நடுவானில் பழுது – ஸ்பைஸ் ஜெட் விமானம் கராச்சியில் தரையிறக்கம்.. விமானத்தில் இருந்த பயணிகள் உயிர்தப்பினர்..!

டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் எரிபொருளை சுட்டும் இன்டிகேட்டர் திடீரென பழுதானதையடுத்து அந்த விமானம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கி விடப்பட்டு 11 மணி நேரம் கழித்து 138 பயணிகள் மாற்று விமானத்தில் துபாய் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே குஜராத் மாநிலம் காண்டலாவில் இருந்து மும்பை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் வெளிப்பகுதியில் உள்ள விண்ட் ஷீட்டர் உடைந்து நொறுங்கியது. நடுவானில் ஏற்பட்ட இந்தப் பழுதால் ஆபத்தில் … Read more

ஈபிள் கோபுரத்தை 60 மில்லியன் யூரோ செலவில் சீரமைக்கும் பணி விரைவில் ஆரம்பம்..!

பிரான்சு நாட்டு தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் கோபுரம் 60மில்லியன் யூரோ செலவில் சீரமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் இந்த கோபுரம் ஆயிரத்து 63 அடி உயரம் கொண்டதாகும். 19ஆம் நூற்றாண்டில் Gustave Eiffel என்பவரால் முழுவதும் இரும்பினை பயன்படுத்தி இந்த கோபுரம் கட்டப்பட்டதாகும். இதனை பார்க்க ஒவ்வொரு வருடமும் 6 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் ஈபிள் கோபுரம் துருப்பிடித்து மோசமான நிலையில் இருப்பதாகவும், … Read more

பாகிஸ்தானில் கொட்டித் தீர்த்த கனமழை.. பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் பலி..!

தென்மேற்கு பாகிஸ்தானில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து, மாகாண பேரிடர் மேலாண்மை வெளியிட்டுள்ள அறிக்கையில், பலுசிஸ்தான் மாகாணத்தில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. ஒரே இரவில் பெய்த மழையில் வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்ததில், 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.  Source link

மியான்மரில் இந்திய வம்சாவளியினரான இரண்டு தமிழர்கள் நெற்றியில் சுட்டுக் கொலை..!

மணிப்பூரில் இருந்து மியான்மரில் குடியேறிய இரண்டு தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆட்டோ ஓட்டுனரான மோகன் மற்றும் வணிகரான அய்யனார் ஆகிய இருவரும் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டிருந்தது.  மோட்டார் சைக்கிள்களில் வந்த மியான்மர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த இருவரையும் நெற்றியில் சுட்டுக் கொன்றதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எதற்காக இந்தக் கொலைகள் நடைபெற்றன என்று விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே பொது மக்கள் கொலையாளிகளைக் கைது செய்ய … Read more

ஐரோப்பியாவில் ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக 130 பேர் கைது.!

ஐரோப்பியாவில் ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக கருதப்படும் 130 கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர் 22 நாடுகள் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் ஐரோப்பா முழுவதும் போலீசார் மனித கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 130 பேரை கைது செய்துள்ளதாக சர்வதேச போலீஸ் ஏஜென்சியான யூரோபோல் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. 10 லட்சம் நபர்கள், 2 லட்சம் வாகனங்கள் கடல், தரை மற்றும் வான் எல்லைகளில் முக்கியமாக ஐரோப்பாவிற்கு செல்லப் பெரிதும் பயன்படுத்தப்படும் பாதைகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இச்சோதனையில் ஆயிரக்கணக்கான சட்டம் … Read more

சிங்கப்பூர் அதிபர் மற்றும் சபாநாயகருக்கு கொரோனா தொற்று

சிங்கப்பூர், சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கப்புக்கு (வயது 67) கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதை அவரே தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவருக்கு லேசான அறிகுறிகள் காணப்படுகின்றனவாம். ஏற்கனவே கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக செலுத்திக்கொண்டு, பூஸ்டர் டோசும் போட்டுக்கொண்ட நிலையில்தான் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகர் டான் சுவான் ஜின்(53) மற்றும் கலாசாரம், சமூகம், இளைஞர்கள் நல மந்திரி டாங்குக்கும் (52) கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த 28 நாட்களில் … Read more

அமெரிக்க செயற்கைக்கோள் நிலவை நோக்கி பயணம்| Dinamalar

வாஷிங்டன் : அமெரிக்கா அனுப்பிய செயற்கைக்கோள் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி, நிலவை நோக்கி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான ‘நாசா’ இரண்டு தனியார் ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து, ‘கேப்ஸ்டோன்’ என்ற 25 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை, நியூசிலாந்தின் மகியா தீவில் இருந்து கடந்த வாரம் அனுப்பியது. பூமியின் சுற்று வட்டப் பாதையை வெற்றிகரமாக அடைந்த செயற்கைக்கோள், நேற்று அங்கிருந்து விலகி நிலவை நோக்கி செல்லத் துவங்கியது. இந்த செயற்கைக்கோள் நான்கு மாதங்களில் … Read more

டெல்லியில் இருந்து புறப்பட்டு தொழில்நுட்ப கோளாறால் கராச்சியில் தரையிறங்கிய விமானம் மீண்டும் துபாய் புறப்பட்டது…!

கராச்சி, டெல்லியில் இருந்து இன்று காலை 138 பயணிகளுடன் துபாய் நோக்கி ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பெயிங் 737 மெக்ஸ் ரக விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில்நுப்ட கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, காலை 9.15 மணியளவில் விமானம் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. பாகிஸ்தான் விமான நிலையத்தில் இந்திய விமானம் தரையிரக்கப்பட்டு அதில் இருந்த பயணிகளுக்கு போதிய வசதிகள் செய்துகொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாற்று விமானம் மும்பையில் … Read more

புர்கினா பாசோ நாட்டில் 34 பேர் சுட்டுக் கொலை| Dinamalar

ஒகடோகோ : புர்கினா பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், அப்பாவி மக்கள், 34 பேர் கொல்லப்பட்டனர். மேற்கு ஆப்ரிக்க நாடான புர்கினா பாசோவில், சமீபகாலமாக அல் – குவைதா, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினர் அப்பாவி விவசாயிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவது அதிகரித்து உள்ளது. பயங்கரவாதிகள், விவசாயிகளை துரத்திவிட்டு, அவர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கின்றனர். இதையடுத்து, இந்தாண்டு ஜனவரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை நீக்கி விட்டு, ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. எனினும், பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் குறையவில்லை. … Read more

இத்தாலியில் 70 ஆண்டுகளில் இல்லாத வறட்சி; 5 பிராந்தியங்களில் அவசர நிலை பிரகடனம்

ரோம், இத்தாலியில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக மோசமான வறட்சி நிலையை அந்த நாடு எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக இத்தாலியின் மிக நீளமான நதியான போ நதியை சுற்றியுள்ள 5 வடக்கு பிராந்தியங்கள் வறட்சியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வறட்சியால் இத்தாலியின் 30 விழுக்காட்டுக்கும் கூடுதலான விவசாய உற்பத்திகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் விவசாயச் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மேசமான வறட்சியை எதிர்கொண்டுள்ள லோம்பார்டி, … Read more