“புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது” – போரிஸ் ஜான்சன்

பெர்லின்: “புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது” என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருக்கிறார். உக்ரைன் போர் குறித்து செவ்வாய்க்கிழமை அன்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு போரிஸ் ஜான்சன் அளித்த பேட்டியில், “ரஷ்ய அதிபர் புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால். அவர் அப்படி இல்லை… எனினும் அவர் பெண்ணாக இருந்திருந்தால், பைத்தியக்காரத்தனமான, ஆடம்பரமான வன்முறையை நிகழ்த்தி இருக்க மாட்டார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் என்பது நச்சு மிக்க ஆண்மைக்கான உதாரணம். மக்கள் … Read more

வெள்ளத்தில் சிக்கித் தவித்த விலங்குகளை பத்திரமாக மீட்ட தன்னார்வ குழுவினர்.!

துருக்கியில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவித்த விலங்குகளை தன்னார்வ குழுவினர் பத்திரமாக மீட்டனர். அந்நாட்டின் ஆறு மாகாணங்களில் கனமழை பெய்த்தால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஏராளமான கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், வடக்கு மாகாணமான டஸ்ஸில் தன்னார்வ குழுவினர் இணைந்து படகுகள் மூலம் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கித் தவித்த கால்நடைகளை  மீட்டு வருகின்றனர். Source link

நீர்புகா தன்மை கொண்ட மிதக்கும் வீடுகளை வடிவமைத்த ஜப்பான் நிறுவனம்

மழை வெள்ளத்தால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் வண்ணம், ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று நீர்புகா தன்மைக் கொண்ட மிதக்கும் வீடுகளை வடிவமைத்துள்ளது. இச்சிஜோ கொமுடென் என்ற அந்த நிறுவனம் அமெரிக்க தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சாதாரண வீடு போன்று தரையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த வீடு, வீட்டைச் சுற்றி மழை வெள்ளம் சூழ்ந்தவுடன் தரையை விட்டு மெதுவாக மேலே உயர்ந்து மிதக்கத் தொடங்கிவிடும் என தெரிவித்துள்ளது. தடினமான இரும்புக் கம்பிகள் மற்றும் கேபிள்களால் தரையுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த வீடு, … Read more

இலங்கை – இந்தியா இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து – அமைச்சர் குட் நியூஸ்!

இந்தியா – இலங்கை இடையே சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டு உள்ளதாக இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்து உள்ளார். அண்டை நாடான இலங்கையில், முன்னெப்போதும் இல்லாத வகையில், கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எரிபொருள், மருந்துகள், உணவுப் பொருட்கள், உரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அந்நாட்டு மக்கள் திண்டாடுகிறார்கள். மேலும், விலைவாசி உயர்வு அவர்களை வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், இலங்கை மீன்வளத் துறை அமைச்சரும், தமிழர் கட்சி ஒன்றின் தலைவருமான … Read more

8 வயது சிறுவன் விளையாட்டாக துப்பாக்கியால் சுட்டதில் பெண் குழந்தை பலி..

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், 8 வயது சிறுவன் துப்பாக்கியால் விளையாட்டாக சுட்டதில் பெண் குழந்தை ஒன்று உயிரிழந்தது. பல குற்றவழக்குகளில் தொடர்புடைய ரோடரிக் ராண்டால் (Roderick Randall) தனது மகன், பெண் தோழி, பெண் தோழியின் மூன்று கை குழந்தைகளுடன் விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். ராண்டால் வெளியே சென்ற போது அலமாரியில் இருந்த துப்பாக்கியை எடுத்த அவரது மகன் விளையாட்டாக சுட்டுள்ளான். அவரது பெண் தோழியின் ஒரு வயது பெண் குழந்தையின் உடலை துளைத்து வெளியே வந்த … Read more

30000 வயது மாமூத் கண்டுபிடிப்பு: கனடாவில் உறைந்த உயிரினம்

வட அமெரிக்காவில் மம்மி ஒன்று அங்குள்ள சுரங்கத் தொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இது மாமூத் என்ற விலங்கினத்தின் குட்டியின் மம்மி ஆகும்.   ட்ரொண்டேக் ஹ்வாச்சின் முதியவர்களால் நன் சோ கா என்று பெயரிடப்பட்டது. கனடிய தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் 30,000 ஆண்டுகளுக்கு முன்பு உறைந்த மாமூத் குட்டி ஒன்றின் மம்மியின் (mummified baby woolly mammoth)  எச்சங்களை க்ளோண்டிக் தங்க வயல்களில் கண்டுபிடித்துள்ளனர். யூகோன் அரசாங்கம் மற்றும் Tr’ondek Hwech’in First Nation வெளியிட்டுள்ள செய்திகளின்படி, சுரங்கத் தொழிலாளர்கள் … Read more

சிரியாவில் அல்-கய்தா தொடர்பு குழுவின் மூத்த தலைவரைக் கொன்றது அமெரிக்கப் படை

டமாஸ்கஸ்: சிரியாவில் அல்-கய்தாவுடன் தொடர்புடைய குழுவைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர், அமெரிக்க பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டார். இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புப் படை தரப்பில், “சிரியாவில் இட்லிப் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக அமெரிக்கப் படை தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த தேடுதல் வேட்டை, அல்-கய்தாவுடன் தொடர்புடைய குழுவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அபு ஹமாஸ் அல் ஏமனியை மையமாக கொண்டு இருந்தது. இந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் தனியாக சென்ற அபு ஹமாஸ் மீது … Read more

செவ்வாய் கிரகத்தின் மண்ணை மேலும் ஆழமாக தோண்டி பரிசோதிக்க நாசா முடிவு.!

செவ்வாய் கிரகத்தில் தரையிரக்கப்பட்டுள்ள நாசாவின் கியூரியாசிட்டி மற்றும் பெர்செர்வன்ஸ் ரோவர் விண்கலன்களை கொண்டு அக்கிரகத்தின் நிலப்பகுதியை மேலும் ஆழமாக தோண்டி பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அமினோ ஆசிட் படிமங்கள் செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்தனவா என்பதை கண்டுபிடிக்க உதவும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  புரோட்டீன்கள் உற்பத்திக்கு அமினோ ஆசிட் மிகவும் முக்கியமானது என்றும் அதன்மூலம் என்சைம்கள் உருவாகி உயிர்களுக்கு வடிவம் ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  Source link

உக்ரைன் வணிக வளாகத்தில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல்; 18 பேர் பலி

உக்ரைன் வணிக வளாகத்தின் மீது  ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில், குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர்; 36 பேர் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய நகரமான கிரெமென்சுக்கில் நடந்த இந்த  தாக்குதலுக்கு உலக அளவில் கண்டனம் வலுத்து வருகிறது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் இதை “போர் குற்றம்” என்று அழைத்தார். க்ரெமென்சுக்கில் மாஸ்கோ பொதுமக்களை வேண்டுமென்றே கொன்றதாக உக்ரைன் கூறியது. எனினும் ரஷ்யா இது குறித்து கூறுகையில், அருகிலுள்ள ஆயுதக் கிடங்கைத் தாக்கியதாகவும், மால் … Read more

பணம் தேவைப்படும் சிறு நாடுகளுக்கு யுவான் கரன்சியில் கடன் வழங்க சீனா முடிவு.!

சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க டாலரை தவிர்த்துவிட்டு, பணம் தேவைப்படும் சிறு நாடுகளுக்கு தனது நாட்டு கரன்சியில் கடன் வழங்க முடிவு செய்து, யுவான் நிதித் தொகுப்பு ஒன்றை சீனா உருவாக்கியுள்ளது. இதற்காக சீனாவின் மத்திய வங்கி,சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச தீர்வுகளுக்கான வங்கியுடன் (பிஐஎஸ்) ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிதி தொகுப்பு ஒப்பந்தத்தில் சீனாவுடன் இந்தோனேஷியா, மலேசியா, ((ஹாங்காங்)) சிங்கப்பூர் மற்றும் சிலி ஆகிய 5 நாடுகள் இணைந்துள்ளன Source link