இலங்கையில் ஒரு சைக்கிள் விலை ரூ.1 லட்சம்
இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க மக்கள் சைக்கிள் பயணங்களுக்கு திரும்பிய நிலையில், ஒரு சைக்கிளின் விலை ஒரு லட்ச ரூபாய்க்கும் மேலாக விற்கப்படுகிறது. எரிபொருள் வாங்க நாள் கணக்கில் காத்திருக்க வேண்டி உள்ளதால் மக்கள் சைக்கிள் பயணங்களை மேற்கொள்கின்றனர். அதேநேரம் தொடர் சைக்கிள் திருட்டு சம்பவங்களால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். கொழும்பு, திரிகோணமலை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சைக்கிள் திருடு போனதாக புகார்கள் குவிந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். Source link