கரைபுரண்டோடும் வெள்ளத்தில் காருக்குள் சிக்கிய நபரை கயிறுக் கட்டி மீட்ட மீட்புக் குழுவினர்!
சீனாவின் குவாங்டாங் பகுதியில் கரைபுரண்டோடும் வெள்ளத்தில் காருக்குள் சிக்கிய நபரை மீட்புக் குழுவினர், கயிறுக் கட்டி மீட்ட வீடியோ வெளியாகியுள்ளது. சாபா சூறாவளியால் கனமழை பெய்ததை அடுத்து குவாங்டாங் மாகாணம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. ஷாகுவான் நகரில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். அங்கு மீட்புப் பணிகள் தொடரும் நிலையில், வெள்ளம் சூழ்ந்த ஒரு பள்ளியில் சிக்கிய மாணவர்களை மீட்புக் குழுவினர் படகுகள் மூலம் பத்திரமாக மீட்டனர். Source link