உணவு தட்டுப்பாட்டால் பேரழிவை நோக்கி உலகம் – ஐ.நா., கடும் எச்சரிக்கை!

கடுமையான உணவுத் தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரசு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரசு பேசியதாவது: பருவநிலை மாற்றம், கொரோனா பெருந்தொற்று ஆகியவற்றால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சர்வதேச அளவில் உணவு பற்றாக்குறை அதிகரித்து உள்ளது. இதனால் கோடிக் கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்ய போரால் அந்த நிலைமை மேலும் … Read more

மண்ணெண்ணெய் வழங்காததை கண்டித்து இலங்கை மக்கள் போராட்டம்

அறிவித்தப்படி மண்ணெண்ணெய் வழங்காததால், இலங்கையில் எரிபொருள் விற்பனை அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கையில் எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. தலைநகர் கொழும்புவில் உள்ள விற்பனை மையத்தில் மண்ணெண்ணெய்க்காக நேற்று இரவு முதலே ஏராளமானோர் காத்திருந்தனர். இந்நிலையில் மண்ணெண்ணெய் இல்லை என அறிவிப்பு வெளியானதால் ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஹட்டன்-கொழும்பு, கட்டன்-கண்டி உள்ளிட்ட பிரதான சாலைகளில் போக்குவரத்து தடைபட்டது. Source link

'150 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டோம்' – அதிபர் ஜோ பைடன் வருத்தம்!

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அது குறித்து அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கருத்துத் தெரிவித்து உள்ளார். அமெரிக்காவில் கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட உரிமை. அது அரசியலமைப்பு உரிமை என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் 1973 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதே போல், 1992 ஆம் ஆண்டு நடந்த வழக்கில் 22 முதல் 24 வார கால கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சட்டப்பூர்வமாக கலைத்துக் கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு … Read more

உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் – ஐநா

உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் என்றும் அதன் பின்விளைவுகளில் இருந்து எந்த நாடும் தப்ப முடியாது என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். காலநிலை மாற்றம், கொரோனா தொற்று ஆகியவற்றால் சர்வதேச அளவில் உணவு பற்றாக்குறை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வேளாண் பணிகள் தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக விவசாயிகளின் நிதி ஆதாரத்தை பெருக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரம் காட்ட வேண்டும் என்றும் குட்டரெஸ் கோரிக்கை விடுத்துள்ளார். Source link

அமெரிக்காவில் கருக்கலைப்பிற்கு தடை; அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பு

அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கான அரசியலமைப்பு உரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை வழங்கும் போது, ​​உச்ச நீதிமன்றம், தனது 50 அண்டு கால பழைய தீர்ப்பை ரத்து செய்துள்ளது.  ஐந்து தசாப்தங்களுக்கு முன், உச்ச நீதிமன்றத்தி, விசாரணைக்கு வந்த ஒரு வழக்கில், பெண்களுக்கு கருக்கலைப்பு செய்யும் உரிமை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்திய வழக்கில், கருக்கலைப்பு செய்வதற்கான உரிமையை அரசியலமைப்புச் சட்டம் வழங்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.  உச்சநீதிமன்றம் Roe Vs Wade வழக்கின் தீர்ப்பு … Read more

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு தடை: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வலுக்கும் எதிர்ப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கு தடை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்காவில் 1973 ஆம் ஆண்டு கருக்கலைப்பு செய்வதற்கான பெண்களின் உரிமையை உறுதி செய்த ரோ v வேட் தீர்ப்பை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.எட்டு நீதிபதிகள் அடங்கி அமர்வில் 5 பேர் கருக்கலைப்புக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து குடியரசு கட்சி ஆளும் மாகாணங்களில் கருக்கலைப்பு சட்டம் உடனடியாக அமலாகியுள்ளதாக அமெரிக்க … Read more

கருக்கலைப்பு உரிமைச்சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் போராட்டம்..!

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைச்சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸ், கலிஃபோர்னியா, வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். உச்சநீதிமன்றம் தடை விதித்ததையடுத்து மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 13 மாகாணங்கள் உடனடியாக கருக்கலைப்புக்கு தடை விதித்ததாக கூறப்படும் நிலையில், பல்வேறு பகுதிகளிலும் கருக்கலைப்பு கிளினிக்குகள் மூடப்பட்டு வருகிறது. Source link

நாடு திவாலாவதை தடுக்க பெரிய தொழில்களுக்கு சூப்பர் வரி விதிப்பு – பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் நடவடிக்கை!

பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் பெரிய தொழில்களுக்கு சூப்பர் வரி விதிக்கப்படுவதாக பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், நாடு திவாலாகும் நிலைக்கு செல்வதை தடுக்கவும், பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் சிமெண்டு, இரும்பு மற்றும் ஆட்டோமொபைல் போன்ற பெரிய அளவிலான தொழில்களுக்கு 10 சதவீதம் ‘சூப்பர் வரி’ விதிக்கப்படுகிறது என்றார். தங்களின் முதல் நோக்கம் சாதாரண மக்களுக்கு நிவாரணம் வழங்குவதும், மக்கள் மீதான பணவீக்க சுமையை குறைத்து அவர்களுக்கு வசதி … Read more

முத்து மாலையாய் நேர்கோட்டில் அணிவகுத்து நிற்கும் கோள்கள்: வானில் ஒரு அதிசய நிகழ்வு

நியூயார்க்: நமது சூரிய மண்டலத்தில் உள்ள ஐந்து முக்கிய கிரகங்களான புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகியவை ஒரே நேர்கோட்டில் இருக்கும் அரிய கிரக இணைப்பு ஏற்பட்டுள்ளது. இது மனித கண்களுக்குத் தெரியும் என்பது கூடுதல் செய்தி.  பதினெட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நிகழ்வு நடைபெறுகிறது. நேற்று காணப்படத் தொடங்கிய இந்த நிகழ்வை இன்னும் நான்கு நாட்கள் வரை வானில் காணலாம் என்றும் வானியற்பியல் ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த அறிய நிகழ்வை அதிகாலை … Read more

8K அல்ட்ரா ஹெச்டி தொழில்நுட்பத்தில் காட்சி அளிக்கும் பூமி.!

தனி விண்வெளி நிலைய கட்டமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள சீனா, 8 கே அல்ட்ரா ஹெச் டி தரத்தில் பூமியை எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்துடன் முதற்கட்ட கட்டமைப்பு பணிகளில் முடிந்த நிலையில், அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ள வீரர்களை விண்வெளிக்கு சீனா அனுப்பியுள்ளது. பூமி மற்றும் விண்வெளி நிலைய பணிகளை வீரர்கள் எடுத்த வீடியோவை சீனா வெளியிட்டுள்ளது. Source link