பிலிப்பைன்ஸ் அதிபருக்குகொரோனா| Dinamalar

மணிலா:கொரோ னா தொற்று ஏற்பட்டு இருப்பதால் பிலிப்பைன்ஸ் அதிபர் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டார்.தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியருக்கு, 64, சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்த அவர், அதிபர் மாளிகையிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். மணிலா:கொரோ னா தொற்று ஏற்பட்டு இருப்பதால் பிலிப்பைன்ஸ் அதிபர் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டார்.தென்கிழக்கு ஆசிய … Read more

Marburg virus: மங்கி வைரசுக்கு பிறகு மார்பர்க் வைரஸ் பரவுகிறதா

ஜெனீவா: மிகவும் தீங்கு விளைவிக்கும் மற்றும் ஆபத்தான வைரஸ் ஒன்று தொடர்பாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்தகால வெடிப்புகளில் இறப்பு விகிதம் 24% முதல் 88% வரை இருந்தது என்பதால் இது கவலைகளை அதிகரித்துள்ளது. கானாவில் 2 பேருக்கு மார்பர்க் வைரஸ் பாத்ப்பு பதிவாகியுள்ளது. இது, எபோலா போன்ற வைரஸாக இருப்பதால் WHO விழிப்புடன் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. கானாவில் எபோலா போன்ற மார்பர்க் வைரஸ் நோய் இரண்டு சாத்தியமானதாகப் பதிவாகியுள்ளது  உறுதி செய்யப்பட்டால் மேற்கு … Read more

UK PM: இங்கிலாந்தின் பிரதமராவாரா இந்திய வம்சாவளி ரிஷி சுனக்: பிரசாரம் தொடங்கியது

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததை அடுத்து, இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் வெள்ளிக்கிழமையன்று பிரதமர் வேட்பாளராக தனது பிரச்சாரத்தை தொடங்கினார். தனது பிரச்சாரத்தின் போது, சுனக் தனது இந்திய பாரம்பரியத்தை முன்நிறுத்தி பேசினார். தனது குடும்பம் தனக்கு எல்லாமே என்று கூறிய அவர், இந்திய பாரம்பரியத்தையும், குடும்ப அமைப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டினார். ஆறுதல்ல் கூறும்  விசித்திரக் கதைகளை வழங்கும் வேட்பாளராக தாம் இருக்கமாட்டேன் என்றும் ரிஷி சுனக் தெரிவித்தார். … Read more

பிரேசில் | படம் எடுத்தவரை தண்ணீரில் இருந்து சீறி வந்து கடித்த அனகோண்டா

கோயஸ்: வீடியோ படம் எடுத்த நபரை தண்ணீரில் இருந்து சீறி எழுந்து கடித்துள்ளது அனகோண்டா பாம்பு ஒன்று. இருந்தும் அந்தப் பாம்பின் விஷம் அவரது உடலில் ஊடுருவாத காரணத்தால் அவர் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார். இந்தச் சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது. கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான அனகோண்டா திரைப்படம் உலகம் முழுவதும் 13.68 கோடி அமெரிக்க டாலர்களை ஈட்டி இருந்தது. அதன்பிறகு 2004, 2008, 2009 மற்றும் 2015-களில் அனகோண்டா திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்துள்ளன. அதன்மூலம் … Read more

ரஷ்யாவை வீழ்த்த வேண்டும் என்ற மேற்கத்திய நாடுகளின் கனவு பலிக்காது.. போர்களத்தில் எதிர்கொள்ள எப்போதுமே தயார் – அதிபர் புடின் சவால்

மேற்கத்திய நாடுகள் நீண்ட காலமாக கூறிவரும் போரை களத்தில் சந்திக்க ரஷ்யா எப்போதுமே தயாராக இருப்பதாகவும், ஆனால் அதனால் உக்ரைனுக்கு தான் சோகமான முடிவு ஏற்படும் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார். இந்தோனேஷியாவில் ஜி 20 அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற ரகசிய கூட்டத்தில் ரஷ்ய அதிபரின் உரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதில் ரஷ்யாவை போர்களத்தில் வீழ்த்த வேண்டும் என்று நீண்டகாலமாக எண்ணி வரும் மேற்கத்திய நாடுகள் முடிந்தால் அதனை முயற்சித்து பார்க்கலாம் என்று … Read more

ஜப்பான் பிரதமராக நீண்ட காலம் பதவி வகித்த ஷின்சோ அபே – அரசியல் பயணம் எத்தகையது?

ஜப்பானின் நீண்ட கால பிரதமராக அறியப்படும் ஷின்சோ அபே (67) இன்று காலை நாரா நகரில் பிரச்சாரத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தப் படுகொலை அனைத்து உலகத் தலைவர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. நட்பு நாடுகளுடனான வெளியுறவு கொள்கை, நாட்டின் பொருளாதாரத்தை வெற்றிகரமாக கையாளுதல் போன்றவற்றுக்கு எடுத்துக்காட்டாகவே ஷின்சோவின் செயல்பாடுகள் அறியப்பட்டன. இதன் பொருட்டே பொருளாதாரம் சார்ந்த அவரது கொள்கைகள் பிரபலாக “Abenomics” என்று அழைக்கப்படுகின்றன. அவரது ஆட்சிக் காலத்தில் வெளியுறவுத் துறை சார்ந்து பெரிதும் பாராட்டப்பட்டார். இதில், பொது … Read more

ஈரானில் இருந்து படகுகளில் கடத்தப்பட்ட ஏவுகணைகளை வழிமறித்துப் பறிமுதல் செய்துள்ளது பிரிட்டிஷ் கடற்படை.!

ஈரானில் இருந்து படகுகளில் கடத்தப்பட்ட ஏவுகணைகளை பிரிட்டிஷ் கடற்படை வழிமறித்துப் பறிமுதல் செய்துள்ளது. ஈரானியக் கடற்கரைப் பகுதியில் பிரிட்டிஷ் கடற்படை ஹெலிகாப்டர் பறந்தபோது அதிவிரைவுப் படகுகள் சென்றதைக் கண்டதாகத் தெரிவித்துள்ளது. படகுகளை பிரிட்டிஷ் போர்க்கப்பல் மூலம் வழிமறித்துச் சோதித்ததில் 1000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் திறனுள்ள 351 வகை ஏவுகணைகள், தரையில் இருந்து வான் இலக்கைத் தாக்கும் 358 வகை ஏவுகணைகள் இருந்ததைக் கண்டதால் அவற்றைப் பறிமுதல் செய்ததாகத் தெரிவித்துள்ளது. 351 வகை ஏவுகணைகள் … Read more

இலங்கையில் நாளை மக்கள் போராட்ட பேரணி: பாதுகாப்பு வளையத்தில் கொழும்பு

கொழும்பு: கோத்தபய ராஜபக்சவை பதவி விலக வலியுறுத்தி நாளை (சனிக்கிழமை) இலங்கைத் தலைநகர் கொழும்புவில் பேரணி நடைபெறவிருக்கும் நிலையில், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இலங்கை 1948-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரைக் கண்டிராத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. மக்கள் புரட்சியால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இன்னமும் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் தட்டுப்பாட்டிலிருந்து இலங்கை மக்கள் மீளவில்லை. இந்த நிலையில், அதிபர் கோத்தபய … Read more

Ban TikTok: இரு சிறுமிகளின் உயிரைப் பறித்த டிக்டாக்கின் பிளாக்அவுட் சேலஞ்ச்

பிரபலமான டிக்டாக் செயலியின் ஆபத்தான விளையாட்டுகளுக்கு மேலும் இரு சிறுமிகள் பலியான விஷயம் அனைவரையும் உலுக்கியுள்ளது. சீனாவின் பிரபல செயலியான டிக்டோக், சில நேரங்களில் ஆபத்தான விளையாட்டு சவால்களை போட்டியாக வைக்கிறது. விளையாட்டு விபரீதமாகும் என்பதை டிக்டாக் பலமுறை நிரூபித்திருக்கிறது. இந்த செயலியில் இடம்பெறும் சவால்களினால் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது கவலையை அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவில் டிக்டாக்கின் “பிளாக் அவுட் சேலஞ்ச்” நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட இரண்டு சிறுமிகள் இறந்த நிலையில், அவர்களின் பெற்றோர்கள், டிக்டாக் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். … Read more

ஜப்பான் முன்னாள் பிரதமர் சுட்டுக் கொலை.. பிரச்சாரத்தின்போது பயங்கரம்!

தேர்தல் பரப்புரையின் போது ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டார். ஜப்பான் மேலவைக்கு தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஆளும் Liberal Democratic கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் பிரதமருமான ஷின்சோ அபே மத்திய ஜப்பானில் உள்ள நாரா என்ற இடத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். வெகுசிலரே கூடியிருந்த நிலையில், திடீரென பின்னால் இருந்து வந்த ஒருவர், மிக அருகில் இருந்து ஷின்சோ அபேவை நோக்கி இரு முறை துப்பாக்கியால் சுட்டார். இதில் சுய நினைவை இழந்த ஷின்சோ … Read more