டெஸ்லா அதிகாரியுடன் ரகசிய உறவு… 9 வது முறையாக தந்தை ஆனார் எலன் மஸ்க்!

டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தும் விவகாரத்தில் உலகமே திரும்பி பார்த்த எலன் மஸ்க்கின் பக்கம் அண்மை காலமாக ஊடகங்கள் தங்களது கழுகு பார்வையை செலுத்தி வருகிறது. சமீபத்தில் அவரது முதலாவது வாரிசான சேவியர் மஸ்க் தனது பெயரை மாற்றிக்கொண்டு, பாலினத்தையும் மாற்றிக்கொண்டார். பின்னர் அவரது தந்தையுடனான உறவைs முறித்துக்கொள்வதாக சேவியர் தெரிவித்தார். இதனால் சில காலம் அவரது பேச்சு இணையத்தில் சுற்றி வந்தது. பின்னர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விமானத்தில் குழுவின் பெண் பணியாளரிடம் எலன் மஸ்க் தன் … Read more

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகல்: பின்புலம் என்ன?

லண்டன்: சொந்தக் கட்சியிலே எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய பிரதமரை கட்சித் தேர்ந்தெடுக்கும் என்றும், அதுவரை காபந்து பிரதமராக நீடிப்பதாகவும் அறிவித்தார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டை வழிநடத்துவார் என்று தங்களுக்கு நம்பிக்கையில்லை எனக் கூறி அந்நாட்டின் நிதியமைச்சர் ரிஷி சுனக், சுகாதார அமைச்சர் ஷாஜித் ஜாவேத் ஆகியோர் நேற்று பதவி விலகினர். இதனையடுத்து நாட்டின் புதிய நிதியமைச்சராக நதீம் ஜஹாவி நியமிக்கப்பட்டார். ஆனால், … Read more

வெள்ளத்தில் சிக்கி 45 நிமிடங்கள் காருக்குள் பரிதவித்த மூதாட்டியை பத்திரமாக மீட்ட போலீசார்.!

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிய காருக்குள் இருந்த 72 வயது மூதாட்டியை போலீசார் பத்திரமாக மீட்டனர். பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் காரை விட்டு வெளியேற முடியாமல் தவித்த அந்த மூதாட்டி அவசர சேவை மையத்தை தொடர்பு கொண்டுள்ளார். 45 நிமிடங்கள் காரில் பரிதவித்த அந்த மூதாட்டியை போலீசார் பாதுகாப்பாக மீட்டு வந்தனர்.       Source link

கடும் வறட்சியால் பஞ்சத்தில் மடியும் மக்கள்: துருக்கியிடம் உதவி கேட்கும் சோமாலியா

அங்காரா: சோமாலியாவில் கடுமையான வறட்சி நிலவுவதைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் ஹசன் ஷேக் முகமது, துருக்கியிடம் உதவ வேண்டி ஆதரவு கேட்டிருக்கிறார். சோமாலிய அதிபர் ஹசன் ஷேஷ் முகமது முதல் முறையாக துருக்கிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கு அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது: ”சோமாலியாவில் நிலவும் கடும் வறட்சி குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டது. துருக்கிய சகோதரர்கள் எங்களுக்கு உறுதுணைபுரிய வேண்டும். அவர்கள் முன்பு செய்த உதவிகளை போல, அவர்களால் முயன்ற உதவியை செய்ய வேண்டும். உங்களது … Read more

UK PM Boris Johnson resigns: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா?

இங்கிலாந்து பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019ஆம் ஆண்டு பதவியேற்றார். பதவியேற்றது முதலே பல்வேறு சர்ச்சைகளில் அவர் சிக்கி வருகிறார். கொரோனா காலத்தில் பெருந்தொற்றை அவர் சரியாக கையாளவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. மேலும், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி பார்ட்டி கொண்டாடியதற்காக போரிஸ் ஜான்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக போரிஸ் ஜான்சன் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். அந்த சமயத்திலேயே அவர் பதவி விலக வேண்டும் என்ற … Read more

பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் போரிஸ் ஜான்சன்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: பிரிட்டனில், போரிஸ் தலைமையிலான அமைச்சரவையில் அடுத்தடுத்து அமைச்சர்கள் ராஜினாமா செய்து வருவதால் பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ய ஒப்பு கொண்டுள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக போரிஸ் ஜான்சன் உள்ளார். கொரோனா காலத்தின் போது, சட்ட விரோதமாக மது விருந்து கொடுத்ததாக, பல புகார்கள் அவர் மீது எழுந்தன. இதையடுத்து, அவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதற்கிடையே, போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியில், அவருக்கு கடும் … Read more

அடுத்தடுத்த ராஜினாமாக்கள், அமைச்சர்களின் அழுத்தங்கள்: பதவி விலகுகிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

லண்டன்: அடுத்தடுத்த ராஜினாமாக்கள், அமைச்சர்களின் அழுத்தங்கள் எதிரொலியாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் பதவி விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நெருங்கிய வட்டாரம் இது குறித்து கூறுகையில், “கடந்த 48 மணி நேரத்தில் பிரிட்டன் ஆளுங்கட்சியில் நடந்துவரும் நிகழ்வுகளைக் கண்டு ‘எதிர்த்துப் போராடுவேன்’ என்று போரிஸ் கூறினார். ஆனால், இப்போது அவரே தான் பதவி விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார். அவர் அக்டோபர் மாதம் வரை … Read more

பல நூறு அடி உயரத்தில் கிரேனில் தொங்கிய ஊழியர் – திகைப்பூட்டும் வீடியோ

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோ நகரில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணியில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். அப்போது ஊழியர் ஒருவர் கிரேனில் சிக்கிக்கொண்டதால் அவர் பல நூறு அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கினார். இதனைத் தொடர்ந்து சக ஊழியர்கள அவரை பத்திரமாக தரையிரறக்கினர். அவருக்கு பலத்த காயம் ஏதும் ஏற்படவில்லை. ஊழியரின் கை கிரேனுடன் சிக்கிக் கொண்டதால் இந்த விபத்து நேர்ந்ததாக கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.  மேலும் படிக்க | அமைச்சர்கள் ராஜினமா… சிக்கலில் இங்கிலாந்து … Read more

பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு ?

பிரிட்டன் அமைச்சரவையில் மேலும் 5 ஜூனியர் அமைச்சர்கள் பதவி விலகியதால், பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் துணை கொறடா கிறிஸ் பின்ஷர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் உள்பட 27 எம்.பி.க்கள் ராஜினாமா செய்தனர். அமைச்சரவை உறுப்பினர்கள் போரிஸ் ஜான்சனை பதவி விலகக் கோரி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. பிரதமர் போரீஸ் ஜான்சன் மீது நம்பிக்கை … Read more

இந்தியாவில் ஒமைக்ரானின் புதிய துணை வகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது – டெட்ரோஸ் அதனோம்

இந்தியாவில் ஒமைக்ரானின் புதிய துணை வகை திரிபு பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், BA.2.75 எனப்படும் அந்த புதிய வைரஸ் பாதிப்பு இந்தியா உட்பட பல நாடுகளில் கண்டறியப்பட்டிருப்பதாகவும், அதனை உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.  ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் முறையே, BA.4 மற்றும் BA.5 ஆகிய வைரஸ்களால் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது என்றார். Source link