பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பதவிக்கு நெருக்கடி| Dinamalar

லண்டன் :பிரிட்டனில் இரு எம்.பி., தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி அடைந்த நிலையில், மக்களின் குறைகளை தீர்க்க தொடர்ந்து பாடுபடப் போவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இரு எம்.பி., தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் ஆளும் பழமைவாத கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து, அக்கட்சியின் தலைவரும், பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு மிகவும் நெருக்கமானவருமான அமைச்சர் ஆலிவர் டவ்டன் பதவி விலகினார். கொரோனா காலத்தில் விருந்து நிகழ்ச்சிகளை நடத்தியது, 40 ஆண்டுகளில் … Read more

பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடமாக ஆப்கானிஸ்தான் மாறிவருகிறது… ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா புகார்

லஷ்கர் ஈ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடமாக ஆப்கானிஸ்தான் மாறாமல் தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பேசிய இந்தியாவின் நிரந்தர ஐ.நா. பிரதிநிதி திருமூர்த்தி, இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆப்கானிஸ்தான் சொர்க்க பூமியாக மாறி வருவதாக குற்றஞ்சாட்டினார்.  தாலிபான்கள் பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். Source link

இந்தியாவில் தடுப்பூசியால் 42 லட்சம் மரணம் தடுப்பு| Dinamalar

லண்டன்:இந்தியாவில், உரிய நேரத்தில் கொரோனா தடுப்பூசி வினியோகிக்கப் பட்டதால், இறக்க வாய்ப்பிருந்த, 42 லட்சத்திற்கும் அதிகமானோர் காப்பாற்றப்பட்டுள்ளதாக, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள இம்பீரியல் கல்லுாரி பேராசிரியர் ஆலிவர் வாட்சன் தலைமையிலான குழு, கொரோனா இறப்பு பற்றிய ஆய்வறிக்கையை, ‘தி லான்செட்’ மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தாவது:கொரோனா பரவலால், உலக நாடுகள் தெரிவித்ததை விட அதிகமானோர் இறந்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு, ‘தி எக்கனாமிஸ்ட்’ இதழ் ஆகியவை தெரிவித்துள்ளன. அவற்றின் புள்ளி … Read more

ஃபுளோரிடா மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ள மிக அதிக எடையுடன் கூடிய பர்மீஸ் மலைப்பாம்பு..!

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் இதுவரை இல்லாத வகையில் மிக அதிக எடையுடன் கூடிய ராட்சத பர்மீஸ் மலைப்பாம்பு கண்டறியப்பட்டுள்ளது. அந்த பெண் மலைப்பாம்பு 98 கிலோ எடையும், 5 மீட்டர் நீளமும் கொண்டிருந்ததுடன், அதனுடன் 122 முட்டைகள் இருந்துள்ளன. வெஸ்டர்ன் எவர்கிளாட்ஸ் பகுதியில் டியோன் எனப்படும் பாம்பின் மீது ரேடியோ டிரான்ஸ்மிட்டர்களை பொருத்தி மலைப்பாம்புகளின் நகர்வுகள், இனப்பெருக்க முறைகள், வாழ்விடத்தை கண்காணிக்க அனுப்பி வைக்கப்பட்டதில், இந்த ராட்சத பர்மீஸ் மலைப்பாம்பு குறித்து உயிரியலாளர்களுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த … Read more

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 1,150 ஆக உயர்வு

காபுல், ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த புதன்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் 3 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் இடிந்தன. பக்திகா மாகாணம் இந்த நிலநடுக்கத்தால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது. இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தால் ஏற்கனவே 1,000 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியான நிலையில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் நிலநடுக்கத்தால் இதுவரை 1,150 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. மேலும், … Read more

முந்தைய கடனைத் திருப்பிச் செலுத்த மீண்டும் கடன்வாங்கும் பாகிஸ்தான்

முந்தைய கடனைத் திருப்பிச் செலுத்த மீண்டும் கடன்வாங்கும் மோசமான சுழலில் பாகிஸ்தான் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. துனியா டெய்லி நாளிதழில் ஆயாஸ் அமீர் என்பவர் எழுதிய கட்டுரையில், திறமையற்ற  ஆட்சியாளர்கள் அனைவரும் சிக்கலைத் தீர்க்கக் கடன் வாங்குவது, அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த மீண்டும் கடன் வாங்குவது என்கிற செயல்களையே செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இனிமேல் கடன் வழங்க யாரும் முன்வர மாட்டார் என்கிற நிலைக்குப் பாகிஸ்தானை இந்தக் கடன் சுழல் கொண்டு சென்றுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.  Source link

பாகிஸ்தானில் காகிதத் தட்டுப்பாடு; பாடப்புத்தகங்கள் வழங்குவதில் சிக்கல்

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. குறைந்து வரும் அன்னிய செலாவணி கையிருப்பு, அதிகரித்து வரும் திருப்பி செலுத்த வேண்டிய கடன், டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற பல சிக்கல்களை அந்த நாடு எதிர் கொண்டு வருகிறது. இந்நிலையில், பணவீக்கம் மற்றும் பொருளாதார சூழல் காரணமாக பாகிஸ்தானில் தற்போது காகிதத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கு புத்தகங்களை விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாடு காகித … Read more

கருகலைப்புக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம்… புரட்சி பெண்கள் அதிர்ச்சி!

அமெரிக்கா முழுவதும் கருக்கலைப்பு சட்டப்படி செல்லும் என கடந்த 1973 ஆம் ஆண்டு ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து அமெரிக்காவில் கிட்டதட்ட அரை நூற்றாண்டாக கருகலைப்புக்கு சட்டரீதியான அங்கீகாரம் இருந்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் மசோதாக்களை மாகாண அரசுகள் அண்மை காலமாக நிறைவேற்றி வருகின்றன. குறிப்பாக குடியரசு கட்சி ஆளும் டெக்சாஸ் உள்ளிட்ட கிட்டதட்ட 20 மாகாணங்களில் கருகலைப்புக்கு கடந்த ஆண்டு இறுதியில் தடை … Read more

நிலவின் தூசி, கரப்பான்பூச்சிகள் ஏலம் விற்பனையை நிறுத்திய நாசா

நிலவின் தூசி மற்றும் கரப்பான்பூச்சிகள் ஏலம் விற்பனையை நாசா நிறுத்தியுள்ளது. அப்பல்லோ 11 விண்கலம் மூலம் நிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட பாறைத்துகள்களில் இருந்து கிடைத்த சுமார் 40 மில்லி கிராம் நிலவு தூசி மற்றும் அதுதொடர்பான ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட கரப்பான் பூச்சிகள், 4 லட்சம் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் 3 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் பாஸ்டனை சேர்ந்த நிறுவனம் அறிவித்திருந்தது. Source link

தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்ட 2-வது கட்ட நிவாரண பொருட்கள் இலங்கையை சென்றடைந்தது..!

கொழும்பு, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி சென்னையில் இருந்து கடந்த மாதம் கப்பல் மூலம். முதற்கட்டமாக 9,500 டன் அரிசி, 200 டன் பால் பவுடர், 30 டன் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது இதன் தொடர்ச்சியாக … Read more