இலங்கையில் கடுமையான தட்டுப்பாடு : எரிபொருள் வழங்க வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டம்..!

தங்களுக்கும் எரிபொருள் வழங்க வலியுறுத்தி இலங்கையில் மருத்துவத்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். கடுமையான தட்டுப்பாடு உள்ளதால், இலங்கையில் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தங்களுக்கும் எரிபொருள் வழங்க வலியுறுத்தி மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவத்துறை ஊழியர்கள் தலைநகர் கொழும்புவில் போராட்டம் நடத்தினர். Source link

சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வழக்கு.. பிரபல பாப் பாடகர் கெல்லிக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை..!

பாலியல் குற்ற வழக்கில், அமெரிக்காவைச் சேர்ந்த பாப் பாடகர் கெல்லிக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. “I Believe I Can Fly” என்பது உள்ளிட்ட பிரபல பாடல்களை பாடிய பாப் பாடகர் ஆர்.கெல்லி, பல பெண்களையும், சிறுமிகளையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டார். 9 மாதங்களுக்கு முன்பு அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Source link

கார், பைக்கை ஒன்றிணைத்து உருவான ஹைபிரிட் மின்சார வாகனம்

இங்கிலாந்தில் கார் மற்றும் இரு சக்கர வாகனத்தை மாடலாக கொண்டு உருவாக்கப்பட்ட ஹைபிரிட் மின்சார வாகனம் பொது மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. நார்தன் லைட் மோட்டார்ஸ் தொடக்க நிலை நிறுவனம் உருவாக்கி உள்ள இலகு ரக வாகனம், ஒருவர் சொகுசாக பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாலையில் வாகனம் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில், கூடுதல் அம்சங்களுடன் வாகனம் விரைவில் வெளிவர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   Source link

சர்வதேச அலைச் சறுக்கு தொடரில் பட்டம் வென்ற பிரேசில் வீரர் மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான ஹவாய் வீராங்கனை.!

சர்வதேச அலைச் சறுக்கு தொடரின் ரியோ ப்ரோ சுற்றில் பிரேசில் வீரர் மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான ஹவாய் வீராங்கனை பட்டம் வென்றனர். பிரேசிலில் உள்ள Saquarema கடற்பகுதியில் நடந்த சர்வதேச அலைச் சறுக்கு தொடரின் 8-வது சுற்று ஆட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஆடவர் பிரிவில் பிரேசில் வீரர் பிலிபே டொலிடோ, பட்டியலில் 10 புள்ளிகள் பெற்று மற்ற வீரர்களை பின்னுக்குத் தள்ளி 4-வது முறையாக பட்டம் வென்றார். மகளிரில் உலக … Read more

பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக சீனாவுக்கு நேட்டோ நாடுகள் கண்டனம்

சீனாவுக்கு நேட்டோ மீதான எதிர்ப்பு மற்றும் ரஷ்யாவுடனான நெருக்கம் பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்குவதாக நேட்டோ மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் கடந்த 28 ஆம் தேதி தொடங்கிய மூன்று நாள் நேட்டோ நாடுகளின் மாநாடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் சீனாவின் செயல்பாடுகள் நேட்டோ கூட்டமைப்புக்கு எதிராக இருப்பதாகவும் நேட்டோ நாடுகளின் பாதுகாப்புக்கும் மதிப்பீடுகளுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் நேற்று வெளியிடப்பட்ட நேட்டோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

உக்ரைன் போரில் காயமடைந்த வீரர்களுக்கு பதக்கங்கள்.!

உக்ரைன் போரில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் வீரர்களுக்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் தங்க பதக்கங்களை வழங்கும்  வீடியோவை ரஷ்ய பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது. மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர், Sergei Shoigu, அவர்களுடன் கலந்துரையாடினார்.  Source link

இஸ்ரேலின் இடைக்கால பிரதமராக யயீர் லபிட் நியமனம்.!

இஸ்ரேலில் நப்தாலி பென்னட் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்த நிலையில், இடைக்கால பிரதமராக வெளியுறவுத்துறை அமைச்சர் Yair Lapid நியமிக்கப்பட்டுள்ளார். 8 கட்சிகளின் கூட்டணியில் ஏற்பட்ட விரிசலை அடுத்து நாடாளுமன்றத்தில் ஆட்சி கலைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டு, பிரதமர் நப்தாலி பென்னட் பதவி விலகினார். அக்டோபர் இறுதியில் 5-வது முறையாக தேர்தல் நடைபெற உள்ளது. அதுவரை காபந்து அரசின் தலைவராக வெளியுறவுத்துறை அமைச்சர் Yair Lapid இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக நப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார். … Read more

சிலியில் நிறுவனம் தவறுதலாக அனுப்பிய 286 மாத ஊதிய பணத்துடன் தலைமறைவான ஊழியர்

சான்டியாகோ: தென் அமெரிக்க நாடான சிலியில் கான்சார்சியோ இன்டஸ்டிரியல் டி அலிமென்டோஸ் (சியால்) நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர் ஒருவருக்கு மாத ஊதியம் 5,00,000 பெசோஸ் (சிலி நாட்டு கரன்சி) ஆகும். இந்திய மதிப்பில் ரூ.43 ஆயிரம். கடந்த மே மாதத்தில் அந்த ஊழியருக்கு தவறுதாக 286 மடங்கு ஊதியம் அவரது வங்கிக் கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்டுவிட்டது. அதாவது 165,398,851 பெசோஸ்கள் (இந்திய மதிப்பில் ரூ.1.42 கோடி) வரவு வைக்கப்பட்டது. இதை … Read more

இலங்கை சட்டசபை தேர்தல்; இந்தியாவிடம் கோரிக்கை| Dinamalar

கொழும்பு-இலங்கையில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஒன்பது மாகாணங்களுக்கான சட்டசபை தேர்தல்களை விரைவில் நடத்த அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அந்நாட்டை சேர்ந்த தமிழர் கட்சிகள் இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன. கடந்த, 2018ல் இலங்கையில் தேர்தல் சீர்திருத்தம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது எழுந்த சட்ட சிக்கல் காரணமாக ஒன்பது மாகாண சட்டசபை தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது வரை அந்த மாகாணங்களுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில், அந்த ஒன்பது மாகாணங்களுக்கு உடனடியாக தேர்தல் நடத்த, … Read more

கணவரின் காம லீலைக்கு உதவி மனைவிக்கு 20 ஆண்டு சிறை| Dinamalar

நியூயார்க்:அமெரிக்காவில், ஏராளமான சிறுமியரை சீரழித்த நிதி நிறுவன அதிபருக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், அவர் மனைவிக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் எப்ஸ்டீன், இவரது மனைவி கெவின் மேக்ஸ்வல். இருவருக்கும் அந்நாட்டின் முன்னாள் அதிபர்கள், மற்றும் வேறு பல நாடுகளின் முக்கிய தலைவர்களுடன் நெருக்கமான நட்பு இருந்துள்ளது.இதைப் பயன்படுத்தி, 17 ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான சிறுமியர், பெண்கள் ஆகியோரை எப்ஸ்டீன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் … Read more