மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 போலீசார் உயிரிழப்பு.!

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 போலீசார் உயிரிழந்தனர். அந்நாட்டின் வடக்கு எல்லையோர மாகாணமான நியூவோ லியோனில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பலை பிடிக்க சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், படுகாயமடைந்த 4 போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். Source link

எருது சண்டையின் போது சரிந்து விழுந்த மேடை – 4 பேர் பலி

கொலம்பியாவின் எஸ்பினல் நகரத்தில் கொரலேஜோ எனப்படும் பாரம்பரிய எருது சண்டை நடைபெற்றது. எருது சண்டையைப் பார்வையாளர்கள் கண்டு ரசிப்பதற்காக பல அடுக்கு மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் போட்டியை ரசித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக மேடை சரிந்து விழுந்தது. இதில், 4 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்த மேடை மூங்கிலால் அமைக்கப்பட்டிருந்ததாலே பாரம் தாங்காமல் சரிந்து விழுந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க | கருக்கலைப்பு தடை; அமெரிக்க தெருக்களில் வலுக்கும் மக்கள் … Read more

விண்வெளியில் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்க சீனா நடவடிக்கை..!

விண்வெளியில் முதல் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்க  நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இத்திட்டத்திற்கன முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில், வருகிற 2028ஆம் ஆண்டில் அந்த மின்னுற்பத்தி நிலையம் செயல்பாட்டிற்கு என கூறப்படுகிறது. 10 கிலோ வாட் திறன் கொண்ட அந்த மின் உற்பத்தி நிலையம், சூரிய ஒளியை மின்சாரம் மற்றும் நுண்ணலைகளாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்படுவதாகவும், செயற்கைக்கோள்களுக்கு ஆற்றல் அளிக்கும் வகையில் செயல்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது Source link

எரிபொருள் தட்டுப்பாடு: இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை!

கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை தலைநகர் கொழும்புவில் பள்ளிகள் ஒரு வாரத்துக்கு மூடப்பட்டுள்ளன. அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இலங்கையில் தற்போது 9 ஆயிரம் டன் டீசலும், ஆறாயிரம் டன் பெட்ரோலும் இருப்பு உள்ளது. அடுத்த கப்பல் எப்போது வரும் என தெரியாத நிலையில், எரிபொருள் நிலையங்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு விமானப்படை வீரர்கள் டோக்கன்களை வழங்கினர்.     Source link

மோடியை தட்டி அழைத்து கையை குலுக்கி அன்பை காட்டிய ஜோபைடன் : வைரலாகும் வீடியோ| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் முனிச்: மோடியை தட்டி அழைத்து கையை குலுக்கி அன்பை காட்டினார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். ஜெர்மனியில் ஜூ7 நாடுகளின் உச்சி மாநாடு துவங்கியது. அதில், அந்நாட்டு அதிபரின் அழைப்பின் பேரில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனியின் முனிச் நகருக்கு சென்றடைந்தார். அங்கு உறுப்பு நாடுகளின் தலைவர்களை சந்தித்தார். இதில்கனடா பிரதமர் ஸ்டின் ட்ரூடேவிடம் மோடி பேசிகொண்டிருந்தார். அப்போது பின்புறமாக வந்த அமெரிக்க அதிபர் ஜோபைடன், மோடிபின் இடது தோள்பட்டையை … Read more

‘‘மலிவு விலையில் கடனுக்கு கச்சா எண்ணெய் வேண்டும்’’- இலங்கை அமைச்சர்கள் ரஷ்யாவில் முகாம்

கொழும்பு: இந்தியாவை தொடர்ந்து இலங்கையும் ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்க முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக இலங்கை அமைச்சர்கள் இருவர் ரஷ்யாவில் முகாமிட்டுள்ளனர். ஆனால் இலங்கை ரூபாயில் அதுவும் கடனுக்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் … Read more

அமெரிக்காவில் 3 வயது மகனை கொன்று குளிர்பதன பெட்டியில் வைத்திருந்த தாய் கைது..!

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் பிரான்ஸ் என்ற பெயருடைய 31 வயது பெண், தனது 3 வயது மகனை கொன்று குளிர்பதன பெட்டியில் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் அவரது வீட்டில் சோதனை நடத்திய போலீசார் வீட்டின் கீழ்தளத்தில் குளிர்பதன பெட்டியிலிருந்து அந்த குழந்தையின் உடலை கைப்பற்றினார்கள். அந்த குழந்தை எதற்காக, எப்போது கொல்லப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  Source link

Fresh G7 Sanctions: ரஷ்யாவின் பாதுகாப்புத் துறைக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்கா

ரஷ்யாவின் பாதுகாப்புத் துறையை இலக்காகக் கொண்டு புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது. நேற்று, ரஷ்யாவில் இருந்து தங்கம் இறக்குமதி செய்வதை நிறுத்துவதாக ஏற்கனவே அமெரிக்கா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.  ரஷ்ய ஆயுதத் தொழிலுக்கு ஆதரவளிக்கக்கூடிய மேற்கத்திய தொழில்நுட்பத்திற்கான “ரஷ்யாவின் அணுகலை மேலும் கட்டுப்படுத்த G7 தலைவர்கள் இலக்கு விதிக்கப்பட்ட தடைகளை சீரமைத்து விரிவுபடுத்துவார்கள்” என்று வெள்ளை மாளிகை ரஷ்யாவிற்கு எதிரான புதிய தடைகளை தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை (2022, ஜூன் 27) ரஷ்யா மீது புதிய G7 … Read more

நூறாண்டு காலத்தில் முதன்முறையாக வட்டி கட்ட தவறிய ரஷ்யா..!

நூறாண்டு காலத்தில் முதன்முறையாக ரஷ்யா தனது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வட்டிதொகை செலுத்துவதில் இருந்து தவறியுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால், ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்த நெருக்கடியால் 100 மில்லியன் டாலர் வட்டிக்தொகையை, கடைசி நாளான இன்று ரஷ்யாவால் செலுத்த முடியாமல் போனது. ஆனால், இதனை கௌரவ பிரச்சனையாக கருதும் ரஷ்யா, பணம் வங்கியில் செலுத்தப்பட்டு விட்டதாகவும், ஆனால் இன்னும் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது. … Read more

தென் ஆப்பிரிக்காவில் சோகம்: 21 சிறுவர்கள் மர்மமான முறையில் மரணம்!

தென் ஆப்பிரிக்காவில் இரவு விடுதி ஒன்றில் சிறுவர்கள் உட்பட சுமார் 21 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென் ஆப்பிரிக்கா நாட்டின் தலைநகர் ஜோகனஸ்பெர்க்கில் இருந்து சுமார் 1,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகரம் தெற்கு லண்டன். இங்குள்ள இரவு விடுதி ஒன்றில் சிறுவர்கள் பார்ட்டிக்கு வந்துள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை இந்த இரவு விடுதியில் பலர் மர்மான முறையில் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து சம்பவ … Read more