ஒரே பாலினத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!

மெக்சிகோவில் ஒரே பாலினத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம் நடைபெற்றது. மெக்சிகோ நகர நீதிமன்றத்திற்கு முன் நடைபெற்ற மிகப்பெரிய விழாவில் இசைக்குழுவினரின் பாரம்பரிய பாடல்களுக்கு மத்தியில் திருமணம் செய்துகொண்டனர். தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக்க விரும்பியதால் திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்தனர்.  Source link

ஓராண்டுக்குப் பின் டென்னிஸ் களம் காணும் 40 வயது செரீனா.. பிரான்ஸ் வீராங்கனையை எதிர்கொள்கிறார்..!

ஓராண்டுக்குப் பிறகு களம் காணும் பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், விம்பிள்டன் முதல் சுற்றில் பிரான்ஸ் வீராங்கனையை எதிர்கொள்கிறார். 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள 40 வயதான அமெரிக்காவைச் சேர்ந்த செரீனா வில்லியம்ஸ், காயம் காரணமாக கடந்த ஓராண்டாக எவ்வித டென்னிஸ் போட்டியிலும் விளையாடவில்லை. காயம் குணமடைந்த நிலையில், விம்பிள்டன் போட்டியில் விளையாடும் அவருக்கு வைல்ட் கார்டு எனப்படும் நேரடி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. Source link

நார்வேயில் இரவு கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு… 2 பேர் உயிரிழப்பு.. 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இரவு கேளிக்கை விடுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கிளப்பிற்கு வந்த மர்மநபர் பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாகத் தொடங்கியுள்ளான். இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சந்தேக்கப்படும் நபர்களிடம் உடனடியாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. Source link

மெக்சிகோவில் மோதல்: 12 பேர் பலி

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ நாட்டில் போலீசாருக்கும் ஆயுத கும்பலுக்கும் ஏற்பட்ட மோதலில் 12 பேர் பலியாயினர். மெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படும். துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களால் சுட்டு தாக்குதல் நடத்தி கொள்வார்கள்.இந்நிலையில், அந்நாட்டின் மேற்கே ஜாலிஸ்கோ மாகாணத்தில் தொடர்ச்சியான படுகொலைகள் நடந்த நிலையில், அதனை கண்காணிப்பதற்காக மெக்சிகோ நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் ராணுவ வீரர்கள் கொண்ட குழுவை கடந்த மார்ச்சில் அமைத்தது. மெக்சிகோவின் கூட்டு அதிரடி படை திட்டத்தின் … Read more

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் பெண்களின் வாழ்க்கைக்கு கேள்விக்குறியாக மாறியுள்ளது – அதிபர் ஜோ பைடன்.!

கருக்கலைப்பு குறித்த அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் அமெரிக்க பெண்களின் வாழ்வும், ஆரோக்கியமும் கேள்விக் குறியாக மாறியுள்ளதாக அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். நாட்டின் சோகமான நாள் எனக் கூறிய அதிபர் பைடன், அமெரிக்கா 150 ஆண்டுகள் பின்னோக்கி சென்றதாக தெரிவித்தார். 1973 ரோ அண்ட் வேட் வழக்கில் 50 ஆண்டுகால கருக்கலைப்பு சட்டப்பூர்வ உத்தரவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து நாட்டின் முதல் மாகாணமாக மிஸ்ஸோரி கருக்கலைப்பை தடை செய்தது. … Read more

கருக்கலைப்பு உரிமை ரத்து செய்ய அமெரிக்க சுப்ரீம் கோர்ட் பரிந்துரை| Dinamalar

வாஷிங்டன்: அமெரிக்க உச்ச நீதிமன்றம், சட்டபூர்வமான கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்து, கருக்கலைப்பு செய்வதை குற்றமாக்கும் வரைவு ஒன்றை இயற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க உச்ச நீதிமன்றம், 1973-ம் ஆண்டில் வழக்கு ஒன்றில், ‘கருக்கலைப்பு என்பது, பெண்ணின் தனிப்பட்ட உரிமை, அரசியலமைப்பு உரிமை’ என தீர்ப்பு வழங்கியது.இதன்பின், ௧௯௯௨ல் மற்றொறு வழக்கில், ’22 முதல் 24 வார கர்ப்பத்தை, சம்பந்தப்பட்ட பெண் சட்டபூர்வமாக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்’ என, தெரிவித்தது. கருக்கலைப்பு உரிமைக்கு எதிரான சட்ட … Read more

உக்ரைனில் அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி ரஷ்யப் படைகள் பயங்கர தாக்குதல்..!

உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் உக்ரேனிய ஆயுதப் படைகள் தங்கிருப்பதாகக் கருதி ரஷ்யப் படைகள் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளன. இரு நாடுகளுக்கு இடையேயான போர் 5 மாதங்களை நெருங்கி விட்ட நிலையில், கிழக்கு உக்ரைனைக் கைப்பற்றும் முயற்சியில் ஆயிரக்கணக்கான வீரர்களை குவித்து ரஷ்யா கடும் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது. பொதுமக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் சேதம் ஏற்படுத்தும் வகையில் தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யப் படைகள், பாலிடெக்னிக் கல்லூரியின் விளையாட்டு வளாகம் உள்ளிட்ட இடங்களில் … Read more

அர்ஜெண்டினாவில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து லாரி ஓட்டுநர்கள் போராட்டம்.!

அர்ஜெண்டினாவில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து லாரி ஓட்டுநர்கள் தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை விலை ஏற்றம் கண்டுள்ளன. எரிபொருளுக்கான தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சான் நிக்கோலஸ் நகரைச் சுற்றிய நெடுஞ்சாலையில் திரண்ட லாரி ஒட்டுநர்கள் டயர்களுக்கு தீ வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எரிபொருளின் விலை கடுமையாக அதிகரித்திருப்பதால், அனைத்து தரப்பட்ட மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக வேதனை தெரிவித்தனர். … Read more

பூமிக்கடியில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து.. அதிர்வில் தொழிலாளி தூக்கி வீசப்பட்ட சிசிடிவி.!

இங்கிலாந்தில் பூமிக்கடியில் உள்ள எரிவாயு குழாய் வெடித்ததில் தொழிலாளி தூக்கி வீசப்பட்ட சிசிடிவி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. டெர்பிஷெயர் பகுதியில் வேலி அமைக்கும் பணியில் தொழிலாளி ஈடுபட்ட நிலையில், பயங்கர சத்தத்துடன் அவர் நின்ற இடத்தின் அடியில் வெடிவிபத்து ஏற்பட்டது. அதிர்வில் அவர் தூக்கி வீசப்பட்டார். பூமிக்கடியில் உள்ள எரிவாயு குழாயில் வெடிப்பு ஏற்பட்டதாகவும், அருகில் உள்ள 30க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வெளியேற்றப்பட்டு நிலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். Source link