மேடையில் மயங்கி விழுந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே: துப்பாக்கியால் சுடப்பட்டாரா?

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் ஆற்றிய உரையின் போது மயங்கி விழுந்தார். அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தளத்தில் துப்பாக்கிச் சூடு போன்ற சத்தம் கேட்டதாகவும், அபேவுக்கு காயங்கள் ஏற்பட்டு இரத்தம் கசிந்தது காணப்பட்டதாகவும் ஒரு NHK நிருபர் குறிப்பிட்டுள்ளதாக ஜப்பானின் NHK வேர்ல்ட் நியூஸ் தெரிவித்துள்ளது. ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, ஷின்சோ அபே மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் உரை … Read more

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் பொது வெளிகளில் நடமாட கொரோனா தடுப்பூசி கட்டாயம்..!

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் மக்கள் பொது வெளிகளில் நடமாட கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் மாறுபாடு வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த வரும் திங்கட்கிழமை முதல் உத்தரவு அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள், அருங்காட்சியங்கள், உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் மக்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றியதழை கட்டாயம் காண்பிக்க வேண்டுமென அரசு அறிவித்துள்ளது.  Source link

பாமாயில் ஏற்றுமதியை அதிகரிக்க வரியைக் குறைக்க முடிவு..!

உலகின் தலைசிறந்த சமையல் எண்ணெய் ஏற்றுமதியாளரான இந்தோனேசியா, பாமாயில் வரியை குறைக்கலாம் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பொருட்களின் ஏற்றுமதிக்கு முந்தைய தடை காரணமாக உள்நாட்டு கையிருப்பு, அதிகரித்தது. உலகின் முன்னணி பாமாயில் உற்பத்தியாளரான Reut Indonesia ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான ஒரு வழியாக அதன் பாமாயில் ஏற்றுமதி வரியை குறைக்கக் கூடும் என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். Source link

20 ஆண்டுகளுக்கு பின் தோண்டி எடுப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காந்தஹார்: ஆப்கானிஸ்தானில், தலிபான் நிறுவனரான மறைந்த முல்லா ஒமரின் கார், பூமிக்குள் இருந்து, 20 ஆண்டுகளுக்கு பின் தோண்டி எடுக்கப்பட்டது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான் அமைப்பை தோற்றுவித்த முல்லா ஒமர், அந்நாட்டு அரசுக்கு எதிராக போரில் ஈடுபட்டார்.உள்நாட்டு போரில் வென்ற தலிபான்கள், 1996ல் ஆட்சியை பிடித்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை அல் – குவைதா பயங்கரவாதிகள், 2001ல் தகர்த்தனர். இதை தொடர்ந்து, ஆப்கன் மீது போர் தொடுத்த … Read more

இலங்கை: பாஸ்போர்ட்டு அலுவலகத்தில் காத்திருந்த கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது

கொழும்பு, இலங்கையில் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடியால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வெளிநாடுகளில் பிழைப்பு தேடி சென்று வருகின்றனர். இதனால் பாஸ்போர்ட்டு பெறுவதற்காக கொழும்புவில் உள்ள அலுவலகத்தில் தினந்தோறும் நீண்ட வரிசை காணப்படுகிறது. அவர்களை கட்டுப்படுத்துவதற்காக ராணுவம் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த அலுவலகத்தில் பாஸ்போர்ட்டு பெறுவதற்காக 26 வயது கர்ப்பிணி ஒருவர் தனது கணவருடன் கடந்த 2 நாட்களாக வரிசையில் காத்திருந்தார். அவருக்கு நேற்று காலையில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. வலியால் … Read more

“தி காட்ஃபதர்” திரைப்படத்தில் கேங்ஸ்டராக நடித்த பிரபல நடிகர் ஜேம்ஸ் கான் காலமானார்..!

கல்ட் கிளாசிக் “தி காட்ஃபதர்” திரைப்படத்தில் கேங்ஸ்டர் சோனி கோர்லியோனாக நடித்த பிரபல அமெரிக்க நடிகர் ஜேம்ஸ் கான் காலமானார். அவருக்கு வயது 82. மாஃபியாக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி மேரியோ புஸோ எழுதிய “தி காட்ஃபாதர்”நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட “தி காட்ஃபாதர்” 1972-ல் வெளியானது. கேங்ஸ்டர் மூவி என்ற பிராண்டுக்குப் பெருமதிப்பை ஏற்படுத்திக் கொடுத்த இந்த படம் சினிமா ஆர்வலர்களால் கொண்டாடித் தீர்க்கப்பட்டது. சோனி கோர்லியோன் கதாபாத்திரத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருது மற்றும் கோல்டன் … Read more

இலங்கை செல்ல வேண்டாம்: பிரிட்டன், நியூஸி., அறிவிப்பு| Dinamalar

கொழும்பு : இலங்கையில் தற்போது நிலவும் அசாதாரண சூழலில் அந்நாட்டிற்கு அவசியமின்றி செல்வதை தவிர்க்கும்படி பிரிட்டன் மற்றும் நியூசிலாந்து தங்கள் நாட்டு மக்களிடம் அறிவுறுத்தியுள்ளன. நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் மருந்து, சமையல் ‘காஸ்’ மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. எரிபொருள் பற்றாக்குறையால் போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் அவசர சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தினசரி மின்வெட்டு … Read more

அர்ஜெண்டினா: போர்க்குற்ற வழக்கில் முன்னாள் ராணுவ ஜெனரலுக்கு சாகும்வரை சிறை

பியூனோஸ் அயர்ஸ், அர்ஜெண்டினா நாட்டில் 1976-ம் ஆண்டு தொடங்கி 1983-ம் ஆண்டு வரையில் ராணுவ சர்வாதிகார ஆட்சி நடைபெற்றது. அப்போது 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் அல்லது வலுக்கட்டாயமாக காணாமல் போயினர். மேலும், அந்த கால கட்டத்தில் சுமார் 350 பேரை ராணுவ உயர் அதிகாரிகள் சித்ரவதை செய்ததாகவும், பலரை காணாமல் போகச்செய்ததாகவும், கொலை செய்ததாகவும், குழந்தைகளை கடத்தியதாகவும் இன்னபிற போர்க்குற்றங்களை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மெர்சிடஸ் பென்ஸ் தொழிற்சாலையில் 6 தொழிலாளர்கள், வலதுசாரி கொலைப்படைகளால் கடத்தப்பட்டதாகவும் … Read more

உலகம் முழுவதும் 58 நாடுகளில் 6,000-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு

உலகம் முழுவதும் 58 நாடுகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நோய் தொற்று பரவல் தொடர்பாக அவசரக் கூட்டத்தை நடத்த உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மொத்த பாதிப்புகளில் 85 சதவீதம் ஐரோப்பாவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

இந்திய வம்சாவளிக்கு தூக்கு நிறைவேற்றம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிங்கப்பூர் : சிங்கப்பூரில் போதை மருந்து கடத்தல் வழக்கில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு, மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்பை மீறி நேற்று துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தென்கிழக்காசிய நாடான சிங்கப்பூரில், 15 கிராமிற்கு மேல் போதை பொருள் வைத்திருக்கும் குற்றத்திற்கு துாக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இந்நிலையில், மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, கல்வந்த் சிங்,31 என்பவர், 120 கிராம் போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டில், 2013ல் சிங்கப்பூரில் கைது … Read more