வங்காளதேசத்தில் இந்திய சேலையை எரித்து அரசியல் கட்சியினர் போராட்டம்

டாக்கா, வங்காளதேசத்தில் இஸ்கானின் முன்னாள் உறுப்பினரான சின்மோய் கிருஷ்ண தாஸ் இந்து பேரணி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, வங்காளதேச கொடியை அவமதித்து விட்டார் என்ற தேச துரோக குற்றச்சாட்டையடுத்து, அவர் கடந்த 25-ந்தேதி கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து இந்து கோவில்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. சிறுபான்மை மக்களுக்கு எதிராக அராஜகங்கள் நடந்து வருகின்றன. இந்துக்களின் கடைகள், வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. இதில், பலர் காயமடைந்து உள்ளனர். சிறுபான்மையினரின் சொத்துகளுக்கு தீ … Read more

உக்ரைனில் ஒரே நாளில் 280 வீரர்கள் பலி – ரஷியா

கீவ், ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளுக்கு முன்பு 2022-ம் ஆண்டில் தொடங்கியது. தொடக்கத்தில் உக்ரைனின் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா கைப்பற்றியது. எனினும், அவற்றை பின்னர் உக்ரைன் பதிலடி கொடுத்து மீட்டது. போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தூதரக மற்றும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதில் பலன் ஏற்படவில்லை. போரில் அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை உக்ரைன் அரசு கோரி வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ராணுவம் … Read more

அமெரிக்க மருத்துவ காப்பீட்டு நிறுவன சிஇஓ சுட்டுக் கொலை: சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு

நியூயார்க்: அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் யுனைடட் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ப்ரையன் தாம்ப்ஸன் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருக்கு வயது 50. இந்நிலையில் சந்தேக நபரின் சிசிடிவு புகைப்படங்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர். நியூயார்க் நகரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த ப்ரையன் தாம்ப்ஸன் அங்கிருந்து யுனைடெட் ஹெல்த் குழுமத்தின் முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது கையில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் ப்ரையன் தாம்ப்ஸனின் … Read more

கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.0 ஆக பதிவு

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.0 ஆக பதிவானது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் அது சற்று நேரத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வடக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கலிபோர்னியாவின் கடலோர பகுதியான கேப் மெண்டோசினா பகுதியில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சற்று அதிகமாக உணரப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், மக்கள் பீதி அடைந்தனர். கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் … Read more

“அரசு அதிகாரத்தை மஸ்க் துஷ்பிரயோகம் செய்யமாட்டார் என நம்புகிறேன்” – சாம் ஆல்ட்மேன்

நியூயார்க்: அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் ட்ரம்ப் உடனான நட்புறவினை பயன்படுத்தி தன் போட்டி நிறுவனங்கள் மீது அரசு அதிகாரத்தை எலான் மஸ்க் துஷ்பிரயோகம் செய்யமாட்டார் என தான் நம்புவதாக ஓபன் ஏஐ நிறுவன சிஇஓ சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார். தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் செயல்திறன் துறையை தலைமை தாங்கி வழிநடத்துவார்கள் என கடந்த மாதம் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில், நியூயார்க் டைம்ஸ் டீல்புக் மாநாட்டில் சாம் ஆல்ட்மேன், இது … Read more

சிகரெட்டை போலவே ஸ்மார்ட்போனிலும் விரைவில் ஹெல்த் எச்சரிக்கை வாசகம்: ஸ்பெயின் முயற்சி

மாட்ரிட்: ஸ்மார்ட்போன் அடிக்‌ஷன் வேடிக்கையான விஷயம் அல்ல. அதனை உணர்ந்த ஸ்பெயின், தேசத்தில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு போனிலும் ஹெல்த் எச்சரிக்கை வாசகத்தை இடம்பெற செய்ய முடிவு செய்துள்ளது. அரசுக் குழுவின் பரிந்துரைப்படி விரைவில் இந்த வாசகம் போன்களில் இடம்பெறும் என தகவல். ஸ்மார்ட்போன் அடிக்‌ஷன் மனநலன், உடல்நலன், தூக்கம், உறவு முறை என அனைத்தையும் வயது வித்தியாசமின்றி பாழ்படுத்துகிறது. இதை கருத்தில் எடுத்து கொண்ட ஐரோப்பிய தேசமான ஸ்பெயின் இந்த துணிச்சலான முடிவை எடுத்துள்ளது. அதாவது … Read more

மூன்றே மாதங்களில் கவிழ்ந்த பிரான்ஸ் அரசும், ஐரோப்பிய யூனியன் அச்சமும் – ஒரு பார்வை

பிரான்ஸ் பிரதமர் மிஷேல் பார்னியருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை அடுத்து, அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்துள்ளது. கடந்த 1962-ம் ஆண்டுக்குப் பிறகு நம்பிக்கையில்லா தீர்மானம் மூலமாக பிரான்ஸ் அரசு கவிழ்க்கப்படுவது இதுவே முதல்முறை. தற்போது பிரான்ஸில் நிலவி வரும் அரசியல் கொந்தளிப்பு, ஐரோப்பிய யூனியனையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன் பின்புலம் குறித்தும், ஏற்படுத்தக் கூடிய தாக்கம் குறித்தும் பார்ப்போம். பிரான்ஸ் நாடாளுமன்றத்தில், அந்நாட்டின் பிரதமர் மிஷேல் பார்னியேர் சமீபத்தில் 2025-ம் ஆண்டுக்கான சமூக … Read more

மக்களை கவர்ந்த டாப்-100 நகரங்கள் பட்டியல்: டெல்லிக்கு எந்த இடம் தெரியுமா?

லண்டன்: மக்களை கவர்ந்த நகரங்கள் தொடர்பாக ஈரோமானிட்டர் இன்டர்நேஷனல் என்னும் தரவு பகுப்பாய்வு நிறுவனம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு முதல் 100 நகரங்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்படுகிறது. பொருளாதாரம், தொழில்துறை மற்றும் சுற்றுலாவின் செயல்பாடுகள், சுற்றுலா உள்கட்டமைப்பு, சுகாதாரம், பாதுகாப்பு, நிலைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கண்கெடுப்பு நடத்தப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், பாரிஸ் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 4-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. … Read more

'மேக் இன் இந்தியா திட்டம்' ரஷிய அதிபர் புதின் பாராட்டு

மாஸ்கோ, ரஷிய தலைநகர் மாஸ்கோவில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அந்நாட்டு அதிபர் புதின் பேசியதாவது: இந்தியாவில் சிறு, குறு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா திட்டம்’ பாராட்டக் கூடியது. இந்திய பிரதமர் மோடியும், அவரது தலைமையிலான அரசும் நிலையான சூழலை உருவாக்கி வருகிறது. இந்தியாவுக்கு முதலில் வாருங்கள் என்ற கொள்கையை இந்தியாவின் தலைமை பின்பற்றுவதே இதற்கு காரணம். இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்கும் என்று … Read more

சீனா: ரெயில்வே கட்டுமான தளத்தில் நிலம் இடிந்து விழுந்ததில் 13 தொழிலாளர்கள் மாயம்

பீஜிங், சீனாவின் ஷென்சென் நகரின் பாவோன் மாவட்டத்தில் உள்ள ஷென்சென்-ஜியாங்மென் ரெயில்வேயின் ஒரு பகுதியில் நடைபெற்று வந்த கட்டுமான தளத்தில் நேற்று இரவு 11 மணியளவில் திடீரென நிலம் இடிந்து விழுந்தது. இதில் அங்கு பணிபுரிந்து வந்த 13 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி தகவறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் மாயாமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த இடிபாட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டு, அந்த இடத்தை … Read more