இஸ்ரேலில் எரிவாயு கிணறு மீது தாக்குதல் நடத்த முயற்சி

ஜெருசலேம், இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான இயற்கை எரிவாயு கிணறு ஒன்று மத்திய தரைக்கடலில் அமைந்துள்ளது. ஆனால் இந்த எண்ணெய் கிணறு தங்களுக்கு சொந்தமானது என அண்டை நாடான லெபனான் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் நீடிக்கிறது. இந்த நிலையில் லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு நேற்று சர்ச்சைக்குரிய அந்த எரிவாயு கிணறு மீது தாக்குதல் நடத்தும் முயற்சியாக 3 ‘டிரோன்’ களை இஸ்ரேல் வான்பரப்புக்கு அனுப்பியது. எனினும் இதை உடனடியாக … Read more

அர்ஜென்டினாவில் நெருக்கடி; நிதி அமைச்சர் ராஜினாமா| Dinamalar

பியூனோஸ் ஏர்ஸ்-அர்ஜென்டினாவில், டாலருக்கு நிகரான அந்நாட்டின் கரன்சியான, ‘பெசோ’வின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்ததை அடுத்து, அந்நாட்டு நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் அதிகாரப்பூர்வ கரன்சியான பெசோவின் மதிப்பு, டாலருக்கு எதிராக கடும் சரிவை சந்தித்துள்ளதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் இறக்குமதிக்கு தேவையான அமெரிக்க டாலரை திரட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முறைசாரா சந்தையில், டாலருக்கு நிகரான மதிப்பு, 239 பெசோவாக … Read more

டென்மார்க்: வணிகவளாகத்தில் துப்பாக்கிச்சூடு – பலர் படுகாயம்

கோபன்ஹேகன், டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் உள்ள விமான நிலையம் அருகே வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில், அந்த வணிக வளாகத்தில் இன்று திடீரென துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. வணிக வளாகத்திற்கு வந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு திடீரென தாக்குதல் நடத்தினார். இதனால், அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் வணிக வளாகத்தில் இருந்து அலறியடித்து வெளியே ஓடினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் வணிக … Read more

பாக்.,கில் பஸ் கவிழ்ந்து19 பேர் உயிரிழப்பு| Dinamalar

கராச்சி-பாகிஸ்தானில், மலைப் பாதையில் சென்ற பஸ், டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில், 19 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 11 பேர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.நம் அண்டை நாடான பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாதில் இருந்து குவெட்டா நகருக்கு, நேற்று காலை ஒரு பஸ் சென்றது. அப்போது, கன மழை பெய்து கொண்டிருந்தது. பலுசிஸ்தான் மாகாணத்தில், குவெட்டா நகருக்கு அருகே மலைப் பகுதியில் வளைவில் திரும்பியபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பஸ், பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. அதே இடத்தில், 19 … Read more

ரஷியாவில் உக்ரைன் எல்லை அருகே தொடர் குண்டு வெடிப்பு; 3 பேர் உயிரிழப்பு

மாஸ்கோ, உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 4 மாதங்களுக்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைனின் பல நகரங்கள் முற்றிலுமாக சின்னாபின்னமாகி உள்ளன. ஆனாலும் உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து ரஷிய படைகளை எதிர்த்து உறுதியுடன் சண்டையிட்டு வருகின்றனர். இதனிடையே உக்ரைன் வீரர்கள் ரஷிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக ரஷியா அவ்வப்போது குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் எல்லையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள ரஷியாவின் பெல்கோரோட் நகரில் நேற்று … Read more

ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 51 பேர் இலங்கையில் கைது| Dinamalar

கொழும்பு-இலங்கையில் இருந்து மீன்பிடி படகு வாயிலாக, ஆஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக தப்பிச் செல்ல முயன்ற 51 பேரை, இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். நம் அண்டை நாடான இலங்கையில், அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதையடுத்து, இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்லும் முயற்சியில், பலர் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில், கிழக்கு கடல் பகுதியில், இலங்கை கடற்படையினர் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு … Read more

புயலில் சிக்கி உடைந்த கப்பல்கடலில் விழுந்த 27 பேர் கதி?| Dinamalar

ஹாங்காங்-சீனாவில் புயலில் சிக்கி சேதம் அடைந்த கப்பலில் இருந்து கடலில் விழுந்த மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 27 பேரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.நம் அண்டை நாடான சீனாவில் சமீபத்தில் புயல் உருவானது, இதற்கு ‘சாபா’ என பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக கடலின் தென்பகுதியில் கொந்தளிப்பு ஏற் பட்டுள்ளது. புயலில் சிக்கிய ஒரு கப்பலை மீட்க சீன கடற்படையினர் கடும் முயற்சிகள் செய்தனர். கடல் கொந்தளிப்பில் சிக்கி தள்ளாடிய கப்பல் நேற்று முன் தினம் அதிகாலை … Read more

டென்மார்க் | வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் காயம்

கோபன்ஹேகன்: டென்மார்க் தலைநகரான கோபன்ஹேகன் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாகவும். இதில் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அந்த நாட்டு காவல் துறை தொடர்ந்து ட்வீட் செய்து வருகிறது. இந்த துப்பாக்கிச் சூடு ஃபீல்ட்ஸ் ஷாப்பிங் சென்டர் என்ற வணிக வளாகத்தில் நடைபெற்றுள்ளது. இது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர். தற்போது அங்கு பலத்த அளவில் காவல் படையினர் குவிக்கப்பட்டு உள்ளதாகவும் … Read more

வீடு வாங்கலையோ வீடு: தர்பூசணிக்கு பதிலாக வீட்டை விற்பனை செய்யும் சீன ரியல் எஸ்டேட்

பொருளாதார சிக்கல்களால் சீனா மீண்டும் பண்டமாற்று முறைக்கு மாறுகிறதா என்ற கேள்விகள் எழுகின்றன. தற்போது சீனாவில், சொத்து சந்தையில் ஏற்பட்டிருக்கும் அதல பாதாள சரிவு மக்களுக்கு வீடு வாங்கும் ஊக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் ரியல் எஸ்டேட் முதலாளிகளின் நிலை தான் திண்டாட்டமாகிவிட்டது. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாத நிலையில், வேறு வழியில்லாமல், தர்பூசணிகள், பீச் மற்றும் பிற விவசாய பொருட்களின் வடிவில் வீடுகளுக்கு பணம் வாங்கப்படுவதாக சீன அரசு ஊடகத்தை மேற்கோள் காட்டி AFP செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. Chinese … Read more

Sudan protest: சூடானில் ஆட்சி கவிழ்ப்பை எதிர்த்த போராட்டக்காரர்களில் 9 பேர் பலி

சூடானில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய வன்முறை ஒடுக்குமுறையில் 9 பேர் கொல்லப்பட்டனர் சூடான் நாட்டில் 2019ஆம் ஆண்டு சர்வாதிகார ஆட்சி அகற்றப்பட்டது. அதையடுத்து, ஜனநாயகரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த சூழ்நிலையில், கடந்த (2022) அக்டோபர் மாதம் அரசுக்கு எதிராக ராணுவத் தளபதி அப்தெல் ஃபத்தே அல் புர்ஹான் புரட்சியை தொடங்கினார். சூடான் பிரதமர் அப்துல்லா ஹம்தக்கை ராணுவத்தினர் சிறைபிடித்தனர். அதன்பிறகு ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி அப்துல்லா ஹம்தக் பதவியில் … Read more