எகிறிய எரிபொருள் விலை.. டிரக்குகளில் ஒலி எழுப்பியபடி சாலையை ஆக்கிரமித்து வாகன ஓட்டுநர்கள் போராட்டம்!

பெருவில், எரிபொருள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி சரக்கு வாகன ஓட்டுநர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்ததையடுத்து, அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதனை கட்டுப்படுத்த பெருவில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், துறைமுக நகரான காலோவில் சரக்கு வாகன ஓட்டிகள் டிரக்குகளில் ஒலி எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  Source link

அமெரிக்காவில்  40 சடலங்களுடன் ட்ரக் மீட்பு: அகதிகளாக வந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்

அமெரிக்காவில் 40 சடலங்களுடன் ட்ரக் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் சான் அன்டோனியோ நகரில் ஒரு ரயில்வே ஸ்டேஷன் அருகில் இந்த ட்ரக் கேட்பாரற்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. போலீஸார் அதனை திறந்தபோது உள்ளே மூச்சுத் திணறி உயிரிழந்த நிலையில் 40 பேர் சடலமாக கிடந்தனர். அவர்கள் அனைவரும் மெக்சிகோ நாட்டில் இருந்து அகதிகளாக அமெரிக்காவில் குடியேற முயன்றவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இது குறித்து மெக்சிகோ வெளியுறவு அமைச்சர் மார்செலோ எப்ரார்ட் கூறுகையில், “அமெரிக்காவின் டெக்சாஸில் ட்ரக்கில் சென்ற … Read more

திடீரென வீசிய சூறாவளிக் காற்றால் உருக்குலைந்த நெதர்லாந்து.!

நெதர்லாந்தை தாக்கிய அரிய சூறாவளியால் குடியிருப்புகள், வளாகங்களின் மேற்கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்ட்கன. துறைமுக நகரமான Zierikzee-யில் திடீரென கட்டுக்கடங்காத அளவில் சூறாவளி காற்று வீசியது. வணிக வளாகங்கள், குடியுருப்புகளின் மேற்கூரைகள் மற்றும் கட்டடங்கள் முன் இருந்த பொருட்கள் காற்றில் தூக்கி வீசப்பட்டன. காற்றில் பறந்த பொருட்களை மீட்கவும், மேற்கூரைகள் இடிந்து விழுந்ததிலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.   Source link

ஆள் அரவமின்றி நின்ற டரக்கில் இருந்து 42 சடலங்கள் மீட்பு… பரபரப்பு சம்பவம்

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் ரெயில் தண்டவாளம் அருகே நின்ற டிரெய்லர் டிரக்கில் இருந்து 42 சடலங்களை போலீசார் கண்டெடுத்துள்ளனர். சான் ஆண்டானியோ நகரில் நின்ற மர்ம டிரக் குறித்து கிடைத்த தகவலில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் அகதிகள் என போலீசார் தெரிவித்துள்ளனர். 16 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. வெயிலின் தாக்கத்தால் அகதிகள் உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படும் நிலையில், போலீசார் விசரித்து வருகின்றனர். Source … Read more

இலங்கை அதிபருடன் அமெரிக்க குழு பேச்சு| Dinamalar

கொழும்பு-இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக, அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேவை, அமெரிக்க உயர்மட்டக் குழு சந்தித்துப் பேசியது .நம் அண்டை நாடான இலங்கை அன்னியச் செலாவணி பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு, அவசியப் பொருட்கள் விலை உயர்வு, மின்வெட்டு உள்ளிட்ட பல நெருக்கடிகளை சந்தித்துஉள்ளது. இந்நிலையில் இலங்கையின் தற்போதைய நிலவரத்தை ஆய்வு செய்து பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்க, அமெரிக்க உயர் மட்டக் குழு ஒன்று நான்கு நாள் பயணமாக கொழும்பு வந்துள்ளது. அமெரிக்க … Read more

உக்ரைனில் ஆயிரம் பேருக்கு மேலிருந்த வணிக வளாகத்தில் ரஷ்யப் படைகள் ராக்கெட் தாக்குதல் – 10 பேர் பலி

உக்ரைன் கிரெமன்சுக் நகரில் ஆயிரம் பேர் குழுமியிருந்த வணிக வளாகத்தில் ரஷ்யப் படைகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 10 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வளாகத்தின் ஒரு பகுதியில் பற்றியத் தீ வேகமெடுத்து கட்டடம் முழுவதும் பரவியது. அவசர சேவைகள் பிரிவினர் மீட்பு பணியில் ஈடுபட்ட நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். தாக்குதலின் போது ஆயிரம் பேர் வளாகத்தில் இருந்தது கற்பனை செய்து கூட பார்க்க முடியாததாக உள்ளது என அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.  Source link

ஆப்கன் நிலநடுக்கம்: 155 குழந்தைகள் உயிரிழப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் கடந்த 22-ம்தேதி காலை 6.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பக்திகா மற்றும் கோஸ்ட் மாகாணத்தில் 3,000-க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின. நிலநடுக்கத்துக்கு 1,150 பேர் உயிரிழந்ததாகவும் 1,600 பேர் காயம் அடைந்ததாகவும் தலிபான்ஆட்சியாளர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் ஆப்கனில் நிலநடுக்கத்துக்கு உயிரிழந்த குழந்தைகள் எண்ணிக்கை 155 ஆக உயர்ந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. பக்திகா மாகாணத்தில் நிலநடுக்கத்துக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கயான் மாவட்டத்தில் அதிக குழந்தைகள் இறந்துள்ளன. பக்திகா மற்றும் கோஸ்ட் மாகாணங்களில் … Read more

துருக்கியில் கொட்டித் தீர்த்த கனமழை: சீறிப்பாயும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம்

துருக்கி நாட்டின் கருங்கடல் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் பாலம் ஒன்று அடித்துச் செல்லப்படும் வீடியோ வெளியாகி உள்ளது. அந்நாட்டின் ஆறு மாகாணங்களில் கனமழை பெய்த்தால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. Inebolu பகுதியில் ஓடை ஒன்றில் சீறிப்பாயும் வெள்ளத்தில் பாலம் ஓன்று அடித்து செல்லப்பட்டது.சாலைஒரத்தில் இருந்த வீடுகளும் இடிந்து விழுந்தன. இதுவரை 3 மாகாணங்களில் இருந்து 235பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை நீடிக்கும் என்பதால் அடுத்த 2 நாட்களுக்கு … Read more

பருவநிலை, எரிசக்தி, உக்ரைன் குறித்து ஜி7 தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு – இன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்

முனிச்: பருவநிலை மாறுபாடு, எரிசக்தி, உக்ரைன் விவகாரம் குறித்து ஜி7 தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று அவர் ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். ஜெர்மனியின் பவேரியன் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் மிட்டன்வால்ட் நகர் அருகே அமைந்துள்ள ஸ்லாஸ் எல்மவ் பேலஸ் ஓட்டலில் நேற்று முன்தினம் ஜி7 மாநாடு தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஜெர்மனியின் முனிச் நகருக்கு சென்றார். முதல் நாளில் இந்திய … Read more

பசுமை தொழில் நுட்பத்தில் முதலீடு செய்யுங்கள்;ஜி – 7 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு

எல்மா,-”பருவநிலை மாற்றத்துக்கு எதிரான இந்தியாவின் முயற்சிக்கு, ‘ஜி – 7’ நாடுகள் முழு ஒத்துழைப்பு அளிப்பதோடு, இந்தியாவில் உருவாகி உள்ள மிகப் பெரிய பசுமை எரிசக்தி தொழில்நுட்ப சந்தையில் அனைத்து நாடுகளும் முதலீடு செய்ய வேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். புகைப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் அடங்கிய, ஜி – 7 அமைப்பின் மாநாடு, தெற்கு ஜெர்மனியின் மலைப்பகுதியான எல்மாவில் உள்ள மிகப் பழமையான … Read more