பானிபூரி விற்பனைக்கு திடீர் தடை..! வருத்தத்தில் உணவுப் பிரியர்கள்

காத்மாண்டு, நேபாளம் நாட்டின் காத்மாண்டுவில் காலரா பாதிப்பு அதிகரித்து வருவதால் பரவி வருவதால், பானிபூரி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் காலரா நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 12 பேருக்கு காலரா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், உணவகங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்த‌து. அப்போது, லிலித்பூர் மாநகராட்சி பகுதியில், பானிபூரியுடன் வழங்கப்படும் தண்ணீரில் காலரா பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ல‌லித்பூர் மாநகராட்சியில் பானிபூரி விற்பனை செய்ய தடை … Read more

தலையில் தேங்காய் விழுந்ததால் நடுரோட்டில் ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த பெண்! அதிர்ச்சி வீடியோ

கோலாலம்பூர், மலேசியாவில் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த பெண்ணின் தலையில் தேங்காய் விழுந்ததில் அவர் ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்தார். இந்த சம்பவம் அங்கிருந்த கேமராவில் பதிவாகி இணையத்தில் பரவி வருகிறது. புவான் அனிதா என்பவர் சாலையில் தன் மகளுடன் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தார். ஸ்கூட்டரை அவரது மகள் ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்ற ஒரு தென்னை மரத்திலிருந்து தேங்காய் ஒன்று கீழே விழுந்தது. அது அனிதாவின் தலையில் காயத்தை ஏற்படுத்தியது. இதை சற்றும் எதிர்பார்க்காத அவர், … Read more

Economic Sanctions: வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கும் ரஷ்யா

பொருளாதாரத் தடைகளால் சிக்கித் தவிக்கும் ரஷ்யா, 40 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான வெளிநாட்டு கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் தவிக்கிறது. 1917-க்குப் பிறகு முதல் முறையாக, ரஷ்யா வெளிநாட்டுக் கடனை திருப்பிச் செலுத்துவதில் இருந்து தவறிவிட்டது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரால் ஏற்கனவே ரஷ்யா மீது பல தடைகள் இருக்கும் நிலையில், வெளிநாட்டுக் கடனை திருப்பி செலுத்துவதில் சிரமத்தை ரஷ்யா சந்திக்கிறது. இரண்டு பத்திரங்களுக்கான வட்டியாக $100 மில்லியன் தொகையை ரஷ்யா செலுத்த வேண்டும். அதில் … Read more

பார்லி.,க்கு அதிகாரம் தரும் மசோதா இலங்கை அமைச்சரவை ஒப்புதல்| Dinamalar

கொழும்பு:இலங்கை பார்லி.,க்கு அதிக அதிகாரம் வழங்கும் அரசியல் சாசன சட்டத் திருத்த வரைவு மசோதாவுக்கு, அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.கடந்த 2015ல், இலங்கையின் அப்போதைய பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, பார்லி.,யின் அதிகார வரம்பிற்குள் அதிபரை கொண்டு வரும் வகையில், அரசியல் சாசனத்தில் சட்டத் திருத்தத்தை செய்தார். இந்த சட்டத்தை, 2020ல் அதிபர் கோத்தபய ராஜபச்சே ரத்து செய்து, அதிபருக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டத்தை அமல்படுத்தினார். இந்நிலையில், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வரலாறு காணாத நெருக்கடிக்கு, அதிபர் … Read more

ஜெர்மனியில் ஜி-7 மாநாட்டை நிறைவு செய்து ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டார் பிரதமர் மோடி

பெர்லின், ஜெர்மனியில் 48-வது ஜி7 மாநாடு நேற்றும், இன்றும் நடைபெற்றது. அம்மாநாட்டில் கலந்துகொள்ளும்படி இந்திய பிரதமர் மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். சுற்றுச்சூழல், எரிசக்தி, காலநிலை, உணவு பாதுகாப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம் மற்றும் ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஜி7 மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். … Read more

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துப் போராட்டம்.!

கருக்கலைப்புக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, பல்வேறு போராட்டங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், கருக்கலைப்புக்கு ஆதரவான பதாகைகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பினர். இதேபோல், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Source link

Super Earth: பூமிக்கும் மாற்று ரெடி: உயிரினங்கள் வாழ அதிக வளம் கொண்ட கிரகம் சூப்பர் எர்த்

லண்டன்: பூமியை விட சிறந்த கிரகம் விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டது, சூப்பர் பூமி என்று அழைக்கப்படும் சூப்பர் எர்த் எத்தனை பில்லியன் ஆண்டுகள் வாழ முடியும் என்பது தெரியுமா? சூப்பர் எர்த் மீது திரவ நீர் இருப்பது ‘உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்தது’ என்று கூறப்படுகிறது. சூப்பர் எர்த் (Super Earth) வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் அல்லது ஹீலியம் அதிகமாக உள்ளது. எனவே, இந்த கிரகம் 8 பில்லியன் ஆண்டுகளுக்கு வாழக்கூடிய சூழ்நிலைகள் மற்றும் வாழ்விடங்களை வழங்க முடியும். தண்ணீர் இருப்பு … Read more

சிறுமியின் இசைக்கு ஏற்ப வாலை ஆட்டும் பூனை.. இணையத்தில் வெளியான சீன பூனையின் இசை ஆர்வம்!

சீனாவில், சிறுமியின் இசைக்கு ஏற்ப வாலை ஆட்டும் பூனையின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. சீனாவின் வடக்குப் பகுதியில் வசிக்கும் லியு என்பவர் தெருவில் கிடந்த பூனை ஒன்றை எடுத்து வளர்த்து வருகிறார். லியு மகளான 7 வயது சிறுமி, Ruan என்ற இசை கருவியில் இசையை மீட்ட, வளர்ப்பு பூனை அதற்கு ஏற்ப தனது வாலை ஆட்டி இசையை ரசிக்கிறது. Source link

ரஷ்ய தொழிலதிபரின் சூப்பர் சொகுசு படகை சிறைப்பிடித்த அமெரிக்கா..!

ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான சூப்பர் சொகுசு படகை அமெரிக்கா சிறைப்பிடித்துள்ளது. கடந்த மாதம் மெக்சிகோவில் இருந்து ஃபிஜி நாட்டிற்கு வந்த 350 அடி நீளமுடைய அந்த சொகுசு படகு அமெரிக்க அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க அங்கு லவுடோவா துறைமுகத்தில் சிறைப்பிடிக்கப்பட்டது. பின்னர் அரசால் அதனை பராமரிக்க இயலாது என்பதால் அதனை அனுப்பிவிட வேண்டும் என அந்நாட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ஹவாய் வழியாக அமெரிக்காவிற்கு கொண்டுவரப்பட்ட அந்த படகு தற்போது சான்டியாகோ துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் … Read more