ஆஸ்திரேலியாவில் இருந்து வணிக ரீதியான ராக்கெட்டை வெற்றிக்கரமாக விண்ணில் ஏவியது நாசா.!
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா முதன்முறையாக ஆஸ்திரேலியாவில் இருந்து வணிக ரீதியான ராக்கெட்டை வெற்றிக்கரமாக விண்ணில் ஏவியுள்ளது. ஆர்ன்ஹெம் விண்வெளி மையத்தில் இருந்து பாய்ந்த ராக்கெட், பூமியில் இருந்து 350 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டில் அனுப்பப்பட்ட டெலஸ்கோப் நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் எக்ஸ் கதிர்களை ஆராய்ச்சி செய்து அதன் தரவுகளை சேகரித்து பூமிக்கு அனுப்பும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். Source link