ஹஜ் பயணம் – மெக்காவில் சிறப்பு ஏற்பாடுகள்

சவூதி அரேபியாவின் புனித நகரான மெக்காவில் 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.  கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக புனித ஹஜ் பயணத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், இம்முறை அதில் ஓரளவு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு சுமார் ஒரு மில்லியன் முஸ்லிம்கள் மெக்காவிற்குப் பயணம் மேற்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து புனித யாத்திரைக்கு வருவோர் 72 மணி நேரத்துக்கு முன்பாக கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழும், தடுப்பூசி … Read more

சேவையை நிறுத்திய கருக்கலைப்பு மையங்கள்: தொடரும் அமெரிக்க பெண்கள் போராட்டம்

டெக்சாஸ்: அமெரிக்காவில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து டெக்சாஸ் மாகாணத்தில் கருக்கலைப்பு நிலையங்கள் தங்களது செயல்பாட்டை நிறுத்தியுள்ளன. அமெரிக்காவில் அண்மையில் கருக்கலைப்பு செய்வதற்கான அரசியல் சாசன உரிமையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யப்பட்டது. கருக்கலைப்புக்கு தடை விதிப்பது குறித்து அந்தந்த மாகாண அரசுகளே முடிவு செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால், கருக்கலைப்பை அனுமதிக்கும் மாகாணங்களுக்கோ அல்லது அண்டை நாடுகளுக்கோ செல்ல விரும்பும் தங்களின் ஊழியர்களுக்கு விடுப்பு, பயணச் செலவு … Read more

வெள்ளத்தில் மிதக்கும் சிட்னி – வீடுகளை விட்டு வெளியேற உத்தரவு!

சிட்னியில் பெய்து வரும் கனமழை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொது மக்கள் தங்கள் வீடுகளை உடனடியாக காலி செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் பெய்து வரும் கனமழை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், சிட்னியில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீடுகளை உடனடியாக காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர் கனமழையால், சிட்னி நகரம் முழுவதும் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் கடுமையான … Read more

இலங்கையில் இருந்து வாழ்வாதாரம் தேடி ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 24 பேர் கைது

வாழ்வாதாரம் தேடி இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடியேற முயன்ற 24 பேரை போலீசார் கைது செய்தனர். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் இருந்து வெளியேறி, அண்டை நாடுகளில் குடியேற மக்கள் முயன்று வருகின்றனர். இந்நிலையில், Talwila பகுதியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் செல்ல பெண்கள், குழந்தைகள் என 24 பேர் கொண்ட கும்பல் தயாராக இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் கைது செய்தனர்.  Source link

இலங்கையில் அனைத்து விமான நிலையங்கள் மூடப்படும் அபாயம் – மக்கள் அதிர்ச்சி

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.   மருத்துவம், பாதுகாப்பு போன்ற அவசர தேவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதால் 90 சதவீத தனியார் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், உள்ளூர் பேருந்து மற்றும் ரயில் சேவையை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், விமான எரிபொருளுக்கும் பற்றாகுறை ஏற்பட்டுள்ளதால், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நாட்டின் முக்கிய விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. Source link

பூமியை நெருங்கும் எவரெஸ்டை விட பெரிய வால் நட்சத்திரத்தினால் ஆபத்து உள்ளதா…

வால் நடத்திரம் என்பது சிறிய சூரியக் குடும்பப் பொருளாகும். வால் நட்சத்திரங்களின் வால் எப்போதும் சூரியனுக்கு எதிர்த் திசையிலேயே காணப்படும். மற்றைய வான்பொருட்கள் போலவே வால் நடசத்திரங்களும் சூரியனைச் சுற்றுகின்றன.   இந்நிலையில், எவரெஸ்டை விட இரு மடங்கு பெரிய அளவிலான வால் நட்சத்திரம் ஒன்று ஜூலை 14 அன்று பூமிக்கு மிக அருகில் வரும் என கூறப்பட்டுகிறது. பூமியை நோக்கி மிக வேகமாக வந்து கொண்டிருக்கும் இந்த வால் நட்சத்திரத்திற்கு C/2017 K2 (PANSTARRS) அதாவது K2 … Read more

லிபியாவில் போராட்டம்: அரசு அலுவலகங்களுக்கு தீ வைப்பு

திரிபோலி: லிபியாவில் கடந்த சில நாட்களாக அரசை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் வெள்ளிக்கிழமை லிபியாவில் ஆளும் அரசி எதிர்த்து அரசு அலுவலங்களில் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதற்கிடையில் லிபியாவில் அமைதி ஏற்பர ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து லிபியாவுக்கான ஐ. நா அதிகாரி கூறும்போது, “ அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மக்களின் உரிமை மதிக்கப்பட வேண்டும் … Read more

கருக்கலைப்பு பற்றிய பயண விபரங்கள் கூகுளில் நீக்கம்

அமெரிக்காவில் கருக்கலைப்புக்காக மருத்துவமனை சென்ற தகவல், இருப்பிட பயண விபரங்களில் இருந்து நீக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. மாகாண எல்லை தாண்டி சென்று கருக்கலைப்புக்காக செல்லும் பெண்களின் மின்னஞ்சல்கள், இருப்பிட தகவல் விபரம், இணைய தேடல் உள்ளிட்டவை பயன்படுத்தி தங்களது நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடரப்படலாம் என கருதி முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. தேடுபொறியில் யாரேனும் எடை குறைப்பு மருத்துவமனை, போதை மறுவாழ்வு மையத்துக்கு சென்றிருந்தது தெரிந்தால், அந்த தகவலும் நீக்கப்படும் என்றும் கூகுள் … Read more

முத்தமிட்டு முதலையை மணந்த மேயர் – மெக்சிகோவில் விநோதம்

உலகெங்கிலும் விநோத செயல்கள் அரங்கேறுவது உண்டு. சம்பிரதாயம் என்று கூறி மனிதனுக்கும் கழுதைக்கும் திருமணம், மனிதனுக்கும் தவளைக்கும் திருமணம் என ஏகப்பட்ட விஷயங்கள் அப்படி நடக்கும்.  அதேசமயம் ஆபத்தான விலங்குகளிடம் மனிதர்கள் அந்த சம்பிரதாயத்தை காண்பிக்கமாட்டார்கள். ஆனால் மெக்சிகோவல் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. மேலும் படிக்க | அமீரகத்திலிருந்து தாயகம் திரும்பிய நபர் உயிரிழப்பு: காத்திருந்த குடும்பத்தினர் சோகத்தின் உச்சியில் மத்திய மெக்சிகோவில் இருக்கும் சான் பெட்ரா  ஹவுமெலுலா என்ற நகரத்தின் மேயராக இருப்பவர் விக்டர் ஹ்யூகோ … Read more

வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகள் அளிக்கப்படும் – இலங்கை குடிவரவு மற்றும் குடியேற்றத்துறை

நிதி நெருக்கடி காரணங்களால் வாரத்தில் திங்கட்கிழமை  மட்டும் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகள் அளிக்கப்படும் என இலங்கை குடிவரவு மற்றும் குடியேற்றத்துறை அறிவித்துள்ளது. Matara, வவுனியா, கண்டி பாஸ்போட் அலுவலகங்களில் 100 பேருக்கு மட்டுமே சேவைகள் வழங்கப்படும் என்றும், சேவைகள் பெற விண்ணப்பதாரர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 60 நாட்களுக்கு முன்பதிவு செய்யதவர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் வெளிநாடு வேலை உள்ளிட்ட அவசர பயணம் மேற்கொள்வோர் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை வாட்ஸ் அப் மூலம் பெற எண்கள் … Read more