ரஷிய ராணுவ சரக்கு விமானம் விபத்து; பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா 121-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளன்ர். இதற்கிடையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், மேற்கு ரஷியாவின் ரியாசன் மகாணத்தில் 9 பேருடன் பயணித்த இலியுஷின் Il-76 ரக ராணுவ சரக்கு விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. இந்த விமானம் உக்ரைன் போருக்கு … Read more

மெக்சிகோவில் ஆயுத கும்பலுடன் போலீசார் துப்பாக்கிச்சண்டை.. 4 போலீசார் உட்பட 12 பேர் பலி!

மெக்சிகோ நாட்டில் போலீசாருக்கும், ஆயுதங்களை விற்பனை செய்யும் கும்பலுக்கும் இடையேயான மோதலில் 12 பேர் உயிரிழந்தனர். ஜாலிஸ்கோ மாகாணம் எல் சால்டோ நகரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில்  8 குற்றவாளிகள் சுட்டு கொல்லப்பட்டனர். 3 பேர் பமுகாயமடைந்தனர். ஆயுத கும்பல் நடத்திய பதில் தாக்குதலில்  4 போலீசார் உயிரிழந்தனர்.    Source link

சக நண்பர் புஜாராவை டக் அவுட் செய்த முகமது ஷமி.. சமாதானம் செய்ய ஓடிச்சென்று கட்டித்தழுவி ஆறுதல்..!

இங்கிலாந்தின் லீசெஸ்டர் நகரில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறின.  ஒரே அணியில் இருக்கும் இந்திய அணி வீரர்கள் இந்த பயிற்சி ஆட்டத்தில் எதிர் எதிர் அணியாக விளையாட, ஆட்டம் களைகட்டியது. இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி, தமது நெருங்கிய நண்பரான புஜாராவை டக் அவுட் செய்தார். இதனை கொண்டாடிய ஷமி, நண்பன் புஜாரா கோபித்து கொள்ளக்கூடாது என எண்ணி ஓடிச்சென்று அவரை தழுவி சாந்தப்படுத்தினார். இந்த காட்சிகள் இணையதளங்களில் ரசிகர்களை … Read more

ரியாலிட்டி ஷோ படபிடிப்பின் போது ஆபத்தான மலையில் கடும் வெப்பத்தில் சிக்கி வெயில் தாங்காமல் மயக்கமடைந்த படக்குழுவினர்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள மலை ஒன்றில் ரியாலிட்டி ஷோ படம்பிடித்துக் கொண்டிருந்த குழுவினர் கடும் வெப்பத்தில் சிக்கியதால் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். கடல் மட்டத்திலிருந்து 2704 அடி உயரத்தில் அமைந்துள்ள அந்த மலை செங்குத்தான பாறைகளை கொண்டதாகும். அங்கு கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அந்த குழுவினர் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், வெயிலின் தாக்கம் 108 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியதால் அவர்களில் சிலர் மயங்கி விழுந்தனர். ட்ரோன்கள் மூலம் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். … Read more

தந்தைக்கும் எனக்கும் இனி எந்த ஒட்டு உறவு இல்லை – பாலினம் மாறிய எலன் மஸ்க்கின் மகன் ஆவேசம்

கடந்த 2000 ஆம் ஆண்டு எலன் மஸ்க்கும் ஜெனிபர் ஜஸ்டீன் வில்சன் என்ற பெண்ணுக்கும் திருமணம் முடிந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு இரட்டை குழந்தைகள் உள்ளன. பின்னர் 2008ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்துக்கொண்டனர். இந்நிலையில் எலன் மஸ்க்கிற்கு முதலாவதாக பிறந்த இரட்டை குழந்தைகள்  சேவியர், கிரிப்ஃபின் என பெயரிடப்பட்டனர். இதில் மூத்த மகன் தான் சேவியர் மஸ்க். இவர்கள் இருவரும் சில நாட்களுக்கு முன் தங்களது 18வது பிறந்த நாளை கொண்டாடினார்கள். பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு … Read more

கழிவுநீரில் போலியோ வைரஸ் – மீண்டும் தலைதூக்குகிறதா போலியோ?

பிரிட்டன் நாட்டின் லண்டன் நகரில் கழிவுநீரில் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1970 மற்றும் 1980-களில் உலகையே புரட்டிப் போட்ட நோய் இளம்பிள்ளை வாதம். தீவிர மருத்துவ நடவடிக்கைகளினாலும், பரவலான தடுப்பூசி பயன்பாட்டினாலும் போலியோ தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டன் நகரின் கழிவுநீரில் தற்போது வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லண்டனில் கடந்த 1984 ஆம் ஆண்டு கடைசியாக போலியோ … Read more

ஆப்கானிஸ்தான் தலைநகரில் இந்திய தூதரகம் மீண்டும் திறப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகரில் கடந்த ஆண்டு மூடப்பட்ட இந்திய தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட்டில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியபோது காபூலில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகள் டெல்லி திரும்பினர். இந்நிலையில், இந்திய தொழில்நுட்பக்குழுவினர் காபூல் சென்றதன் மூலம் அங்குள்ள தூதரகம் செயல்பட்டிற்கு வந்துள்ளது. இது குறித்து தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ஆப்கானிஸ்தானுக்கு அளிக்கப்படும் மனிதாபிமான உதவிகள் முறையாக சென்றடவதை கண்காணிக்கவும், அதனை ஒருங்கிணைக்கவும் இந்திய குழு காபூல் சென்றதாக குறிப்பிட்டுள்ளது. Source link

தரையிறங்கும் போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளான ராணுவ சரக்கு விமானம்.. 4 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவின் ரியாசான் நகருக்கு அருகே இராணுவ சரக்கு விமானம் தரையிறங்கும் போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். Ilyushin Il-76 என்ற சரக்கு விமானத்தில் மொத்தமாக 9 பேர் பயணித்துள்ளனர். ரியாசான் பகுதியில் தரையிறங்கும் போது எதிர்பாராத விதமாக விமானம் தீப்பற்றியதில் அதில் சிக்கி 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விமானத்தின் என்ஜின் கோளாறால் இந்த விபத்து நேர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. Source link

நிலவு துகள்கள், கரப்பான்பூச்சிகள் ரூ.4 கோடிக்கு ஏலம்; மறுத்து முரண்டுபிடிக்கும் நாசா

1969 ஆம் ஆண்டு நாசாவின் அப்போலோ 11 மிஷனாக நிலவில் இருந்து  இருந்து  47 பவுண்டுகள் (21.3 கிலோகிராம்) எடை கொண்ட பாறை பூமிக்கு கொண்டு வரப்பட்டது.  இந்த பாறையின் துகள்களை வைத்து நிலவின் மண் மற்றும் பாறைகளில் நச்சுத்தன்மையுள்ளதா என்ற ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன. அதன் ஒரு பகுதியாக சில பூச்சிகள், மீன்கள் மற்றும் பிற சிறிய உயிரினங்களுக்கு அந்த நிலவு பாறையின் துகள்கள் உணவாக அளிக்கப்பட்டன. பின்னர் அவை சாகும் வரை அவற்றை கண்காணித்தனர்.  பின்னர் … Read more

‘‘மறப்போம் மன்னிப்போம்’’ -ஜமால் கஷோகி படுகொலைக்குப் பின்பு முதன்முறை பயணம்: பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் துருக்கிக்கு உதவும் சவுதி இளவரசர்

அங்காரா: பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலைக்குப் பிறகு துருக்கி நாட்டிற்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் முதன்முறையாக பயணம் மேற்கொண்டார். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் துருக்கி, ஜமால் கஷோகி படுகொலையை மறந்து சவுதியின் உதவியை கைகுலுக்கி வரவேற்றுள்ளது. சவுதி அரேபியா அரசையும் அந்த நாட்டு மன்னர் மற்றும் இளவரசர்களையும் கடுமையாக விமர்சித்து கட்டுரைகளை எழுதி வந்தவர் புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஜமால் கஷோகி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி … Read more