ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சென்ற மினி பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு!

ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் தலிபான்கள் சென்ற மினி பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் தலிபான் 207 அல் பரூக் கார்ப்ஸ் பிரிவை சேர்ந்த பலர் படுகாயமடைந்த நிலையில், தாக்குதல் தொடுத்த மர்ம நபர்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், வீரர்கள், பொதுமக்கள் உள்பட 20 பேர் படுகாயமடைந்ததாகவும் ஹெராத் மாகாண போலீசார் கூறியுள்ளனர். Source link

உயிரியல் பூங்காவிற்கு வந்துள்ள வெள்ளை காண்டாமிருகங்கள்.. ஏராளமான பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வந்து கண்டுகளிப்பு!

40 ஆண்டுகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்காவில் இருந்து மொசாம்பிக் நாட்டில் உள்ள ஜின்னாவே உயிரியல் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள 19 வெள்ளை காண்டாமிருகங்களை பொதுமக்கள் கண்டு ரசித்து மகிழ்ந்து வருகின்றனர். ஆயிரத்து 600 கிலோமீட்டர் தூரம் வரை டிரக்கில் அவை பயணித்து வந்திருப்பதாக பாதுகாவலர் ஒருவர் தெரிவித்தார். வன விலங்குகளை மீட்டெடுப்பதுடன், உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான முயற்சியாகவும் அவை பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டிருப்பதாக பாதுகாவலர் ஒருவர் தெரிவித்தார்.  Source link

போரில் திருப்புமுனை; லிசிசான்ஸ்கில் இருந்து பின்வாங்கும் உக்ரைன் துருப்புக்கள்

கடந்த நான்கு மாத காலங்களாக ரஷ்யா உக்ரைன் போர் தொடர்ந்து வரும் நிலையில்,  முக்கிய திருப்பு முனையாக, உக்ரேனிய இராணுவம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 3), லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ராணுவ ரீதியாக மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நகரமான லிசிசான்ஸ்கில் இருந்து பின்வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாரக்கணக்கான கடுமையான சண்டையைத் தொடர்ந்து உக்ரைன் படைகள் பின்வாங்கியது.  ரஷ்ய பாதுகாப்பு  அமைச்சர் செகேய் ஷோய்கு,  நேற்றே,  லிசிசான்ஸ்க் நகரம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அறிவித்தார். எனினும்  கோரிக்கையை உக்ரைன் அதிபர் … Read more

விடுமுறை நாளில் நேர்ந்த சோகம்.. கடலில் குளித்து கொண்டிருந்த 2 பெண்கள் சுறா தாக்கி உயிரிழப்பு..!

எகிப்தின் ஹூர்ஹடா மாகாணத்தில் உள்ள செங்கடலில் குளித்து கொண்டிருந்த 2 பெண்கள் சுறா தாக்கி உயிரிழந்தனர். ஷஹல் ஹஹ்ரீஸ் எனும் இடத்தில் விடுமுறை நாளான நேற்று நூற்றுக்கணக்கானோர் குளித்து கொண்டிருந்தனர். 600 மீட்டர் தொலைவில் நீச்சல் அடித்து குளித்துக்கொண்டிந்தபோது, சுறா தாக்கியதில் ஆஸ்திரேலியா மற்றும் ருமேனியா நாட்டை சேர்ந்த இரண்டு பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  Source link

வேலை இழந்து பரிதவிக்கும் 12,000 ஐடி ஊழியர்கள்!

ஐடி மற்றும் ஸ்டார்ட் அப் துறையில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்துள்ளதாக க்ரஞ்ச்பேஸ் தெரிவித்துள்ளது. ஐடி மற்றும் தொழில்நுட்ப துறையில் வேலை இழந்தவர்களில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பெரும்பாலானோர் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் என தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பிறகு, இன்னும் சரிவில் இருந்து மீளாத நிறுவனங்கள் நிதி திரட்டுவதில் மிகப்பெரிய சவாலை சந்தித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.  மேலும் படிக்க | Instaவில் இனி வீடியோ அப்லோடு செய்ய முடியாது! – வந்தாச்சு புது ரூல்ஸ்! … Read more

மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரத்தில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து..!

அமெரிக்காவில் மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரத்தில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விடுமுறை கொண்டாட்டத்தை முன்னிட்டு மக்கள் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர். ஏறத்தாழ நான்கு கோடியே 79 லட்சம் பேர் விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நிலையில், கடந்த ஒரு நாளில் 280க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், 2 ஆயிரத்து 751 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

எரிபொருள் தட்டுப்பாடு; போக்குவரத்து முடக்கம் | இலங்கையில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கொழும்பு: இலங்கையில் இன்று (ஜூலை 4) பள்ளிகள் தொடங்கவிருந்த நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மேலும் ஒரு வாரத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. எரிபொருள், உணவுப்பொருள் தட்டுப்பாடு, மின்சார, மருத்துவ சேவையில் சிரமம் என பலவகைகளிலும் அந்நாட்டு மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், இலங்கையில் கடந்த சில நாட்களாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இன்று (ஜூலை 4) பள்ளிகள் … Read more

பயிற்சியில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து.!

2017ஆம் ஆண்டு பயிற்சியில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியிடப்பட்டு வேகமாக பரவி வருகிறது. ஆஸ்திரேலிய கடல் எல்லையில் நடந்த பயிற்சியின் போது எம்.வி. 22 Osprey வகை நவீன ஹெலிகாப்டர், யு.எஸ்.எஸ் கிரீன் பே விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்க முயன்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கடலில் விழுந்து மூழ்கியது. 3 வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 3 வீரர்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இந்நிலையில், … Read more

இந்தியாவின் தேஜஸ் போர் விமானத்தை வாங்க மலேசியா திட்டம்.!

இந்தியாவிடம் இருந்து தேஜஸ் போர் விமானத்தை வாங்க மலேசியா திட்டமிட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தேஜஸ் என்ற இலகுரக போர் விமானங்களை தயாரித்து வருகிறது. 83 தேஜஸ் போர் விமானங்களை தயாரித்து கொடுக்க அந்த நிறுவனத்துடன் இந்திய ராணுவ அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்தநிலையில், மலேசியாவும் தேஜஸ் போர் விமானங்களை வாங்க முன்வந்துள்ளது. விரைவில் மலேசிய குழு இந்தியாவுக்கு வந்து இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. … Read more

ஈராக்கை செந்நிறப் போர்வையால் போர்த்தியது போல் வீசிய மணற்புயல்.!

ஈராக்கை செந்நிறப் போர்வையால் போர்த்தியது போல் வீசிய மணற்புயலால் தலைநகர் பாக்தாத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. எதிர் வரும் வாகனங்கள் புலப்படாத வகையில் மணற்புயல் வீசியது. 5 மாதங்களுக்கு மேலாக ஈராக்கில் மணற்புயல் வீசி வருவதால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சுவாசக் கோளாறு, சறுமப் பிரச்சினைகளுக்கு ஆளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொளுத்தும் வெயிலுடன், மணற்புயலும் சேர்ந்து வீசுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். Source link