ஜி7 மாநாட்டில் உலகத் தலைவர்களுக்கு மோடி பரிசு| Dinamalar

முனிச்: ஜெர்மனியில் நடந்த ஜி7 மாநாட்டில் கலந்து பங்கேற்ற தலைவர்களுக்கு, இந்திய கலைநயத்தை உணர்த்தும் விதமாக தனித்தனியாக பிரதமர் மோடி பரிசளித்து அசத்தினார். ஜப்பான் பிரதமர் பியுமியோ கிஷிடோவுக்கு உ.பி., மாநிலம் நிசாமாபாத்தில் செய்யப்பட்ட கருப்பு மண்பாண்ட பண்டங்களை பரிசாக வழங்கினார். தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ரமபோசாவிற்கு, சத்தீஸ்கரின், ராமாயணத்தை மைய பொருளாக கொண்ட டோக்ரா கலை பொருட்களை பரிசாக அளித்தார். அமெரிக்க அதிபர் பைடனுக்கு , வாரணாசியில் தயாரிக்கப்பட்ட குலாபி மீனாகரி புரூச் மற்றும் … Read more

“ரஷ்ய அதிபர் புடினின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்”.. சீனாவிற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ் எச்சரிக்கை!

ரஷ்ய அதிபர் புடினின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமாறு சீனாவுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேட்டோ உச்சி மாநாட்டிற்காக ஸ்பெயின் செல்லும் வழியில் ஆஸ்திரேலிய பத்திரிகைக்கு பேட்டியளித்த அவர், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஜனநாயக நாடுகளை ஒன்றிணைத்ததாக தெரிவித்தார். 70 ஆண்டுகளாக தனி நாடாக இருக்கும் தைவானை தனி நாடாக ஏற்க மறுத்துள்ளதுடன், தனது நாட்டின் ஒரு பகுதியாக சீனா கருதி வரும் நிலையில் ஆன்டனி அல்பானீஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். Source link

பிரிக்ஸ் கூட்டமைப்பில் ஈரான், அர்ஜென்டினா நாடுகள் இணைய விண்ணப்பம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: பிரிக்ஸ் கூட்டமைப்பில் ஈரான், அர்ஜென்டினா ஆகிய இருநாடுகள் இணைய விண்ணப்பத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த கூட்டமைப்பின், 14வது மாநாடு கடந்த 23ம் தேதி தேதிகளில் சீன அதிபர் ஜிஜிங்பிங் தலைமையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். இந்நிலையில் இக்கூட்டமைப்பில் ஈரான், அர்ஜென்டினா ஆகிய இரு … Read more

காவலராக இருந்த போது கொலை செய்ய உதவியதற்காக 101 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை..

ஜெர்மனியில் நாஜி வதை முகாமில் காவலராக இருந்த போது கொலை செய்ய உதவியதற்காக 101 வயதான முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் விதித்துள்ளது. இரண்டாம் உலகப்போரின்போது 1942 முதல் 1945 ஆண்டு வரை நாஜிக்களின் சக்சென்ஹவுசன் வதை முகாமில் ஜோசப் ஷூட்ஸ் (Josef Schuetz) என்பவர் காவலராக பணியாற்றியபோது 3,518 கொலைகளுக்கு துணைபோன குற்றத்திற்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2 லட்சத்திற்கும் அதிகமானோர் அந்த வதை முகாமில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.  Source link

அமெரிக்காவில் சிலிக்கான் வேஃப்பர்ஸ் தயாரிக்கும் ஆலையை நிறுவுகிறது தைவான்..!

உலகில் செமிகன்டக்டர்கள் மற்றும் சிப்-கள் உற்பத்தியில் தலைசிறந்து விளங்கும் தைவான், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சிலிக்கான் வேஃப்பர்களை தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்குகிறது. இந்த தொழிற்சாலையில் 300 மில்லி மீட்டர் சிலிக்கான் வேஃப்பர்கள் தயாரிக்கப்படும் என்றும் 5 பில்லியன் டாலர் முதலீட்டில் இது தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. Source link

நுபுர் சர்மா விவகாரத்திற்குப் பின் யுஏஇ சென்ற பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அபுதாபி: நுபுர் சர்மா விவகாரத்திற்குப் பிறகு, ஒரு நாள் பயணமாக ஐக்கிய அரபு எமீரேட்ஸ்(யுஏஇ) வந்த பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் ஜயித் அல் நயான் விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றார். ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி, அதனை முடித்து கொண்டு அங்கிருந்து கிளம்பினார். வழியில், ஐக்கிய அரபு எமீரேட்ஸ் முன்னாள் அதிபராக இருந்த ஷேக் காலிபா பின் சயித் அல் … Read more

வெடித்து சிதறிய ரசாயன டேங்கர்… மூச்சுத் திணறிய 200 பேரின் நிலை என்ன?

ஜோர்டனின் அகபா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் கிரேன் மூலம் குளோரின் நிரப்பப்பட்ட டேங்குகள் ஏற்றப்பட்டு கொண்டிருந்தன. அப்போது திடீரென கிரேன் செயலிழந்ததை அடுத்து டேங்க் ஒன்று மேலிருந்து கப்பலின் மீது விழுந்து வெடித்து சிதறியது. துளோரின் நிரப்பப்பட்ட டேங்கர் வெடித்து சிதறியதால் அதிலிருந்து மஞ்சள் நிறத்தில் நச்சு புகை வெளியேறியது. இதில் மூச்சுத் திணறி கப்பல் பணியாளர்கள் 12 பேர் பலியாகினர். மூச்சுத் திணறலுடனும், படுகாயங்களுடன் 250 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை … Read more

அதிபர் ஜோ பைடனின் மனைவி, மகள் உட்பட மேலும் 25 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை.!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி, மகள் உட்பட மேலும் 25 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்து விரிவடைவதன் எதிரொலியாக, ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் மேலும் 25 அமெரிக்கர்கள் சேர்க்கப்படுவதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.   Source link

நேபாளத்தில் பானி பூரி விற்பனைக்கு தடை; காரணம் என்ன தெரியுமா

நேபாளத்தின் காட்மண்டுவில் பானி பூரி விற்பனையை தடை செய்ய மாநாகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை முடிவு செய்தனர். பானி பூரியில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் காலரா பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பிடிஐ தெரிவித்துள்ளது. நேபாளத்தின் சுகாதாரம் மற்றும் மக்கள்தொகை அமைச்சகம் இது குறித்து கூறுகையில், காத்மாண்டு பள்ளத்தாக்கில் புதிதாக மேலும் ஏழு பேர் காலரா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. காத்மாண்டு பெருநகரத்திலும், சந்திரகிரி நகராட்சி மற்றும் புத்தனில்கந்தா நகராட்சியிலும் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக, சுகாதார அமைச்சகத்தின், தொற்றுநோயியல் மற்றும் நோய் … Read more

கொளுத்தும் கோடையில் மின் தட்டுப்பாட்டால் தவிக்கும் ஜப்பான்: விளக்கை அணைத்து ஒத்துழைப்பு அளித்த மக்கள்

டோக்கியோ: ஜப்பானில் கொளுத்தும் கோடை காரணமாக அனல் காற்று வீசி வரும் நிலையில் இதுவரை இல்லாத அளவு மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விளக்குகளை அணைக்குமாறு ஜப்பான் அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று மக்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். ஜப்பானில் தற்போது மழைக்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கியிருக்கிறது. ஆனால் கோடை தொடக்கத்திலேயே இதுவரை இல்லாத வகையில் வெப்பம் அதிகரித்துள்ளது. கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கே வெயில் வாட்டி வதைக்கிறது. கடந்த நான்கு நாட்களாகவே அங்கு மிகக் … Read more