இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் வெளியேற முயன்ற 47 பேரை மீட்ட இலங்கை கடற்படை வீரர்கள்.!
வாழ்வாதாரம் தேடி இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் வெளியேற முயன்ற குழந்தைகள் உள்பட 47 பேரை இலங்கை கடற்படை வீரர்கள் மீட்டனர். கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கையில் எரிபொருள் தடை உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. கடந்த இரு வாரங்களில் மட்டும் 120-க்கும் மேற்பட்டோர் சிறிய மீன்பிடி படகுகளில் வெளிநாடுகளுக்கு ஆபத்தான கடல் பயணங்கள் மேற்கொண்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர் Source link