தென் கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை தாக்கல் செய்த எதிர்க்கட்சிகள்

சியோல், தென் கொரியாவில் அவசரகால ராணுவ சட்டம் அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டின் அதிபர் யூன் சுக் இயோல் நேற்று அதிரடியாக அறிவித்தார். இது தொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய யூன் சுக் இயோல், வட கொரிய கம்யூனிஸ்ட் படைகளின் அச்சுறுத்தல் காரணமாக தென் கொரியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தேசத்தை பாதுகாப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும், “நமது நாடாளுமன்றம் குற்றவாளிகளின் புகலிடமாகவும், சர்வாதிகாரத்தின் வசிப்பிடமாகவும் மாறியுள்ளது. அவர்கள் நீதித்துறை மற்றும் … Read more

காசா உணவு விநியோக மையம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 4 குழந்தைகள் உயிரிழப்பு

டெல் அவில்: மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள உணவு விநியோக மையம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். காசாவில் உள்ள குடும்பங்கள் தொடர்ந்து ‘மோசமான’ நிலைமைகளை எதிர்கொள்கின்றன என ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டில் சுமார் 1,200 பேரை படுகொலை செய்து, 200-க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாக ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் பிடித்துச் … Read more

கூகுளில் மறுதிருமணம் பற்றி தேடிய இந்திய வம்சாவளி நபர் – மனைவி கொலை வழக்கில் கைது

நியூயார்க், அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் மனஸ்சாஸ் பார்க் பகுதியில் வசித்து வருபவர் நரேஷ் பட் (வயது 33). இவருடைய மனைவி மம்தா காப்லே பட் (வயது 28). நேபாள நாட்டை சேர்ந்த இவர் நர்சாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஜூலை 29-ந்தேதி மம்தா காணாமல் போய் விட்டார். ஆனால், அதுபற்றி கவலைப்படாத நரேஷ், போலீசில் புகார் தெரிவிக்கவில்லை. அதற்கு மாறாக, கூகுளில் மறுதிருமணம் செய்வது பற்றி தேடியுள்ளார். மனைவி மரணம் அடைந்து விட்டால் கடன் என்னவாகும்? மனைவி … Read more

நமீபியாவின் வரலாற்றில் ஜனாதிபதியாக பதவியேற்கும் முதல் பெண்

விண்ட்ஹோக், நமீபியா நாட்டில் கடந்த மாதம் 27-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தென்மேற்கு ஆப்பிரிக்காவின் மக்கள் அமைப்பு கட்சி(SWAPO) சார்பில் போட்டியிட்ட துணை ஜனாதிபதி நெடும்போ நந்தி தைத்வா 57.3% வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் நமீபியாவின் ஜனாதிபதியாக பதவியேற்கும் முதல் பெண் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அதே போல் ஆப்பிரிக்க கண்டத்தின் 2-வது பெண் ஜனாதிபதி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். அதே சமயம், தேர்தல் … Read more

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆக பதிவு

லூஜன், பிலிப்பைன்சில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை ஜெர்மன் புவிஅறிவியலுக்கான ஆராய்ச்சி மையம் இன்று தெரிவித்து உள்ளது. இதனால், ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. தினத்தந்தி Related Tags : நிலநடுக்கம்  Philippines  earthquake  பிலிப்பைன்ஸ் 

தென்கொரியா: அவசரநிலையை நீக்க மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல்

சியோல், கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள தென்கொரியா நாடானது, அமெரிக்கா, ஜப்பானின் கூட்டணி நாடாக உள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள மற்றொரு நாடான வடகொரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. வடகொரியாவோ, ரஷியா மற்றும் சீனா நாடுகளுடன் இணக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இதனால், அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நீண்டகால பனிப்போர் சூழல் காணப்படுகிறது. இந்த நிலையில், வடகொரியாவுடன் சேர்ந்து கொண்டு அரசை முடக்க எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர் என தென்கொரிய அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இதனை தொடர்ந்து நாட்டில் அவசரநிலை … Read more

தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனம்: எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் ஒரே நாளில் வாபஸ்!

சியோல்: தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் எதிர்கட்சிகளின் போராட்டத்தால் அது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைகாட்சி வாயிலாக நேற்று (டிச.03) பொதுமக்களிடம் உரையாற்றிய தென்கொரிய அதிபர் யூன் சாக் யோல் நாட்டில் வடகொரிய ஆதரவாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காகவும், அரசுக்கு எதிரான சக்திகளை ஒடுக்குவதற்காகவும் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக அறிவித்தார். 50 ஆண்டுகளில் தென்கொரியாவில் அவசரநிலை சட்டம் அமல்படுத்தப்பட்டது இதுவே முதல்முறை. இந்த அவசரநிலை சட்டத்துக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 190 எம்.பி.க்கள் வாக்களித்தனர். … Read more

பல விஷயங்களை முயற்சிக்கும் ஆய்வுக் கூடம் இந்தியா: மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கருத்தால் சர்ச்சை

வாஷிங்டன்: ‘‘பல விஷயங்களை முயற்சிக்கும் ஆய்வுக் கூடம் இந்தியா’’ என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் சமீபத்தில் அளித்த ரேடியோ பேட்டியில் கூறியிருப்பதாவது: சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி போன்ற பல கடினமான விஷயங்களில் முன்னேற்றம் காணும் நாட்டுக்கு உதாரணமாக இந்தியாவை கூறலாம். இந்திய அரசு போதிய அளவில் வருவாய் ஈட்டி நிலைத்தன்மையுடன் உள்ளது. அதன் காரணமாக, இன்னும் 20 ஆண்டுகளில் மக்கள் சிறந்த நிலைக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளன. பல … Read more

துணைத் தூதரகத்தில் அத்துமீறல்: இந்திய தூதருக்கு வங்கதேசம் சம்மன் – திரிபுராவில் நடந்தது என்ன?

டாக்கா: திரிபுராவின் அகர்தலாவில் உள்ள வங்கதேச துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த அத்துமீறல் தொடர்பாக விளக்கம் அளிக்க இந்தியத் தூதருக்கு வங்கதேச அரசு சம்மன் அளித்துள்ளது. இதையடுத்து, வங்கதேசத்துக்கான இந்திய தூதர் பிரனாய் வெர்மா, “வங்கதேசத்தின் வெளியுறவுத் துறை செயலர் ரியாஸ் ஹமிதுல்லாவை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரனாய் வெர்மா, இந்தியா – வங்கதேசம் இடையே பரந்த பன்முக உறவு உள்ளது. அதனை ஒரே ஒரு விஷயமாக சுருக்க முடியாது. மின் விநியோகம், அத்தியாவசியப் பொருட்களுக்கான இறக்குமதி … Read more

'பணய கைதிகளை விடுதலை செய்யவில்லையென்றால்…' – ஹமாசுக்கு கெடு விதித்த டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன், காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது. அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. … Read more