விமான நிலைய ஊழியர்களை சரமாரியாக தாக்கிய தம்பதி.. உடமைகளை சோதனை செய்வதில் தாமதம் செய்ததாக புகார்..!
பிரிட்டனில் விமான நிலைய ஊழியர்களை தாக்கிய தம்பதியை போலீசார் கைது செய்தனர். பிரிஸ்டோலில் இருந்து அலிகான்டே நகருக்கு செல்வதற்காக தம்பதி காத்திருந்த நிலையில், அவர்களது உடமைகளை பரிசோதனை செய்வதில் விமான நிலைய ஊழியர்கள் கால தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணவர், திடீரென மனைவியை தள்ளிவிட்டு விமான நிலைய ஊழியர்கள் இருவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. Source link