ஊட்டச் சத்து குறைபாடு இந்தியாவில் குறைந்தது: ஐ.நா.,| Dinamalar

நியூயார்க் : இந்தியாவில் ஊட்டச் சத்து குறைபாடு உள்ளோர் எண்ணிக்கை, 22.43 கோடியாக குறைந்துள்ளதாக, ஐ.நா., தெரிவித்துள்ளது. ஐ.நா., உணவு மற்றும் வேளாண் நிறுவனம், சர்வதேச உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச் சத்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2019 – 21ம் ஆண்டுகள் நிலவரப்படி, இந்தியாவில் போதிய ஊட்டச் சத்து உணவு கிடைக்காமல் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, 2.30 கோடி குறைந்து, 22.43 கோடியாக சரிந்துள்ளது. இது, 2004 – 06ம் ஆண்டுகளில், 24.78 கோடியாக அதிகரித்து … Read more

சீனாவில் ஹெலிகாப்டர் விபத்து – 2 விமானிகள் பலி

பீஜிங், சீன நாட்டில் நேற்று முன்தினம் தலைநகரான பீஜிங்கின் புறநகர்ப்பகுதியில் சிவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. நேற்றுமுன்தினம் உள்ளூர் நேரப்படி மாலை 3.30 மணி அளவில் நடந்த இந்த ‘பெல் 505’ ரக ஹெலிகாப்டர் விபத்தில் அதன் 2 விமானிகளும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த ஹெலிகாப்டர், பீஜிங் ரெய்ன்வுட் ஸ்டார் ஜெனரல் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமானது. விபத்தில் ஹெலிகாப்டர் மிகவும் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் பலியான விமானிகள் பற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை. … Read more

பதவி விலகும் போரிஸ் ஜான்சன் – அடுத்த பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்வாக வாய்ப்பு

லண்டன்: பிரிட்டனில் அமைச்சர்கள் 40-க்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்து, இதற்கு முன் இல்லாத வகையில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியதால், பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்கிறார். கன்சர்வேட்டிவ் (பழமைவாத) கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகும் அவர், புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் பொறுப்புகளை கவனிப்பார். பிரிட்டனில் 3 ஆண்டுகளுக்கு முன்பு கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவிக்கு வந்தார். கடந்த2019-ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியை … Read more

#லைவ் அப்டேட்ஸ்: போர் 'தீவிரமாக' தொடங்கவில்லை – புதின்

Live Updates 7 July 2022 9:01 PM GMT கிழக்கு உக்ரைனில் ரஷியா தொடர் தாக்குதல்: 3.50 லட்சம் மக்கள் வெளியேற வலியுறுத்தல் உக்ரைன்-ரஷியா இடையேயான போர் 135வது நாளாக நீடித்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மாகாணத்தை கைப்பற்ற ரஷிய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளன. அந்த மாகாணத்தில் ஸ்லோவியன்ஸ்க், அவ்டிவ்கா, குராஸ்னோரிவ்காவ் மற்றும் குராகோவ் ஆகிய 4 நகரங்கள் அரசு படைகளின் வசம் உள்ளன. ஒரே சமயத்தில் அந்த 4 நகரங்கள் … Read more

ஆல்ரவுண்டராக அசத்திய ஹர்திக்; இந்திய அணிக்கு முதல் வெற்றி| Dinamalar

சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ‘டி-20’ போட்டியில், ஹர்திக் பாண்ட்யா ஆல்ரவுண்டராய் அசத்த, இங்கிலாந்தை 50 ரன் வித்தியாசத்தில், இந்திய அணி வீழ்த்தியது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று ‘டி-20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று சவுத்தாம்ப்டனில் நடந்தது. கேப்டன் ரோகித் சர்மா அணிக்கு திரும்பினார். ‘டாஸ்’ வென்ற ரோகித், பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் அறிமுக வாய்ப்பு பெற்றார். உம்ரான் மாலிக், சஞ்சு … Read more

ஊட்டச் சத்து குறைபாடுஇந்தியாவில் குறைந்தது| Dinamalar

நியூயார்க்:இந்தியாவில் ஊட்டச் சத்து குறைபாடு உள்ளோர் எண்ணிக்கை 22.43 கோடியாக குறைந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.ஐ.நா. உணவு மற்றும் வேளாண் நிறுவனம் சர்வதேச உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச் சத்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2019 – 21ம் ஆண்டுகள் நிலவரப்படி இந்தியாவில் போதிய ஊட்டச் சத்து உணவு கிடைக்காமல் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 2.30 கோடி குறைந்து 22.43 கோடியாக சரிந்துள்ளது. இது 2004 – 06ம் ஆண்டுகளில் 24.78 கோடியாக அதிகரித்து காணப்பட்டது.கடந்த 2020ல் ஊட்டச்சத்து … Read more

பணவீக்கத்தை குறைக்க இலங்கையில் வட்டி விகிதங்களை உயர்த்தியது மத்திய வங்கி..!

பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கையில் பணவீக்கத்தை குறைக்க வட்டி விகிதங்களை அந்நாட்டு மத்திய வங்கி உயர்த்தியுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ள நிலையில் உணவு, மருந்து, எரிபொருட்களை வாங்க முடியாமல் இலங்கை அரசு கடும் நெருக்கடிக்குள் உள்ளாகி இருக்கிறது.  நிலையான கடன் வசதி விகிதத்தை 15.50 சதவீதமாகவும், நிலையான வைப்பு வசதி விகிதத்தை 14.50 சதவீதமாகவும் இலங்கை மத்திய வங்கி உயர்த்தியுள்ளது.  Source link

மண்ணில் புதைத்த தலிபான் நிறுவனரின் கார்20 ஆண்டுகளுக்கு பின் தோண்டி எடுக்கப்பட்டது| Dinamalar

காந்தஹார்:ஆப்கானிஸ்தானில், தலிபான் நிறுவனரான மறைந்த முல்லா ஒமரின் கார், பூமிக்குள் இருந்து, 20 ஆண்டுகளுக்கு பின் தோண்டி எடுக்கப்பட்டது.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான் அமைப்பை தோற்றுவித்த முல்லா ஒமர், அந்நாட்டு அரசுக்கு எதிராக போரில் ஈடுபட்டார்.உள்நாட்டு போரில் வென்ற தலிபான்கள், 1996ல் ஆட்சியை பிடித்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை அல் – குவைதா பயங்கரவாதிகள், 2001ல் தகர்த்தனர்.இதை தொடர்ந்து, ஆப்கன் மீது போர் தொடுத்த அமெரிக்கா, தலிபான் அரசை நீக்கிவிட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசை … Read more

தாலிபன் அமைப்பை உருவாக்கிய முல்லா உமர் பயன்படுத்திய கார் 21 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டியெடுப்பு..!

ஆப்கானிஸ்தானில் தாலிபன் அமைப்பை உருவாக்கிய, முல்லா உமர் பயன்படுத்திய வெள்ளை நிற டயோட்டா கார் சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு மண்ணில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது.  இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளின் தேடுதல் வேட்டை தீவிரமானதால், அந்த கார் கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஒருகிராமத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டது. 2013 ல்  முல்லா உமர் காசநோயால் உயிரிழக்க, அந்த காரை காபூல் தேசிய அருங்காட்சியகத்தில் வைக்க தாலிபன்கள் தற்போது தோண்டி எடுத்துள்ளனர். Source link

இந்திய வம்சாவளிக்கு துாக்கு தண்டனை| Dinamalar

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் போதை மருந்து கடத்தல் வழக்கில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு, மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்பை மீறி, நேற்று துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தென்கிழக்காசிய நாடான சிங்கப்பூரில், 15 கிராமிற்கு மேல் போதைப் பொருள் வைத்திருக்கும் குற்றத்திற்கு துாக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இந்நிலையில், மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, கல்வந்த் சிங், 31, என்பவர், 120 கிராம் போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டில், 2013ல் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டார். அவருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ‘கல்வந்த் … Read more