வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 5 ஆண்டு விசா- இலங்கை அரசு

கொழும்பு, 5 ஆண்டு விசா வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுக்க சர்வதேச நாடுகளின் உதவியுடன் திவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, அந்த நாட்டு அரசு. இதன் ஒரு பகுதியாக இலங்கையில் அன்னிய நேரடி முதலீடுகளை அதிக அளவில் ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக முதலீட்டாளர்களுக்கு 5 ஆண்டு விசாக்களை வழங்கும் திட்டத்தை தொடங்கி உள்ளது. தற்போதைய நிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கான விசாக்களை பெறுவதற்கு ஆண்டுதோறும் மிகப்பெரும் நடைமுறைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. … Read more

விவசாயிகளுக்கு வழங்கும் மானியத்தை எதிர்த்து அமெரிக்க எம்.பி.,க்கள் பைடனுக்கு கடிதம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்-விவசாயிகளுக்கு இந்தியா அதிக மானியம் அளிப்பதை தடுத்து நிறுத்த, உலக வர்த்தக அமைப்பில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, எம்.பி.,க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.அமெரிக்க பார்லிமென்ட் எம்.பி.,க்கள் டிரேசி மான், ரிக் கிராபோர்டு உட்பட, 12 எம்.பி.,க்கள், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் கூறியுள்ளதாவது:உலக வர்த்தக அமைப்பு விதிகளின்படி, எந்த ஒரு நாடும் தன் நாட்டில் விவசாயிகள் செய்யும் உற்பத்தியில், 10 … Read more

எதிர்ப்புக்கு மத்தியில் மியான்மர் வந்தார் சீன வெளியுறவு மந்திரி

பர்மா, மியான்மரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முதல் முறையாக சீனாவின் வெளியுறவு மந்திரி வாங் யி வருகை தந்துள்ளார்.இதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மியான்மரில் அமைதி முயற்சிகளை மீறுவதாக உள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி உள்ளனர். சீனா தலைமையிலான லங்காங்-மெகாங் ஒத்துழைப்பு குழு கூட்டம், மியான்மர் நாட்டில் உள்ள பாகன் நகரில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மீகாங் டெல்டா பகுதி நாடுகளான மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா மற்றும் வியட்நாம் ஆகிய … Read more

ரஷ்ய அரசு கட்டடத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு| Dinamalar

மாஸ்கோ:ரஷ்யாவில் அரசு கட்டடத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பியோடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது போர் தொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யா அரசு கட்டடங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசுவது அதிகரித்து வருகிறது.நேற்று ரஷ்யாவில், நிஸ்னி நோவ்கோராட் நகரில் உள்ள மத்திய பாதுகாப்பு சேவைகள் கட்டடம் மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பியோடினார். ‘தீப்பற்றிய பெட்ரோல் பாட்டில் கட்டடத்திற்குள் விழுந்த போதும் … Read more

கருக்கலைப்பை அங்கீகரிக்க ஆஸி.,யில் மெகா பேரணி| Dinamalar

மெல்போர்ன்:அமெரிக்காவில் மாகாண அரசுகள் கருக்கலைப்புக்கு தடை விதிக்கலாம் என சமீபத்தில் வந்த தீர்ப்பை எதிர்த்தும், தங்கள் நாட்டில் கருக்கலைப்புக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரியும் ஆஸ்திரேலியாவில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. அமெரிக்காவில், ‘கருக்கலைப்பு செய்வது சட்ட விரோதம் அல்ல’ என, 1973ல் தீர்ப்பு வழங்கப் பட்டது. இதை கடந்த வாரம் ரத்து செய்த உச்ச நீதிமன்றம், ‘கருக்கலைப்புக்கு தடை விதித்து மாகாண அரசுகள் சட்டம் இயற்றலாம்’ என, தீர்ப்பளித்தது.’இது அமெரிக்க பெண்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல்’ என, … Read more

திடீர் நிலச்சரிவில் ராட்சத பாறைகள் வாகனங்கள் மீது விழுந்தன.. ஒன்றோடு ஒன்று மோதிக் கிடக்கும் வாகனங்களில் சடலம் கண்டெடுப்பு..!

துருக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவு பேரிடரில் ராட்சத பாறைகள் உருண்டு சாலையில் விழுந்ததில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின. சாலையில் வழக்கம் போல் சென்ற சரக்கு வாகனங்கள், கனரக லாரிகள், டிரக், கார் உள்ளிட்ட வாகனங்கள் மீது பாறை மழை பொழிந்தது போல் பாறாங்கற்கள் விழுந்தன. ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி கிடந்த வாகனங்களில் இருந்து சடலம் மீட்கப்பட்ட நிலையில், தொடர் மீட்பு பணி நடைபெறுகிறது. Source link

டெலாவேர் விரிகுடா கடற்கரை பகுதிகளுக்கு வந்த குதிரைலாட நண்டுகள்.. பொதுமக்கள் வெகுவாக கண்டு ரசிப்பு..!

அமெரிக்காவின் டெலாவேர் விரிகுடா கடற்கரைப்பகுதிகளுக்கு ஏராளமான குதிரைலாட நண்டுகள் வந்திருப்பதை பார்வையாளர்கள் கண்டு ரசித்து வருகின்றனர். அதிக அலை இருக்கும் பகுதியில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதற்காக ஆண்டு தோறும் மே மற்றும் ஜூன் மாதங்களில் டெலாவேர் விரிகுடா கடற்கரை பகுதிகளுக்கு குதிரைலாட நண்டுகள் வருவது வழக்கம். அவை குறைவான ஆழம்கொண்ட மணற்பாங்கான அல்லது சேற்றுப்பாங்கான பகுதியில் தான் பெரும்பாலும் இனப்பெருக்கம் செய்கின்றன. 450 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த உயிரினங்கள் வாழ்ந்து வரும் சூழலில் இவை கடல் … Read more

ஒமைக்ரானின் துணை வகைகளால் அதிகரித்து வரும் கொரோனா.. வயதானோர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தல்..!

ஒமைக்ரானின் துணை வகைகளான பி.ஏ.4 மற்றும் பி.ஏ.5 வைரஸ்களின் பரவல் காரணமாக இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் எண்ணிக்கை ஒரே வாரத்தில் 32 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 25-ம் தேதி வரையிலான ஒருவார கால கட்டத்தில் இங்கிலாந்தில் 23 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் பி.ஏ.4 மற்றும் பி.ஏ.5 வைரஸ்களின் பாதிப்பு 5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு உறுதியாகி இருப்பதாக தேசிய புள்ளி விவரங்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் வடக்கு அயர்லாந்தில் 25-ல் … Read more

பாகிஸ்தானில் 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரிப்பு.!

பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில் ஜூன் மாதத்தில் அந்நாட்டின் பணவீக்கம் 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 21.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிக பணவீக்கம், சரிந்து வரும் அந்நிய செலாவணி கையிருப்பு, விரிவடைந்துவரும் நடப்பு கணக்கு பற்றாக்குறை மற்றும் தேய்மானமான நாணய மதிப்பு போன்றவற்றால் பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.  Source link

Monkeypox Symptoms: இங்கிலாந்தில் பாலியல் கிளினிக்குகள் மூலமாக குரங்கு அம்மை நோய்

வைரஸ் நோயால் தற்போது உலகமே அஞ்சிக் கொண்டிருக்கும் நிலையில், பாதிக்கும் வைரஸ்கள் தொடர்பான ஆய்வுகளும், ஆராய்ச்சிகளும், நோயை எதிர்க்கும் முக்கிய கேடயங்களாக மாறுகின்றன.   சனிக்கிழமையன்று தி லான்செட் தொற்று நோய்கள் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், இங்கிலாந்தில் குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் உலகின் பிற பகுதிகளில் பதிவாகிய முந்தைய வைரஸ் வெடிப்பைக் காட்டிலும் வேறுபட்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள பாலியல் சுகாதார கிளினிக்குகளில் கலந்து கொண்ட 54 நோயாளிகளை ஆய்வு செய்த பின்னர், மே 2022 இல் … Read more