ஓசோன் படலத்தில் ராட்சத துளை கண்டுபிடிப்பு… அண்டார்டிகாவை விட ஏழு மடங்கு பெரியது எனத் தகவல்

அண்டார்டிகா கண்டத்தை விட ஏழு மடங்கு அளவில் பெரியதாக ஓசோன் படலத்தில் துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கனடா வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வாட்டர்லூ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், வளிமண்டலத்தில் இரண்டாவது அடுக்கான stratosphere-யில் ராட்சத துளை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டார்டிகா கண்டத்தை விட அளவில் 7 மடங்கு துளை பெரியது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். Source link

அமலாக்கத்துறை சோதனையை அடுத்து விவோ இயக்குனர்கள் தலைமறைவு

பணப்பரிவர்த்தனை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையினர் 44 இடங்களில் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து சீனாவைச் சேர்ந்த விவோ நிறுவனத்தின் இயக்குனர்கள் ஜெங்சென் மற்றும் ஜாங் ஜி ஆகியோர் இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையை அடுத்து விவோ இயக்குனர்கள் தலைமறைவாகி விட்டனர். இதனிடையே விவோ தொடர்பான வழக்கை சட்டத்திற்குட்பட்டு விசாரிக்க வேண்டும் என்றும் சீன நிறுவனம் என்பதால் பாகுபாடு பார்க்கக் கூடாது என்றும் சீன அரசு இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளது. … Read more

பிரிட்டன் அமைச்சர்கள் ராஜினாமா பிரதமர் ஜான்சனுக்கு புதிய சிக்கல்| Dinamalar

லண்டன்:பிரிட்டனில், இந்தியா மற்றும் பாகிஸ்தானை பூர்வீகமாக உடைய இரண்டு முக்கிய அமைச்சர்கள், தங்கள் பதவிகளை திடீரென ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் தவிர, மேலும் இரண்டு அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். இதனால், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு, புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக போரிஸ் ஜான்சன் உள்ளார். கொரோனா காலத்தின் போது, சட்ட விரோதமாக மது விருந்து கொடுத்ததாக, பல புகார்கள் அவர் மீது எழுந்தன. இதையடுத்து, அவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.இதற்கிடையே, போரிஸ் ஜான்சனின் … Read more

சாலையில் சென்ற டிரக் மீது பாய்ந்த மின்னல் – பதைபதைக்க வைக்கும் காட்சிகள்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த டிரக் மீது மின்னல் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் மழை பெய்து கொண்டிருந்த போது சாலையில் சென்ற டிரக் மீது திடீரென மின்னல் பாய்ந்தது. இந்தக் காட்சியை பின் தொடர்ந்து காரில் சென்ற பெண் படம் பிடித்துள்ளார். இந்த சம்பவத்தில் உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், மின்னல் தாக்கியதில் வாகனம் சேதமடைந்தது.  Source link

பாகிஸ்தானிலும் கொட்டுது மழை: 25 பேர் பலி| Dinamalar

கராச்சி-நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, ஏழு குழந்தைகள் உட்பட, 25 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குவெட்டா மாவட்டத்தில், 300 குடிசைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இங்கு ஒரு வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பெண்கள், குவெட்டா புறநகரில் ஒரு வீடு இடிந்து மூன்று பெண்கள், நான்கு … Read more

இலங்கையில் விண்ணை முட்டும் அளவுக்கு மருந்துப் பொருட்கள் விலை உயர்வு – மக்கள் கவலை

இலங்கையில் எரிபொருளை தொடர்ந்து மருந்துப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் கருவிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்து காணப்படுகிறது. உள்ளூர் சந்தையில் மருத்துவ உபகரணங்கள் விலை மூன்று முதல் நான்கு மடங்கு விலை அதிகரித்து விற்கப்படுவதால் மக்கள் திணறி வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துப் பொருட்கள் கையிருப்பு இல்லாததால் தனியார் மருந்தகங்களில், மருந்துகளை வாங்கிக் கொண்டு சிகிச்சைக்காக மக்கள் மீண்டும் அரசு மருத்துவமனைக்கு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.    Source … Read more

இந்தியாவுக்கு முழு விமான சேவை: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிங்கப்பூர்: இந்தியாவுக்கு, அக்., 30 முதல் மீண்டும் முழு விமான சேவை அமலுக்கு வர உள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், கொரோனா கட்டுப்பாடு காரணமாக இரண்டு ஆண்டுகளாக சர்வதேச விமான சேவை பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் பயணியர் விமான சேவை அதிகரித்துள்ளது. இது குறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவுக்கு அக்., 30 முதல்மீண்டும் முழு அளவிலான … Read more

காளி ஆவண பட விவகாரம் | வருத்தம் தெரிவித்தது ஆகா கான் அருங்காட்சியகம்

டொரன்டோ: காளி ஆவண பட விவகாரத்தில் கனடாவில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகம் வருத்தம் தெரிவித்துள்ளது. கனடாவின் டொரன்டோ நகரில் ஆகா கான் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இது இஸ்லாமிய கலை மற்றும் கலாச்சாரத்தை பரப்பி வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் டொரன்டோ மெட்ரோ பாலிடன் பல்கலைக்கழகத்தின் பல்வேறு இன, கலாச்சார பின்னணி உடைய மாணவர்கள் தயாரித்த 18 ஆவணப்படங்களை ஒளிபரப்ப திட்டமிடப்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்தவரும் கனடாவில் வசித்து வருபவருமான லீனா மணிமேகலையின் ‘காளி’ ஆவணப்படமும் இடம்பெற்றது. … Read more

சிறை மீது கிளர்ச்சியாளர்கள் குழு வெடிகுண்டு தாக்குதல்.. 855 கைதிகள் தப்பியோட்டம் – காவலர் உள்பட 11 பேர் பலி.!

நைஜீரியா தலைநகர் அபுஜாவில் சிறை மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி 850-க்கும் மேற்பட்ட கைதிகளை தப்பியோடச் செய்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஜிகாதிகளை விடுவிக்க, போகோ ஹராம் கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் காவல் அதிகாரி உள்பட 11 பேர் உயிரிழந்த நிலையில், 855 கைதிகள் சிறையில் இருந்து தப்பியோடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 300 பேரை மீண்டும் கைது செய்யப்பட்டதாகவும், மீதமுள்ளவர்களை தேடி வருவதாகவும் உள்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Source link

1.36 கோடி டோஸ் தடுப்பூசி: குப்பையில் கொட்டும் கனடா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஒட்டாவா : காலாவதியான 1.36 கோடி ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசியை குப்பையில் கொட்ட உள்ளதாக கனடா அறிவித்துள்ளது. வட அமெரிக்காவைச் சேர்ந்த கனடா ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்ய ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. அதன்படி இரண்டு கோடி டோஸ் தடுப்பூசி பெறப்பட்டது.கடந்த 2021 ஜூன் நிலவரப்படி 23 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்திய வெகு சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. … Read more