ஸ்பெயினில் மீண்டும் தொடங்கியது காளைப் பந்தயம்.. முதல் நாள் பந்தயத்தின் போது மூவர் காயம்..!
கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்பெயினின் புகழ்பெற்ற காளை பந்தயம் மீண்டும் தொடங்கியுள்ளது. பம்ப்லோனா பகுதியில் குறுகிய வீதியில் ஓடிய காளைகளை வெள்ளை உடை அணிந்தவர்கள் துரத்திச் சென்றனர். சுமார் 800 மீட்டர் தூரத்துக்கு ஓடிய காளைகள் போட்டி நடைபெறும் மைதானத்துக்குள் நுழைந்தன. முதல் நாள் நடைபெற்ற பந்தயத்தின் போது மூவர் காயமடைந்தனர். Source link