மக்களை கவர்ந்த டாப்-100 நகரங்கள் பட்டியல்: டெல்லிக்கு எந்த இடம் தெரியுமா?

லண்டன்: மக்களை கவர்ந்த நகரங்கள் தொடர்பாக ஈரோமானிட்டர் இன்டர்நேஷனல் என்னும் தரவு பகுப்பாய்வு நிறுவனம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு முதல் 100 நகரங்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்படுகிறது. பொருளாதாரம், தொழில்துறை மற்றும் சுற்றுலாவின் செயல்பாடுகள், சுற்றுலா உள்கட்டமைப்பு, சுகாதாரம், பாதுகாப்பு, நிலைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கண்கெடுப்பு நடத்தப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், பாரிஸ் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 4-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. … Read more

'மேக் இன் இந்தியா திட்டம்' ரஷிய அதிபர் புதின் பாராட்டு

மாஸ்கோ, ரஷிய தலைநகர் மாஸ்கோவில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அந்நாட்டு அதிபர் புதின் பேசியதாவது: இந்தியாவில் சிறு, குறு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா திட்டம்’ பாராட்டக் கூடியது. இந்திய பிரதமர் மோடியும், அவரது தலைமையிலான அரசும் நிலையான சூழலை உருவாக்கி வருகிறது. இந்தியாவுக்கு முதலில் வாருங்கள் என்ற கொள்கையை இந்தியாவின் தலைமை பின்பற்றுவதே இதற்கு காரணம். இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்கும் என்று … Read more

சீனா: ரெயில்வே கட்டுமான தளத்தில் நிலம் இடிந்து விழுந்ததில் 13 தொழிலாளர்கள் மாயம்

பீஜிங், சீனாவின் ஷென்சென் நகரின் பாவோன் மாவட்டத்தில் உள்ள ஷென்சென்-ஜியாங்மென் ரெயில்வேயின் ஒரு பகுதியில் நடைபெற்று வந்த கட்டுமான தளத்தில் நேற்று இரவு 11 மணியளவில் திடீரென நிலம் இடிந்து விழுந்தது. இதில் அங்கு பணிபுரிந்து வந்த 13 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி தகவறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் மாயாமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த இடிபாட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டு, அந்த இடத்தை … Read more

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவம் படிக்கத் தடை: ரஷித் கான் வேதனை

காபூல், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், 2021 முதல் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, பெண்கள் சிறுமிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள், கல்வி கற்க, வேலைக்குச் செல்லத் தடை, பொது இடங்களுக்கு ஆண்களின் துணை இல்லாமல் செல்லவும் தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான் அரசு விதித்து வருகிறது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் நர்சிங் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை பெண்கள் பயில தாலிபான் அரசு தடை விதித்துள்ளது. இந்த தடைக்கு அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வருத்தம் … Read more

இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

நியூயார்க், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. காசா மீது குண்டு மழை பொழிந்து வரும் இஸ்ரேலின் தாக்குதலால் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ள்னர். பலர் தங்கள் வீடுகள் உடைமகளை இழந்து நிர்கதியாய் தவிக்கிறார்கள். ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக் கட்டும் வரை போர் ஓயாது எனக் கூறியுள்ள இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் ஐ.நா. பொதுசபையில் … Read more

நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மிஷேல் தோல்வி: மூன்றே மாதத்தில் கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு

பாரிஸ்: பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால், பிரதமரான மூன்றே மாதத்தில் பதவியை இழந்தார் மிஷேல் பார்னியர். பிரான்ஸ் வரலாற்றில் 60 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு பிரதமரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பார்னியர் 91 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்துள்ளார். அந்நாட்டின் அரசியல் வரலாற்றில் இத்தகைய குறுகிய காலத்தில் பிரதமர் பதவியை இழந்தவராக மிஷேல் பார்னியர் அறியப்படுகிறார். பிரான்ஸ் நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத் … Read more

தென் கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை தாக்கல் செய்த எதிர்க்கட்சிகள்

சியோல், தென் கொரியாவில் அவசரகால ராணுவ சட்டம் அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டின் அதிபர் யூன் சுக் இயோல் நேற்று அதிரடியாக அறிவித்தார். இது தொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய யூன் சுக் இயோல், வட கொரிய கம்யூனிஸ்ட் படைகளின் அச்சுறுத்தல் காரணமாக தென் கொரியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தேசத்தை பாதுகாப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும், “நமது நாடாளுமன்றம் குற்றவாளிகளின் புகலிடமாகவும், சர்வாதிகாரத்தின் வசிப்பிடமாகவும் மாறியுள்ளது. அவர்கள் நீதித்துறை மற்றும் … Read more

காசா உணவு விநியோக மையம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 4 குழந்தைகள் உயிரிழப்பு

டெல் அவில்: மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள உணவு விநியோக மையம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். காசாவில் உள்ள குடும்பங்கள் தொடர்ந்து ‘மோசமான’ நிலைமைகளை எதிர்கொள்கின்றன என ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டில் சுமார் 1,200 பேரை படுகொலை செய்து, 200-க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாக ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் பிடித்துச் … Read more

கூகுளில் மறுதிருமணம் பற்றி தேடிய இந்திய வம்சாவளி நபர் – மனைவி கொலை வழக்கில் கைது

நியூயார்க், அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் மனஸ்சாஸ் பார்க் பகுதியில் வசித்து வருபவர் நரேஷ் பட் (வயது 33). இவருடைய மனைவி மம்தா காப்லே பட் (வயது 28). நேபாள நாட்டை சேர்ந்த இவர் நர்சாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஜூலை 29-ந்தேதி மம்தா காணாமல் போய் விட்டார். ஆனால், அதுபற்றி கவலைப்படாத நரேஷ், போலீசில் புகார் தெரிவிக்கவில்லை. அதற்கு மாறாக, கூகுளில் மறுதிருமணம் செய்வது பற்றி தேடியுள்ளார். மனைவி மரணம் அடைந்து விட்டால் கடன் என்னவாகும்? மனைவி … Read more

நமீபியாவின் வரலாற்றில் ஜனாதிபதியாக பதவியேற்கும் முதல் பெண்

விண்ட்ஹோக், நமீபியா நாட்டில் கடந்த மாதம் 27-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தென்மேற்கு ஆப்பிரிக்காவின் மக்கள் அமைப்பு கட்சி(SWAPO) சார்பில் போட்டியிட்ட துணை ஜனாதிபதி நெடும்போ நந்தி தைத்வா 57.3% வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் நமீபியாவின் ஜனாதிபதியாக பதவியேற்கும் முதல் பெண் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அதே போல் ஆப்பிரிக்க கண்டத்தின் 2-வது பெண் ஜனாதிபதி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். அதே சமயம், தேர்தல் … Read more