வழிபாடு நடத்த வந்தவர்களிடையே மின்வெட்டு தொடர்பாக மோதல்.. 2 பேர் சுட்டுக்கொலை.!

பாகிஸ்தானில், வழிபாடு நடத்த வந்தவர்களிடையே அதீத மின்வெட்டு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம், வன்முறையாக மாறியதில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், 11 பேர் காயமடைந்தனர். லக்கி மார்வாட் மாவட்டத்தில் உள்ள மசூதியில் வழிபாடு நடத்திய பிறகு ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதில், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 வயது சிறுவன் உள்பட 11 பேர் காயமடைந்தனர். Source link

ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் பலி; 19 பேர் காயம்

தெஹ்ரான்: ஈரானின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்; 19 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து ஈரான் அரசு ஊடகம் தரப்பில், “ஈரானி தென்மேற்கு பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியது. ஈரானில் ஹர்மோஸ்கன் மாகாணத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். … Read more

நொடிபொழுதில் நிலநடுக்கத்தை உணர்ந்ததால் மகளை தூக்கி கொண்டு வீட்டை விட்டு ஓடிய தந்தை

நொடிபொழுதில் நிலநடுக்கத்தை உணர்ந்த தந்தை ஒருவர், தனது மகளை தூக்கி கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சிசிடிவி காட்சியை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவில், மேஜையில் அமர்ந்திருந்த மகளுடன் விளையாடி கொண்டிருந்த தந்தை, திடீரென நிலநடுக்கம் வருவதை உணர்ந்து தனது மகளை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வெளியே சென்றார். பின்னர், அவரது மனைவியும் வெளியே வந்த நிலையில், நிலநடுக்கத்தால் வீட்டில் இருந்த பொருட்கள் குலுங்கும் விழும் இந்த வீடியோவை 4 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.  … Read more

குரங்கு அம்மை நோயை ஒழிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம்: உலக சுகாதார அமைப்பு

ஐரோப்பாவிலிருந்து குரங்கு அம்மை நோயை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பாவுக்கான பிராந்திய இயக்குநர் ஹான்ஸ் ஹென்றி கூறும்போது, “ஐரோப்பா குரங்கு அம்மை நோய் பரவலின் மையமாக உள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் தொற்றும் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதுவரை 4,500 குரங்கு அம்மை நோய் தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. உலக அளவில் 31 நாடுகளில் குரங்கு அம்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குரங்கு அம்மை சர்வதேச அளவில் … Read more

ஒடேஷா நகரில் ரஷ்ய படைகள் ஏவுகணைத் தாக்குதல்.. 21 பேர் கொல்லப்பட்டதாக மீட்பு படை தகவல்!

ஒடேஷா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பொழுதுபோக்கு மையத்தில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சிறுவன் உள்பட 21 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ஒடேஷா அருகே உள்ள Sergiyvka டவுனில் அடுக்குமாடி குடியிருப்பு உள்பட இரு கட்டடம் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். ஈடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link

Comet C/2017 K2: பூமியை நோக்கி வேகமாக வரும் மாபெரும் வால் நட்சத்திரம்

எவரெஸ்ட் சிகரத்தை விட இரண்டு மடங்கு பெரிய வால் நட்சத்திரம் நமது சூரிய குடும்பத்தின் உட்பகுதிக்குள் நுழைந்து பூமியை கடக்க உள்ளது. இந்த வானியல் நிகழ்வு இன்னும் சில நாட்களில் நடைபெறவிருப்பது குறித்து வானியலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். C/2017 K2 (PANSTARRS) என்று அறியப்படும் இந்த வால் நட்சத்திரம், முதன்முதலில் 2017 இல் சூரிய குடும்பத்தின் வெளிப்புற பகுதிகளில் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இது சுருக்கமாக K2 என அழைக்கப்படுகிறது.   அந்த நேரத்தில், K2 … Read more

தெற்கு ஈரானில் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்.. அமீரகம் உள்ளிட்ட பல்வேறு அரபு நாடுகளில் அதிர்வு .!

தெற்கு ஈரானில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு நில நடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 3-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 3 ஆக பதிவானதாகவும் நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கித் தவித்த 10க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில், தொடர் மீட்பு பணி நடைபெறுகிறது. அதேநேரம் ஷார்ஜா, துபாய், அஜ்மன், சவுதி அரேபியா, … Read more

ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 292 விமானங்களை வாங்கும் சீனா.. அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனம் ஏமாற்றம்!

சீன விமான நிறுவனங்கள் ஏர்பஸ் விமானங்களை வாங்கும் நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனம் ஏமாற்றமடைந்துள்ளது. சீன அரசுக்கு சொந்தமான China Southern, Air China, Shenzhen Airlines and China Eastern ஆகிய நிறுவனங்கள் நெதர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 37 பில்லியன் டாலர் மதிப்பில் 292 விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதனால் தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக கருதும் அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஏமாற்றமடைந்துள்ளது. அமெரிக்கா … Read more

Russia vs Ukraine: ஸ்நேக் லேண்ட் மீது பாஸ்பரஸ் வெடிகுண்டு வீசுகிறது ரஷ்யா: உக்ரைன்

உக்ரைனில் உள்ள ஸ்நேக் ஐலாண்ட் என்ற தீவில் ரஷ்யா பாஸ்பரஸ் குண்டுகளை வீசியதாக உக்ரைன் குற்றம் சாட்டியிருக்கிறது. இது தொடர்பான செயற்கைக்கோள் படமும் வெளியிடப்பட்டுள்ளது.   ஆனால், உக்ரைனின் குற்றச்சாட்டை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அடியோடு மறுத்துள்ளது. உக்ரைனிலிருந்து தானிய ஏற்றுமதிகளை ஒழுங்கமைக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சியில் ரஷ்யா தலையிடாது என்றும் ரஷ்யா கூறுகிறது. கருங்கடலில் உள்ள மூலோபாய கேந்திரமான ஸ்நேக் ஐலாண்டில் இருந்து மாஸ்கோ தனது படைகளை வாபஸ் பெற முடிவு செய்த நிலையில், தீவில் … Read more

ஊதிய உயர்வு கோரி விமான நிலைய ஊழியர்கள் போராட்டம்.. முடங்கிய பாரீஸ் விமான நிலையம்!

ஊதிய உயர்வு, உள்ளிட்ட நிபந்தனைகளை வலியுறுத்தி பிரான்சில் விமான ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பாரீஸ் விமான நிலையம் முடங்கியது. 6 ஆண்டுகள் சம்பள உயர்வு வழங்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். கொரோனாவுக்கு பின்னர் சர்வதேச பயணங்கள் சகஜ நிலை திரும்பியுள்ள நிலையில், தங்கள் கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என ஊழியர்கள் கோஷம் எழுப்பினர். Source link