கொலம்பியாவில் சிறைக் கைதிகளிடையே ஏற்பட்ட கலவரத்தில் 51 கைதிகள் படுகொலை.!

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், சிறைக் கைதிகளிடையே ஏற்பட்ட கலவரம், தீவைப்பு சம்பவங்களில் 51 பேர் கொல்லப்பட்டனர். சிறைக் கைதிகளிடையே கலவரம் மூண்டதாக கூறப்படுகிறது. படுக்கை மற்றும் மெத்தைகளுக்கு கைதிகள் தீ வைத்ததில் சிறை முழுவதும் பரவி 51 பேர் உயிரிழந்ததனர். தீ மற்றும் வெட்டுக் காயங்களுடன் 20-க்கும் மேற்பட்ட கைதிகள், சிறை காவலர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த கைதிகளின் உறவினர்கள் கலவர போராட்டத்தில் ஈடுபட்டனர்.  Source link

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானில் கடும் மின் பாற்றக்குறை.. மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்!

நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தானில் கடும் மின் பாற்றக்குறை நிலவி வருவதால், ஆத்திரமடைந்த மக்கள் சாலையில் டயர்களை தீ வைத்து கொளுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் 14 முதல் 16 மணி நேரம் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. தொடர் மின்வெட்டு காரணமாக ஆத்திரமடைந்த கராச்சி நகர மக்கள் முக்கிய சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் போலீசார் … Read more

பாக்.,கில் போலியோ தடுப்பு குழு மீது துப்பாக்கிச் சூடு: மூவர் பலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெஷாவர்: பாக்.கில் ‘போலியோ’ சொட்டு மருந்து தரும் குழு மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு போலீசார் உட்பட மூவர் உயிரிழந்தனர். உலகிலேயே பாக். மற்றும் ஆப்கனில் தான் போலியோ எனும் இளம்பிள்ளை வாத நோய் இன்னும் முற்றிலுமாக ஒழிக்கப்படாமல் உள்ளது. இதனால் பாக். அரசு வீடு வீடாகச் சென்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடும் திட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. ஆனால் சமீபகாலமாக பாக்.கின் வட மேற்கில் உள்ள … Read more

வங்கியைக் கொள்ளையடிக்க முயற்சி செய்த இரண்டு பேரை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படையினர்

கனடாவில் வங்கியைக் கொள்ளையடிக்க முயற்சி செய்த இரண்டு பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அமெரிக்க எல்லை அருகில் உள்ள சானிச் என்னுமிடத்தில் உள்ள ஒரு வங்கியில் இரண்டு பேர் துப்பாக்கியுடன் புகுந்து வாடிக்கையாளர்களை மிரட்டி பணம்கொள்ளையடிக்க முயற்சித்தனர். பாதுகாப்பு படையினர் அவர்களை சுட்டுத் தள்ளினர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 6 போலீசார் காயம் அடைந்தனர். அப்பகுதியில் வெடிகுண்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அக்கம் பக்கம் குடியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர் Source link

13 பேர் பலி; 250 பேருக்கு பாதிப்பு| Dinamalar

அம்மான்: ஜோர்டான் துறைமுகத்தில் கிரேனில் இருந்து அறுந்து விழுந்த ‘டேங்கர்’ வெடித்து விஷவாயு பரவியதில் 13 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட 250 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேற்காசிய நாடான ஜோர்டானின் அக்பா துறைமுகத்தில் குளோரின் டேங்கர்களை கப்பலில் ஏற்றும் பணி நேற்று நடந்தது. அப்போது கிரேனில் இருந்த சங்கிலி அறுந்து ஒரு டேங்கர் கப்பலின் மேல்தளத்தில் விழுந்து வெடித்தது. அதில் இருந்து மஞ்சள் நிற விஷவாயு பரவியதில், அந்த இடத்தில் இருந்த தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். அதில் … Read more

கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ.. 135 ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து நாசம்..!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 135 ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப்பகுதி தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன. ரெட்வுட் சானிட்டரி லாண்ட்ஃபில் அருகே நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பற்றியெரியும் காட்டுத் தீயால் அங்கு சுற்றுச்சூழல் பெரும் மாசடைந்துள்ளது. இந்த காட்டுத்தீயால் கலிபோர்னியாவின் வான்வெளி முழுவதும் அடர் செந்நிறமாக மாறியதுடன் புகை மண்டலங்களாகவும் காட்சியளித்தன. காடுகள் கருகி சாம்பலாகியுள்ள நிலையில், இதுவரை 75 சதவீதக் காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். Source link

உணவு நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு 20 மில்லியன் டாலர் கூடுதல் நிதி – அதிபர் பைடன் அறிவிப்பு.!

உணவு பாதுகாப்பை வலுப்படுத்த இலங்கைக்கு கூடுதலாக 20 மில்லியன் டாலர் நிதி வழங்குவதாக அமெரிக்க அதிபர் பைடன் அறிவித்தார். ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அதிபர் பைடன் நிதியுதவியை அறிவித்ததாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா வழங்கிய நிதி இலங்கையின் உணவு நெருக்கடியை தீர்க்கவும், உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும் பயன்படுத்தப்படும் என பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ட்விட்டரில் தெரிவித்துள்ளார். Source link

கொரோனாவே இன்னும் முடியல, அடுத்து புது ஆபத்தா; அலறவைக்கும் அறிகுறிகள்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்குப் பிறகு, தற்போது ஒரு புதிய நோயின் அச்சுறுத்தல் உருவாகி வருகிறது. அதன்படி பிரிட்டனில் ஒரு புதிய நோய் கண்டறியப்பட்டுள்ளது, அதில் போலியோவின் அறிகுறிகள் மாதிரியில் கண்டறியப்பட்டுள்ளன. பிரிட்டனின் வரலாற்றில் 40 வருடங்களில் முதன்முறையாக இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. இந்த நோய் சரியாக கட்டுப்படுத்தப்படாவிட்டால், கொரோனாவை போன்று உலகின் பிற பகுதிகளுக்கும் பரவும் என நம்பப்படுகிறது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் போலியோவின் அறிகுறிகள் தென்பட்டது கூட்டாளர் இணையதளம் டிஎன்ஏ … Read more

போர் முடிய எத்தனைக் காலமானாலும் உக்ரைனுக்கு ஆதரவு தொடரும்.. ஜி 7 நாடுகள் மாநாட்டுக்கு இடையே தலைவர்கள் உறுதி..!

எத்தனைக் காலம் ஆனாலும் ரஷ்யாவிடமிருந்து உக்ரைனை பாதுகாக்க துணை நிற்போம் என ஜி 7 நாடுகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. ரஷ்யாவுக்கு கச்சா எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாயைத் தடுத்து நிறுத்தவும் உறுதி எடுக்கப்பட்டுள்ளது. ஜி7 மாநாட்டில் ரஷ்யாவுக்கு கடுமையான பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய், தங்கம் இறக்குமதியைத் தடை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கருப்புக் கடல் வழியாக உக்ரைனுக்கு உணவு தானியங்கள் கொண்டு செல்ல உதவவும் ஜி 7 நாடுகள் உறுதியளித்துள்ளது.  … Read more