தென்ஆப்பிரிக்க நைட் கிளப்பில் 17 பேர் மர்ம மரணம்

ஜோகன்னஸ்பர்க், தென்ஆப்பிரிக்காவின் தெற்கு நகரான கிழக்கு லண்டனில் உள்ள நகர் ஒன்றில் நைட் கிளப் ஒன்று உள்ளது. இதில், நிறைய பேர் கூடியிருந்து உள்ளனர். இந்நிலையில், கிளப்பில் 17 பேர் உயிரிழந்த நிலையில் கிடந்து உள்ளனர். அவர்களது மர்ம மரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிளப்பில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் விவகாரம் நடந்து உள்ளதா? என்பது பற்றிய விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை. இதுபற்றி மாகாண காவல் துறையின் தலைமை பிரிகேடியர் … Read more

100 ஆண்டுகளுக்கு மேலாக வாழும் வெள்ளை ஸ்டர்ஜன் மீன் : 317 கிலோ எடை, 10 அடி நீளம் கொண்ட மீனை பிடித்த மீனவர்கள்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 100 ஆண்டுகளுக்கு மேலாக வாழக்கூடிய வெள்ளை ஸ்டர்ஜன் மீனை மீனவர்கள் பிடித்துள்ளனர். 10 அடி நீளமும், 57 அடி அங்குலமும் கொண்ட இந்த வகை  ராட்சத மீன் 317 கிலோ எடை கொண்டிருப்பதாகவும், வெள்ளை ஸ்டர்ஜன் மீன் ஒருமுறை சுழன்றுவர இரண்டு மணிநேரமாகும் என்றும் மீனவர்கள் கூறியுள்ளனர்.  Source link

Gold Import Ban: ரஷ்ய தங்கத்தை இறக்குமதி செய்ய தடை விதிக்கும் ஜி7 நாடுகள்

மாஸ்கோ மீதான பொருளாதாரத் தடைகளை இறுக்கும் விதமாக ரஷ்யாவிடம் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்ய ஜி 7 நாடுகளின் குழு தடை விதிக்கும் என்று தெரிகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடக்க, ஏழு (G7) நாடுகளின் குழு ரஷ்ய தங்கம் இறக்குமதியை தடை செய்யும் என்று அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை (2022 ஜூன் 26) தெரிவித்துள்ளது. ஜி 7 நாடுகளின் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை நடைபெறும் உச்சிமாநாட்டில் இது தொடர்பான முறையான அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் … Read more

கடலில் பயணிகள் படகு ஒன்று தீப்பிடித்து எரிந்து விபத்து.. ஒருவர் பலி!

பிலிப்பைன்ஸ் கடலில் பயணிகள் படகு ஒன்று தீப்பிடித்து எரிந்து கடலில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் மாயமாகியிருப்பதாக கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டுகாஸ் மற்றும் டில்மோபோ தீவுகளுக்கு இடையே 15 குழந்தைகள் உட்பட 157 பயணிகள் மற்றும் 8 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு அந்த படகு சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டுள்ளது. இதில் 163 பேர் மீட்கப்பட்டு லெய்ட்டே மாகாணத்தில் உள்ள சிறிய துறைமுகத்தில் பத்திரமாக இறக்கிவிடப்பட்டனர். மாயமான ஒருவரை தேடும் பணி நடைபெற்று … Read more

ரஷ்யாவின் போருக்கு எதிராக ஜி7, நேட்டோ நாடுகள் ஒன்றாக இருக்க வேண்டும் – ஜோ பைடன்

ரஷ்யாவின் போருக்கு எதிராக ஜி7 மற்றும் நேட்டோ நாடுகள் ஒன்றாக இருக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் 3 நாள் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டுக்கு முன்னதாக ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸியுடன் உரையாடிய ஜோ பைடன், ஐரோப்பாவின் மேற்கு நாடுகளை ஒற்றுமையாக இருக்க வலியுறுத்தினார். ஜி7 மற்றும் நேட்டோ அமைப்பு எப்படியாவது பிளவுபடும் என்று புதின் நம்புவதாகவும் ஜோ பைடன் தெரிவித்தார்.   Source link

14 வயதுடைய கருப்பின மாணவனிடம் அத்துமீறி சோதனை செய்த போலீசார் : கேள்வி எழுப்பிய மக்கள் விரட்டியடிப்பு

லண்டனில் கொள்ளை வழக்கு ஒன்றில் கருப்பினத்தை சேர்ந்த 14 வயதுடைய மாணவனிடம் போலீசார் அத்துமீறி சோதனை நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது. குரோய்டன் நகரில் பள்ளி வகுப்பை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த அந்த மாணவனை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து கேள்வி எழுப்பிய மக்களையும் போலீசார் விரட்டி அடித்த காட்சியும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.  Source link

உருக்குலைந்த கட்டிடத்தில் சிக்கிக்கொண்ட 7 வயது சிறுமி பத்திரமாக மீட்பு… தாயாரை மீட்க போராட்டம்!

ரஷ்ய தாக்குதலால் உருக்குலைந்த கட்டிடத்தில் சிக்கிக்கொண்ட 7 வயது சிறுமியை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். கடந்த 20 நாட்களாக கீவ் மாநிலத்தில் பெரியளவில் தாக்குதல்கள் நிகழ்த்தப்படாத நிலையில் இன்று அதிகாலை அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க ஷெவ்சென்கிவ்ஸ்கி மாவட்டத்தின் மீது ரஷ்ய வீரர்கள் பீரங்கி தாக்குதல் நிகழ்த்தினர். தீப்பற்றி எரிந்து உருக்குலைந்த 9 மாடி கட்டிடத்தில் இருந்து 7 வயது சிறுமி உள்பட ஏராளமானோர் மீட்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கி அந்த சிறுமியின் தந்தை உயிரிழந்த நிலையில், அவரது … Read more

இலங்கையில் எரிபொருள் விலையேற்ற எதிரொலியால் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!

எரிபொருள் விலையேற்ற எதிரொலியால் இலங்கை முழுவதும் உள்ள உணவகங்களில் உணவுப்பொருட்களின் விலை 10 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டின் உணவக உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில், விற்பனையாளர்கள் நலன் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், சிற்றுண்டிகள் முதல் அனைத்து உணவகங்களிலும் விலை உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

ஒரு லிட்டர் சோடாவை 6.8 விநாடிகளில் குடித்து சாதனை படைத்த அமெரிக்க உணவுப் பிரியர்

அமெரிக்காவைச் சேர்ந்த எரிக் ஜேம்ஸ் பேட்லேண்ட்ஸ் ஒரு லிட்டர் சோடாவை ஆறு புள்ளி 8 விநாடிகளில் குடித்து கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார். சாதனைகள் என்பதே முறியடிக்கப்படுவதற்காகத்தான். அந்த வகையில் மேலும் ஒரு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. உணவுப் பிரியரான எரிக் ஜேம்ஸ், சாப்பிடுவதில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, ஒரு லிட்டர் சோடாவை ஆறு புள்ளி 8 விநாடிகளில் குடித்து கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார்.  Source link

கருக்கலைப்பு தடை; அமெரிக்க தெருக்களில் வலுக்கும் மக்கள் போராட்டம்

அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் மக்கள் போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர். இந்த முடிவுக்கு சமூக அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பெரும்பாலான அமைப்புகள் மற்றும் சமூக சேவையாளர்கள் இந்த முடிவை பழமைவாத முடிவு என எதிர்க்கின்றனர்.  தெருக்களில் மக்கள் போராட்டம் அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கான அரசியலமைப்பு உரிமை பறிக்கப்பட்டதை அடுத்து, மனித உரிமைகள் உணர்வுள்ள மக்கள், ஆர்வலர்கள் மற்றும் தலைவர்கள் வீதியில் இறங்கி  போராடி வருகின்றனர். நீதிமன்றத்தின் இந்த முடிவு … Read more