1.36 கோடி டோஸ் தடுப்பூசி குப்பையில் கொட்டும் கனடா| Dinamalar

ஒட்டாவா:காலாவதியான, 1.36 கோடி ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசியை குப்பையில் கொட்ட உள்ளதாக கனடா அறிவித்துள்ளது.வட அமெரிக்காவைச் சேர்ந்த கனடா, ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்ய, ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. அதன்படி இரண்டு கோடி டோஸ் தடுப்பூசி பெறப்பட்டது. கடந்த, 2021 ஜூன் நிலவரப்படி, 23 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில், தடுப்பூசி செலுத்திய வெகு சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக கூறப் பட்டது. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் பைசர், மாடர்னா நிறுவனங்களின் … Read more

இந்தியாவுக்கு முழு விமான சேவை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு| Dinamalar

சிங்கப்பூர்:இந்தியாவுக்கு, அக்., 30 முதல், மீண்டும் முழு விமான சேவை அமலுக்கு வர உள்ளதாக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது.தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், கொரோனா கட்டுப்பாடு காரணமாக, இரண்டு ஆண்டுகளாக சர்வதேச விமான சேவை பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது, மீண்டும் பயணியர் விமான சேவை அதிகரித்து உள்ளது. இது குறித்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்தியாவுக்கு, அக்., 30 முதல், மீண்டும் முழு அளவிலான பயணியர் விமான சேவை மேற்கொள்ளப்படும்.தற்போது, … Read more

Beer: என்னது பீர் குடிச்சா சுகர் வராதா?- என்னங்க சொல்றாங்க இவங்க!

குடி குடியை கெடுக்கும் என்று என்னதான் திரும்ப திரும்ப சொல்லப்பட்டு வந்தாலும், உலக அளவில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் வருகிறது. அதுவும் பீர் குடிப்பதென்பது ஏதோ குளிர்பானம் குடிப்பது போன்று மதுபிரியர்கள் மத்தியில் சர்வசாதாரண விஷயமாகிவிட்டது. ஹாட் வகை மதுபானங்கள் எனப்படும் ரம், விஸ்கி உள்ளிட்டவற்றை போன்றே பீரிலும் ஆல்கஹால் கலந்துள்ளதால் இதுவும் உடல் நலத்துக்கு கேடுதான் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்து கொண்டுதான் உள்ளனர். ஆனாலும் பார்களில் தினமும் பீர் … Read more

நெருங்கும் பக்ரீத் பண்டிகை – வங்க தேசத்தில் கால்நடைகளை வாங்க குவிந்த மக்கள்..!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, வங்க தேசம் தலைநகர் டாக்காவில் உள்ள சந்தையில் கால்நடை விற்பனை களைக்கட்டியது. வியாபாரிகள் தாங்கள் வளர்த்த கால்நடைகளை படகுகள் மூலமாகவும், லாரிகள் மூலமாகவும் டாக்காவில் உள்ள சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வந்தனர். பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருப்பதால் கால்நடைகளை வாங்க மக்கள் திரண்டனர். பணவீக்கம் காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கால்நடைகளின் விலை அதிகரித்திருப்பதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். Source link

உக்ரைன் நகரில் உள்ள சந்தையில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 2 பேர் பலி – 7 பேர் படுகாயம்!

உக்ரைனின் கிழக்கு நகரமான ஸ்லோவியன்ஸ்கில் உள்ள சந்தையில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். டான்பாஸை முழுவதுமாக கைப்பற்ற முயற்சிக்கும் ரஷ்ய படைகள், லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் எஞ்சியிருக்கும் ஸ்லோவியன்ஸ்க் நகரை குறிவைத்து தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், சந்தையில் ரஷ்யப் படைகள் ராணுவ பீரங்கிகள் மூலம் நடத்திய தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும் 7 பேர் படுகாயமடைந்ததாகவும் ஸ்லோவியன்ஸ்க் நகர மேயர் வாடிம் லியாக் தெரிவித்துள்ளார்.  Source link

இங்கிலாந்தில் மேலும் இரு அமைச்சர்கள் ராஜினாமா ; பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி

இங்கிலாந்தில் மேலும் இரு அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளதால், பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான, ஆளும் பழமைவாத கட்சியின் துணை கொறடா கிறிஸ் பின்ஷர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, நிதி அமைச்சரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் ராஜினாமா செய்திருந்தனர். அவர்களைத் தொடர்ந்து, தற்போது கல்வித்துறை அமைச்சர் , போக்குவரத்து துறை இணை அமைச்சர் லாரா ட்ரோட்டும் ராஜினாமா செய்துள்ளனர். … Read more

முகக்கவசத்தால் மூடப்பட்ட குழந்தையின் முகம் – வைரல் போட்டோவால் எழுந்த விவாதம்

நியூசிலாந்தில் விமானம் ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில், ஒரு குழந்தையின் முகம் முழுவதும் முகக்கவசத்தால் முடப்பட்டு, கண்கள் வழியாகப் பார்ப்பதற்கு மட்டும் மாஸ்கில் சிறு ஓட்டைகள் இடம்பெற்றிருந்தது. அந்தப் படம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்தப் புகைப்படம் ஜூலை 1-ஆம் தேதி நியூசிலாந்தின் ஆக்லாந்திலிருந்து வெலிங்டனுக்கு புறப்பட்ட விமானத்தில் எடுக்கப்பட்டது. அப்புகைப்படத்தில் பெரியவர்கள் அணியும் முகக்கவசத்தில் மேலே இரு துளைகள் மட்டும் இடப்பட்டு அந்தக் குழந்தைக்கு அணிவித்திருந்தனர். ஜாண்டர் ஓப்பர் மேன் என்ற நபர்தான் அந்தப் … Read more

உக்ரைனுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்ட பிரேசில் மாடல் அழகி ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார்..!

உக்ரைனுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்ட பிரேசில் மாடல் அழகி தலிதா டோ வாலே, ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார். துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற 39 வயதான அவர் கார்கிவ் நகரில் பதுங்கு குழியில் இருந்தபோது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. தலிதாவைக் கண்டுபிடிக்க சென்ற முன்னாள் பிரேசில் ராணுவ வீரர் டக்ளஸ் புரிகோவும் கொல்லப்பட்டார். ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ்க்கு எதிராக போரிட்டு அதனை தனது யூடியூப் சேனலில் ஆவணப்படுத்திய தலிதா டோ வாலே, கடந்த 3 வாரங்களாக … Read more

தொழில் நுட்ப கோளாறால் அடுத்தடுத்து தரையிறங்கிய ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் ; விளக்கம் அளிக்க சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ்

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களில் நேற்று மட்டும் 3 விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நேற்று காலை எரிபொருள் அளவை காட்டும் கருவி வேலை செய்யாததால் அந்நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று கராச்சியில் தரையிறக்கப்பட்டது. பிற்பகலில் மற்றொரு விமானம் நடுவானில், துணை விமானி இருக்கையை ஒட்டியுள்ள ஜன்னல் கண்ணாடியில் விரிசில் ஏற்பட்டதால் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதேபோல் நேற்று மாலை சீனாவிற்கு … Read more

நாசாவின் கேப்ஸ்டோன் விண்கலத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தகவல்

சந்திரனைப் பற்றி ஆராய நாசாவால் விண்ணில் செலுத்தப்பட்ட கேப்ஸ்டோன் விண்கலம் தகவல் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜீன் 28 ஆம் தேதி நியூசிலாந்தில் இருந்து கேப்ஸ்டோன் விண்கலத்தை நாசா விண்ணில் செலுத்தியது. பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்தவுடன் இந்த விண்கலம் ஜுலை 4 ஆம் தேதி சந்திரனை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது. ஆனால், சுமார் 11 மணிநேரத்திற்கு பிறகு அந்த விண்கலத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.   Source link