வரும் 20-ம் தேதி இலங்கை புதிய அதிபர் தேர்வு ?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கைக்கு புதிய அதிபர் வரும் 20-ம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாட்டால் மக்கள் அங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன் போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்கும் புகுந்து ரகளை செய்தனர். பிரதமர் இல்லத்தை தீ வைத்து கொளுத்தினர்.இதையடுத்து அனைத்துக் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் வகையில் இலங்கை அமைச்சரவை … Read more

2023ல் மக்கள் தொகையில் இந்தியா சீனாவை விஞ்சும்| Dinamalar

நியூயார்க் : ‘இந்தியா, 2023ல், மக்கள் தொகையில் சீனாவை விஞ்சி, உலகளவில் முதலிடத்தை பிடிக்கும்’ என, ஐ.நா., தெரிவித்துள்ளது. உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, ஐ.நா., ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த, 1950 முதல் உலக மக்கள் தொகையின் வளர்ச்சி விகிதம் குறைந்து, 2020ல் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக சரிவடைந்துள்ளது. வரும், நவ.,15ல் உலக மக்கள் தொகை, 800 கோடியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2030ல், 850 கோடியாகவும், 2050ல், 970 கோடியாகவும் உயரும். … Read more

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறை| Dinamalar

புதுடில்லி :நீதிமன்ற உத்தரவை மீறியதாக, தொழிலதிபர் விஜய் மல்லையா மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு மாத சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. எஸ்.பி.ஐ., எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி உட்பட பல வங்கிகளில், 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக, ‘கிங்பிஷர்’ நிறுவனத்தின் தலைவரான தொழிலதிபர் விஜய் மல்லையா மீது வழக்குகள் தொடரப்பட்டன.இதற்கிடையே, 2016 மார்ச் மாதம் ஐரோப்பிய … Read more

சொந்தமாக இருந்த ஒரே வீடும் தீயில் எரிந்து நாசமாகிவிட்டது: ரணில் வேதனை

கொழும்பு: “சொந்தமாக இருந்த ஒரே வீடும் தீயில் எரிந்து நாசமாகிவிட்டது” என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகக் கோரும் போராட்டம் அந்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளது. நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் சனிக்கிழமை கொழும்பு நகரில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். மக்களைத் தடுக்க முடியாமல் பாதுகாப்புப் படையினர் திணறினர். அதிபர் மாளிகைக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒட்டுமொத்த பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். போராட்டக்காரர்களால் … Read more

மக்கள் போராட்டத்தை அடுத்து இலங்கை அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா.!

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். கொழும்புவில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், அனைத்துக் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் வகையில் தமது பொறுப்புக்களை ஒப்படைத்து பதவி விலக தயார் என அமைச்சர்கள் அனைவரும் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் மக்கள் போராட்டங்கள் மீண்டும் வெடித்ததை தொடர்ந்து அதிபர் கோட்டபயா ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அடுத்தடுத்து ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. Source link

இலங்கையில் இருந்து கோத்தபய தப்பியோட்டம்.!

இலங்கையில் இருந்து கோத்தபய தப்பியோட்டம்.! கோத்தபய தப்பியதை சபாநாயகர் உறுதிப்படுத்தியதாக தகவல் இலங்கை அதிபர் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சே நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல் திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து கோத்தபய மற்றும் அவரது குடும்பத்தினர் 2 ஹெலிகாப்டர்கள் மூலம் கொழும்பை வந்தடைந்துள்ளனர். கோத்தபயவின் வருகைக்காக இரத்மலானை விமானப்படை தளத்தில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன அரை மணிக்கு முன்னர் கோத்தபய ராஜபக்சே மற்றும் குடும்பத்துடனான ஹெலிகாப்டர்கள் இரத்மலானை விமானப்படை தளத்திற்கு வந்தடைந்தன இரத்மலானையிலிருந்து எங்கு செல்வார் என்பது … Read more

உக்ரைன் குடியிருப்புப் பகுதியில் ரஷ்யா தாக்குதல்: 15 பேர் பலி

கார்கிவ்: உக்ரைனின் கார்கிவ் நகரில் அடுக்கு மாடி குடியிருப்பில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 15-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதுகுறித்து உக்ரைன் ராணுவம் தரப்பில் கூறும்போது, “உக்ரைனின் கிழக்கு பகுதியான கார்கிவ் நகரில் ரஷ்யா தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 15-ம் மேற்பட்டோர் பலியாகினர். இன்னும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். தொடர்ந்து அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது” என்றனர். இந்தத் தாக்குதலிலிருந்து தப்பித்த லுட்மிலா என்ற பெண் … Read more

திட்டமிட்டபடி கோத்தபய ராஜபக்சே ராஜினாமா – பிரதமர் அலுவலகம் உறுதி!

திட்டமிட்டபடி, வரும் 13 ஆம் தேதி இலங்கை அதிபர் பதவியை, கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ய உள்ளதாக, பிரதமர் அலுவலகம் உறுதிப்படத் தெரிவித்து உள்ளது. அண்டை நாடான இலங்கையில், வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டு மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். தலைநகர் கொழும்புவில் உள்ள இலங்கை … Read more

மக்கள் தொகையில் சீனாவை விஞ்சும் இந்தியா – ஐ.நா., கணிப்பு!

ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையின் படி, 2023 ஆம் ஆண்டில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவை இந்தியா விஞ்சும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய கணிப்புகளின்படி, உலக மக்கள் தொகை 2030 ஆம் ஆண்டில் சுமார் 8.5 பில்லியனாகவும், 2050 ஆம் ஆண்டில் 9.7 பில்லியனாகவும் வளரக்கூடும் என்று கணக்கிட்டுள்ளது. மேலும், இது 2080களில் சுமார் 10.4 பில்லியன் மக்கள் தொகையை கொண்டிருக்கும் என்றும் 2100 வரை அந்த … Read more

40 மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிமாற்றம் செய்த மல்லையா.. ரூ.2000 ஆயிரம் அபராதம் – 4 மாதங்கள் சிறைத் தண்டனை..!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் 4 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இந்திய வங்கிகளில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் லண்டன் தப்பிச் சென்ற நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை தனது குழந்தைகளுக்கு பரிமாற்றம் செய்தார் விஜய் மல்லையா. இந்த தகவலை நீதிமன்றத்துக்கு தெரிவிக்காத வழக்கில், அவருக்கு உச்ச நீதிமன்றம் 4 மாதங்கள் சிறைத் தண்டனையும் இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் … Read more