பாகிஸ்தானில் 14 மணிநேரத்துக்கு மேலாக நிலவும் மின்தட்டுப்பாடு.. இணைய சேவை முடங்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை..!

பாகிஸ்தானில் 14 மணிநேரத்துக்கு மேலாக நிலவும் மின்தட்டுப்பாடு காரணமாக செல்போன் மற்றும் இணைய சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல் தொலைத்தொடர்பு துறை வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மின் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக, அடுத்த 5 ஆண்டுகளுக்கு இயற்கை எரிவாயு இறக்குமதி செய்வது குறித்து கத்தார் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் தெரிவித்தார். Source link

2023க்கான ஜி20 மாநாட்டை காஷ்மீரில் நடத்துவதற்கு சீனா எதிர்ப்பு..!

2023ம் ஆண்டுக்கான ஜி20 மாநாட்டை காஷ்மீரில் நடத்துவதற்கு பாகிஸ்தானை தொடர்ந்து சீனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய சீன வெளியுறவு செய்தித்தொடர்பாளர் ஜாவ் லிஜியன் காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு நிலையானது என்றும் ஐநா தீர்மானம் வாயிலாக இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்தார்.  Source link

பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருட்களின் விலை 4-வது முறையாக உயர்வு.!

பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருட்களின் விலை 14 முதல் 19 ரூபாய் வரை உயர்த்தப்பட்டதால், ஒரு லிட்டர் பெட்ரோல், அந்நாட்டு மதிப்பின்படி, 248 ரூபாய் 74 பைசாவிற்கும், ஒரு லிட்டர் ஹை ஸ்பீடு டீசல் 276 ரூபாய் 54 பைசாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் அரசு, பிணை எடுப்பு திட்டத்தை மீண்டும் துவங்க, IMF உடன் செய்த ஒப்பந்தத்தின் கீழ்,பெட்ரோலிய பொருட்களின் மீதான வரியை 4-வது முறையாக உயர்த்தியுள்ளது. Source link

'சீனாவுடன் மீண்டும் இணைந்த பிறகே ஹாங்காங்கிற்கு உண்மையான ஜனநாயகம் தொடங்கியது' – ஜி ஜின்பிங்

சீனாவுடன், ஹாங்காங் இணைந்து 25 ஆண்டுகள் முடிவடைவதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் விழா நடைபெறுகிறது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் ஹாங்காங் நிர்வாக தலைவராக ஜான் லீ பதவி ஏற்றுக் கொண்டார். நிகழ்வில் ஜி ஜின்பிங் பேசியதாவது, “சீனாவுடன் மீண்டும் இணைந்த பிறகுதான் ஹாங்காங்கிற்கு உண்மையான ஜனநாயகம் தொடங்கியது. ஹாங்காங் என்றுமே என் மனதில் இருக்கும். தங்கள் தாய் நாட்டுடன் ஹாங்காங் இணைந்த பிறகு ஹாங்காங் மக்கள் தலைவர்களாகிவிட்டார்கள். பல … Read more

இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு – 4 ஆண்டுகளில் 5வது தேர்தல்!

இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு உள்ளது. இதனால், 4 ஆண்டுகளில், 5வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல் நாட்டில், கடந்த 4 ஆண்டுகளாக அரசியல் ஸ்திரமற்ற நிலை நிலவி வருகிறது. அங்கு சித்தாந்த ரீதியில் மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட கட்சிகளின் கூட்டணியை வைத்துக் கொண்டு, 12 ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்தவர், பெஞ்சமின் நேதன்யாகு. இவர் லிகுட் கட்சியின் தலைவர் ஆவார். இஸ்ரேல் நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23 … Read more

அடுக்குமாடி குடியிருப்பின் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல்; 17 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தகவல்

உக்ரைனின் துறைமுக நகரமான ஒடேசாவில் ஒன்பது அடுக்குமாடி குடியிருப்பின் மீது ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டதாக ஒடேசா பிராந்திய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பெல்கோரோட் – டினீஸ்டர் கிராமத்தில் அதிகாலை 1 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் அக்கட்டிடம் உருக்குலைந்து போனது. இதில், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கருங்கடலில் உள்ள பாம்புத் தீவில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறிய மறுநாள் இந்த … Read more

ரஷ்ய படைகள் வசம் சென்றது சிவியரோடோனெட்ஸ்க் நகரம்..! பாதாள அறைகளில் பதுங்கிய உக்ரைனியர்கள் வெளியே வரத் தொடங்கினர்

சிவியரோடோனெட்ஸ்க் நகரை ரஷ்ய படைகள் முழுமையாக கைப்பற்றியதை தொடர்ந்து அங்கு போர் ஓய்ந்ததால், பாதாள அறைகளில் பதுங்கி இருந்த மக்கள் வெளியே வரத் தொடங்கி உள்ளனர். ஒரு லட்சம் மக்கள் வசித்த சிவியரோடோனெட்ஸ்க் நகரம் ரஷ்ய தாக்குதலால் உருக்குலைந்து காட்சியளிக்கிறது. 2 மாதங்களாக குடிநீர், மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு இன்றி தவித்த மக்கள், இடிபாடுகளில் இருந்து தங்கள் உடமைகளை மீட்க பாதாள அறைகளை விட்டு வெளியே வரத் தொடங்கி உள்ளனர். Source link

ராணுவப் படை குவித்தால் பதிலடி தரப்படும் – புதின் எச்சரிக்கை

நேட்டோவில் சுவீடன், பின்லாந்து இணைவது பற்றி ரஷ்யா கவலை கொள்ளவில்லை என தெரிவித்த அதிபர் புதின், ராணுவ படைகள் குவிக்கப்பட்டாலோ, ராணுவ உட்கட்டமைப்பு ஏற்படுத்தினாலோ பதிலடி தரப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பகுதிகளுக்கு அதே அளவிலான அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படும் என்றார்.. Source link

கோமாளிகள் போல் சென்று நோயாளிகளை குதூகலப்படுத்திய டாக்டர்ஸ் ஆஃப் ஜாய் குழுவினர்..!

பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கோமாளிகள் போல் வேடமணிந்து சென்று நோயாளிகளை டாக்டர்ஸ் ஆஃப் ஜாய் என்ற அமைப்புக்குழுவினர் குதூகலப்படுத்தினர். புனித யோவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் கத்தோலிக்க திருவிழாவான சாவோ ஜாவோ-வையொட்டி இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளையும் அவர்கள் நடத்தினர். அவர்களுடன் நோயாளிகளும் இணைந்து பாட்டுப்பாடியும்,  நடமாடியும் மகிழ்ந்தனர்.   Source link