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான அலெப்போவில் இருந்து அரசுப் … Read more

கனடாவில் இந்திய மாணவர் கத்தியால் குத்திக் கொலை

ஒட்டவா, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குராசிஸ் சிங் (22) என்பவர், கனடாவில் உள்ள லாம்ப்டன் கல்லூரியில் வணிக மேலாண்மை துறையில் முதல் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். இவர், கனடாவில் உள்ள சர்னியா பகுதியில், கிராஸ்லி ஹண்டர் (36) என்பவரோடு அறை எடுத்து தங்கியிருந்தார். இவர்கள் இருவரும் சமையலறையில் இருந்த போது இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கிராஸ்லி ஹண்டர், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குராசிஸ் சிங்கை சரமாரியாக பலமுறை குத்தினார். இதில் படுகாயமடைந்த குராசிஸ் … Read more

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் அழிந்து விட போகிறதா?.. எலான் மஸ்க்

டெக்ஸ்சாஸ், உலகின் பிரபலமான தொழிலதிபரும்,எக்ஸ் தள உரிமையாளருமான எலான் மஸ்க், தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாக சொல்ல கூடியவர். அவர் இரு நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் விரைவில் அழிந்து விடும் என்று ஜோதிடம் சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார். இது குறித்து எலான் மஸ்க் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது; சிங்கப்பூரில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்திருப்பதாக வெளியானத் தகவலை மேற்கோள்காட்டிய எலான் மஸ்க் மரியோ நாவ்பால் என்பவர், சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதம் … Read more

தென் ஆப்பிரிக்கா: சட்டவிரோத தங்க சுரங்கத்திற்குள் சிக்கிய 6 பேர் பலி

ஜோகனர்ஸ்பெர்க், தென் ஆப்பிரிக்காவின் ஸ்டில்போன்டைன் என்ற இடத்தில் மூடப்பட்ட சட்டவிரோத தங்க சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த சட்டவிரோத தங்க சுரங்கத்திற்குள் தங்கம் எடுப்பதற்காக ஏராளமான சுரங்க தொழிலாளர்கள் அங்கு சென்றுள்ளனர். சுரங்கத்திற்குள் சென்ற அவர்கள் எதிர்பாராத விதமாக உள்ளே சிக்கிக்கொண்டனர். இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சுரங்கத்திற்குள் சிக்கியிருப்பவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டவர்களில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்துவிட்டதாக … Read more

தென்கொரிய அதிபரின் ‘சுய ஆட்சிக் கவிழ்ப்பு’ சறுக்கலும், அரசியல் வரலாறும்!

சமீபத்தில் யாருமே எதிர்பார்க்காத, முன்னெப்போதும் இல்லாத ‘அரசியல் சம்பவம்’ ஒன்று தென்கொரியாவில் அரங்கேறியது. அந்நாட்டு அதிபர் யூன் சாங் யோல், தங்கள் நாட்டில் இருந்து வடகொரிய ஆதரவாளர்களை வெளியேற்றுவதற்காகவும், தென்கொரிய அரசுக்கு எதிரான சக்திகளை ஒடுக்குவதற்காகவும் ‘அவசரநிலை’யை பிரகடனப்படுத்தப்படுவதாக அறிவித்தார். தென்கொரிய அதிபரின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள், பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நாடாளுமன்ற நுழைவாயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து, அதிபர் யூனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. … Read more

வங்கதேச கரன்சியில் தேசத் தந்தை முஜிபுர் ரஹ்மான் படம் நீக்கம்

டாக்கா: வங்கதேச கரன்சி நோட்டுகளில் தேசத் தந்தை முஜிபுர் ரஹ்மானின் படம் நீக்கப்படுகிறது. அவரது படத்துக்கு பதிலாக மத வழிபாட்டு தலங்கள், வங்க கலாச்சாரம், மாணவர் போராட்டங்கள் தொடர்பான படங்கள் அடங்கிய புதிய கரன்சிகள் அச்சிடப்பட்டு வருகின்றன. வங்கதேசத்தில் இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன், ஜூலையில் மாணவர் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தின. இதன்காரணமாக அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். நோபல் … Read more

கலிபோர்னியாவை உலுக்கிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டதால் மக்கள் நிம்மதி

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நேற்று நள்ளிரவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.0 அலகாக பதிவாகியிருந்தது. பெர்ண்டேல் நகருக்கு மேற்கு-தென்மேற்கில் 100 கிலோ மீட்டர் தொலைவில், கடலுக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. நிலநடுக்கம் காரணமாக பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. கடைகளில் உள்ள பொருட்கள் அலமாரிகளில் இருந்து விழுந்தன. பல குடியிருப்புகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறி … Read more

அமெரிக்கா: கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

நியூயார்க், அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் கடலோர பகுதியில் கேப் மென்டோசினோ பகுதியில் இன்று அதிகாலை 12.14 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. தினத்தந்தி Related Tags : கலிபோர்னியா  powerful earthquake  California  சக்தி வாய்ந்த நிலநடுக்கம்