இந்தியா – இங்கிலாந்து போட்டியில் கோலி – பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்.. அமைதியாக விளையாடும்படி கோலி சைகை..!

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அணி வீரர்கள் விராட் கோலி மற்றும் ஜானி பேர்ஸ்டோ வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 3ஆம் நாள் ஆட்டத்தின் போது, இந்திய வீரர் கோலி, இங்கிலாந்தின் பேர்ஸ்டோ ஆகியோர் பரஸ்பரம் வார்த்தைப் பரிமாற்றத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, கிரீஸில் நிற்கும்படியும், அமைதியாக விளையாடும் படியும் பேர்ஸ்டோவிடம் கோலி சைகையில் காட்டியது வீடியோவில் பதிவானது. Source link

தாக்குதல் கால்பந்து விளையாடவே விரும்புகிறேன் – சென்னையின் எஃப்சி பயிற்சியாளர் தாமஸ் பிரட்ரிக்

9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டிக்காக சென்னையின் எப்சி அணி முழுமையாகத் தயாராகி வருகிறது. இதற்காக வீரர்கள் அனைவரும் ஏற்கனவே சென்னை வந்து விட்டனர். அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ரஃபாவும் சென்னை வந்துவிட்டார். வரும் சீசனுக்கான சென்னையின் எப்.சி. அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஜெர்மனி முன்னாள் முன்கள வீரரான தாமஸ் பிரட்ரிக் நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் கடந்த ஒன்றாம் தேதி சென்னை வந்தார். மேலும் படிக்க | பராக் ஸ்ரீவாஸ் ஒப்பந்தம் மேலும் 3 ஆண்டுகளுக்கு … Read more

தீயிட்டு கொளுத்தப்பட்ட நாடாளுமன்றம்… ஐ.நா. சபை அதிர்ச்சி!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவின் அதிபர் கடாஃபி அண்மையில் மறைந்தார். அவரது மறைவுக்கு பிறகு அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. தற்போதைய அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்துவரும் நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் உச்சகட்டமாக டாப்ரக் நகரில் அமைந்துள்ள லிபிய நாட்டின் நாடாளுமன்றத்தை பொதுமக்கள் சூறையாடி உள்ளனர். அலர்கள் அத்துடன் நில்லாமல், நாடாளுமன்ற கட்டடத்துக்கும் அவர்கள் தீ வைத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படை வீரர்களை போராட்டக்காரர்கள் … Read more

ஆஸ்திரேலியாவில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட குதிரை குட்டிகள் உள்ளிட்ட கால்நடைகள் படகுகள் மூலம் மீட்பு.!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், வெள்ளத்தில் சிக்கி கொண்ட குதிரை குட்டிகள் உள்ளிட்ட கால்நடைகள் படகுகள் மூலம் மீட்கப்பட்டன. தொடர் கனமழையால் சிட்னி நகரம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு வெள்ள பாதிப்புகள் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.  Source link

கம்பளிப்பூச்சி சாக்லேட் செம டேஸ்ட்: சிற்றுண்டிகளாக மாறும் பூச்சிகள்

சைவ உணவோ அல்லது அசைவ உணவஓ, உணவே மருந்து என்பது உலகம் உணர்ந்த உண்மை. அசைவ உணவே சிறந்தது என பெரும்பாலானவர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்தாலும், சைவ உணவுக்காரர்கள் மட்டும் தங்கள் தரப்பை சொல்லாமல் விட்டு விடுவார்களா என்ன? சைவமோ அசைவமோ எதுவாக இருந்தாலும், உணவு உட்கொள்ளலின் அடிப்படை உயிர்வாழ்தலே. உயிர் வாழ்தல் என்ற அடிப்படை விசயம் முடிவடைந்த பிறகு, உணவின் சுவை, ஊட்டச்சத்து, ஆரோக்கியம், உடல்நலன் என பல்வேறு பரிமாணங்கள் உணவைப் பற்றி பட்டியலிடப்படுகின்றன. வகைவகையாய் … Read more

எத்தியோபியா- சென்னை இடையே நேரடி விமான சேவை தொடக்கம்..!

கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோபியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவிற்கும், சென்னைக்கும் இடையேயான நேரடி விமான சேவை இன்று துவங்கப்பட்டது. இந்தியாவில், டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸின் நேரடி விமான சேவை வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் சென்னையில் இருந்து வாரத்திற்கு 3 நாட்கள் எத்தியோபியாவிற்கான நேரடி விமான சேவை துவங்கப்பட்டது. Source link

நியூயார்க்கில் 29வது மாடியில் இருந்து தவறி விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு.!

அமெரிக்காவின் நியூயார்க்கில் 29வது மாடியில் இருந்து தவறி விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழந்தான். வீட்டின் ஜன்னல் வழியாக கீழே விழுந்த சிறுவனின் உடல் மூன்றாவது மாடியில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவனை காப்பாற்ற அவரது தந்தை பெரும் முயற்சி எடுத்தும் பலனளிக்கவில்லை. தகவலறிந்து விரைந்த மீட்புக்குழுவினர், சிறுவனை மீட்டு உடனடியாக ஹார்லெம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  Source link

வெள்ளத்தில் தத்தளிக்கும் சிட்னி

சிட்னி: ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அரசு அறிவுரை வழங்கியுள்ளது. மேற்கு சிட்னியில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்ததால் அங்கு கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. வரும் நாட்களில் மழை அதிகமாக பெய்யும் என்பதால் சுமார் பத்தாயிரம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அரசு தரப்பில், “இது வாழ்க்கைக்கு அச்சுறுத்தலான அவசர நிலை. … Read more

சாலையோர மலைப் பள்ளத்தாக்கில் தலைக்குப்புற கவிழ்ந்த பேருந்து.. 20 பயணிகள் உயிரிழப்பு..!

பாகிஸ்தானில் மலைப் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். ராவல்பிண்டி நகரில் இருந்து குவெட்டா  நகரை நோக்கி 33 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து, கொண்டை ஊசி வளைவின்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மலைப் பள்ளத்தாக்கில் தலைக்குப்புற கவிழ்ந்தது.  Source link

சீனாவின் தெற்கு கடற்கரை பகுதியை தாக்கிய சாபா சூறாவளி புயல்.. விமானங்கள் ரத்து

தென் சீனக் கடலின் மத்தியப் பகுதியில் உருவான சாபா புயல், சீனாவின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட குவாங்டாங் மாகாணத்தில் கரையை கடந்த நிலையில், அங்கு கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்றடித்து வீசிய சூறாவளி காற்றால் பல மாகாணங்களில் பலத்த மழை பெய்தது. ஹைனானில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்த்த மழையால், சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு வீரர்கள் குவிக்கப்பட்டு மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மோசமான … Read more