இலங்கை வர்த்தக மந்திரி உடன் இந்திய தூதர் சந்திப்பு

கொழும்பு, இலங்கை தொழில் மந்திரி நலின் பெர்னாண்டோவை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே சந்தித்து பேசினார். இதுகுறித்து இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “இந்திய தூதர் இன்று தொழில் துறை மந்திரி நலின் பெர்னாண்டோவை சந்தித்தார். இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையே வர்த்தக அளவை அதிகரிப்பது, வணிக இணைப்புகளை எளிதாக்குவதற்கான தளங்களை உருவாக்குவது போன்ற இருதரப்பு வர்த்தகத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றி இருவரும் விவாதித்தனர்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த … Read more

இலங்கை சட்டசபை தேர்தல் இந்தியாவிடம் கோரிக்கை| Dinamalar

கொழும்பு:இலங்கையில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஒன்பது மாகாணங்களுக்கான சட்டசபை தேர்தல்களை விரைவில் நடத்த அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அந்நாட்டை சேர்ந்த தமிழர் கட்சிகள் இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.கடந்த, 2018ல் இலங்கையில் தேர்தல் சீர்திருத்தம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது எழுந்த சட்ட சிக்கல் காரணமாக ஒன்பது மாகாண சட்டசபை தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டன. தற்போது வரை அந்த மாகாணங்களுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில், அந்த ஒன்பது மாகாணங்களுக்கு உடனடியாக தேர்தல் நடத்த, … Read more

ராஜஸ்தான் கொலையாளிகளுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு – திட்டவட்டமாக மறுத்த பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜனதா முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மாவை ஆதரித்து, சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட ராஜஸ்தானை சேர்ந்த தையல் கடைக்காரர் ஒருவர், தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவிலும், குறிப்பாக ராஜஸ்தானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கோஸ் முகமது மற்றும் ரியாஸ் அக்தாரி ஆகிய இருவரால் கன்னையா லால் அவரது கடையில் வைத்து கொல்லப்பட்டார். அதன்பின்னர், இந்த படுகொலையை நடத்திய கொலையாளிகள் ராஜ்சமந்த் மாவட்டத்தின் … Read more

ரஷிய ருபிளின் வீழ்ச்சி வணிகங்களை பாதிக்கலாம் – அதிகாரிகள் எச்சரிக்கை

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததன் காரணமாக பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகள் விதித்தன. இதன்காரணமாக ரஷியாவின் ரூபிள் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில்,அமெரிக்க டாலருக்கு எதிராக ரஷியாவின் அந்நிய செலவாணி மதிப்பானது 52.9 ஆக உள்ளது. இது குறித்து ரஷிய பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் மாக்சிம் ரெஷெட்னிகோவ் கூறுகையில், ” கடந்த 7 ஆண்டுகள் இல்லாத அளவில் ரஷியாவின் ரூபிள் மதிப்பு வீழ்ச்சி அடைந்து உள்ளது. இந்த … Read more

Flour as Luxury: வடகொரியாவில் ஆடம்பரப் பொருளாக அந்தஸ்து மாவு

வட கொரியா உணவு நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், மாவு இப்போது ஒரு ஆடம்பரப் பொருளாக மாறிவிட்டது. ஏற்கனவே பல்வேறு சிக்கல்களில் இருக்கும் நாட்டின் நிலைமை மோசமாகிக் கொண்டேயிருக்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட மாவு விலை அதிகம் என்பதால் வடகொரிய மக்களின் வாங்கும் சக்தி, மாவை வாங்க அனுமதிப்பதில்லை என  தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகமே உணவு நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், வடகொரியாவில் மாவு விலை மிக வேகமாக அதிகரித்துள்ளதால், செல்வந்தர்கள் மட்டுமே அதை வாங்க முடியும் என்ற … Read more

பிலிப்பைன்ஸ்: நோபல் பரிசு வென்ற பத்திரிகையாளரின் செய்தி நிறுவனத்தை மூட அரசு உத்தரவு

மணிலா: 2021-க்கான அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பிலிப்பைன்ஸ் நாட்டு இதழாளர் மரியாவின் செய்தி நிறுவனமான ராப்லரரை மூட பிலிப்பைன்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தடைக்கான காரணமாக, வெளிநாட்டு ஊடக விதியை ராப்லர் மீறிவிட்டதாக பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸ் அதிபர் பதவியிலிருந்து ரோட்ரிகோ விலகுவதற்கு ஒரு நாள் முன்னர் இந்த உத்தரவை பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது. எனினும் ராப்லர் செய்தித் தளம் தொடர்ந்து இயங்கும் என்று மரியா உறுதிப்பட கூறி இருக்கிறார். தடை … Read more

விளாடிமிர் புடின் பெண்ணாக இருந்திருந்தால் போரிட்டிருக்க மாட்டார்: பிரிட்டன் PM போரிஸ் ஜான்சன்

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் காரணமாக ஐரோப்பாவும் கடும் சிக்கலில் உள்ளது. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. அதே நேரத்தில், அரசியல் மற்றும் பொருளாதார தடைகளும் விதிக்கப்படுகின்றன. இந்நிலையில், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால், வெறித்தனமான மற்றும் கட்டாயப் போரைத் தொடங்கியிருக்க மாட்டார் என்று கூறியுள்ளார். ஜி-7 உச்சிமாநாட்டின் முடிவில் ஜெர்மனியில் உள்ளூர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ரஷ்ய-உக்ரைன் போருக்கு … Read more

சிலி | ஊழியரின் வங்கிக் கணக்கில் ரூ.43000-க்கு பதிலாக ரூ.1.42 கோடி சம்பளம்; தலைமறைவான விவகாரம்

சாண்டியாகோ: சிலி நாட்டில் ஊழியரின் வங்கிக் கணக்கில் ரூ.43000-க்கு பதிலாக ரூ.1.42 கோடி சம்பளமாக கிரெடிட் செய்யப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை நிறுவனத்திடம் ஒப்படைப்பதாக தெரிவித்த ஊழியர் தலைமறைவாகி உள்ளார். அதனால், இப்போது அந்த நிறுவனம் சட்ட ரீதியாக இந்த விவகாரத்தை அணுக முடிவு செய்துள்ளது. தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று சிலி. அந்த நாட்டில் இயங்கி வரும் சியல் (Cial) என்ற நிறுவனத்தில்தான் இது நடந்துள்ளது. கடந்த மே மாதம் சம்பந்தப்பட்ட ஊழியரின் வங்கிக் கணக்கில் … Read more

சீனாவில் கடும் வெப்ப அலை – திறந்தவெளி நீச்சல் குளத்தில் ஒரே நேரத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்

சீனாவில் கடும் வெப்ப அலை வீசி வருவதால், திறந்தவெளி நீச்சல் குளத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதுவரை இல்லாத வகையில் அங்கு 44 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியிருப்பதால், மின்சார பயன்பாடும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து வெப்பம் நிலவி வரும் நிலையில் நாடு முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. வெப்ப அலை அடுத்த 2 நாட்களுக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Source link

புதின் பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது – பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

ரஷ்ய அதிபர் புதின் பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், புதின் பெண்ணாக இருந்திருந்தால், பைத்தியக்காரத்தனமான, ஆடம்பரமான வன்முறையை நிகழ்த்தி இருக்க மாட்டார் என்று தெரிவித்தார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நச்சுமிக்க ஆண்மைக்கான உதாரணம் என்றும் அவர் கூறினார்.   Source link