இலங்கை கிரிக்கெட் வீரர் மேத்யூஸ்க்கு கொரோனா தொற்று..!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இலங்கை நட்சத்திர வீரர் ஆஞ்சலோ மேத்யூஸ்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. காலேவில் நடைபெற்ற இப்போட்டியில், முதல் இன்னிங்சில் விளையாடிய மேத்யூஸ் 39 ரன்கள் எடுத்தார். அவருக்கு கொரோனா உறுதியான நிலையில், 2வது இன்னிங்சில் விளையாடவில்லை. இதனிடையே இப்போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Source link