உக்ரைனிலிருந்து 20 லட்சம் பேர் வெளியேறினர்| Dinamalar

மாஸ்கோ: உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா தற்போது கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதி மீது தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதனால் டொ னெட்ஸ்க், லுகான்ஸ்க் பகுதியைச் சேர்ந்த 20 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். உக்ரைன் புகைப்பட பத்திரிகையாளர் மாக்ஸ் லெவினும், வீரர் ஒலக்சிய் செர்னிஷோவும் போரின் ஆரம்ப காலத்தில் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக பத்திரிகை சுதந்திர குழுவான எல்லையில்லா நிருபர்கள் குழு நடத்திய விசாரணையில் அவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது … Read more

அமேசானின் அலெக்சாவில் குரலை பிரதிபலிக்கும் அம்சம் விரைவில் அறிமுகம்.!

எந்த குரலையும் பிரதிபலிக்கும் வகையிலான அம்சத்தை அலெக்சாவில் அமேசான் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. “நினைவுகளை பாதுகாப்பதற்கான” ஒரு அம்சத்தை அமேசான் அலெக்சா பயன்பாட்டில் கொண்டுவர இருக்கிறது. நிறுவனத்தின் வருடாந்திர நிகழ்வில் அமேசான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குரலை அப்படியே அந்தக் குரலின் தன்மை மாறாமல் மிமிக் செய்யும் வகையில் அலெக்சாவை வடிவமைக்க உள்ளது. ஒரு நிமிடத்திற்கும் குறைவான ஆடியோப் பதிவை கேட்கும் அலெக்சா அதே குரலை பிரதிபலித்து பயனர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இந்த … Read more

மலேஷியா வரும் தொழிலாளர் நலன் பாதுகாக்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு| Dinamalar

ராமநாதபுரம்: ”மலேஷியா வரும் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளம், இருப்பிட வசதி ஆகியவற்றை உறுதி செய்து, அவர்களின் நலன் பாதுகாக்கப்படும்,” என, அந்நாட்டு தகவல், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ சரவணன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மலேஷியா வாழ் தொழிலதிபர்கள் சந்திப்பு, ராமநாதபுரத்தில் நேற்று நடந்தது. இதில், அந்நாட்டு அமைச்சர் டத்தோ சரவணன் கூறியதாவது: மலேஷியாவில் கொரோனா காலகட்டத்திற்கு பின், தற்போது நிலைமை சீராகி உள்ளது. இந்தியா, சீனா, வங்கதேசம், தாய்லாந்து, பாகிஸ்தான், … Read more

30 ஆண்டில் இல்லாத அளவுக்கு ரயில்வே ஸ்டிரைக் : லட்சக்கணக்கான பயணிகள் அவதி

பிரிட்டனில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரே நேரத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், ரயில் சேவை முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் உயர்ந்துள்ளதால், விலைவாசி உயர்வு கடுமையாக உயர்ந்துள்ளது. தொழிற்சங்கங்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் முக்கிய ரயில் நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால், லட்சக்கணக்கான பயணிகள் தவித்து வருகின்றனர்.  … Read more

வங்காளதேசத்தை புரட்டிப்போட்ட வெள்ளம் – பலி எண்ணிக்கை 68 ஆக உயர்வு

வங்காள தேசத்தில் கொட்டித் தீர்த்த கனமழை பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் பருவமழை வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. சிலேட் உள்ளிட்ட மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், படகுகள் மூலம் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏராளமானோர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், சிலர் விஷப் பாம்புக் கடி மற்றும் மின்னல் காரணமாக உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். Source link

பிரேசில் முன்னாள் அழகி 27 வயதில் மரணம்| Dinamalar

பிரேசிலியா : தொண்டையில் வளர்ந்த சதையை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சைக்குப் பின் மூளையில் ரத்தக்கசிவு மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு பிரேசிலின் முன்னாள்அழகி கிளேய்சி கார்ரியா 27, சமீபத்தில் உயிரிழந்தார். தென் அமெரிக்கநாடான பிரேசிலை சேர்ந்தவர் கிளேய்சி கார்ரியா. இவர் 2018ல் நடந்த அழகி போட்டியில் பிரேசில் அழகி பட்டம் வென்றார். அதன் பின் பல்வேறு விளம்பர படங்களில் நடித்து பிரபலமானார். அழகு கலை நிபுணராகவும் 56 ஆயிரம் பேர் பின் தொடரும் ‘இன்ஸ்டாகிராம்’ பிரபலமாகவும் உள்ளார். சில … Read more

ஒற்றைக்காலில் நின்றால் நீண்ட காலம் வாழலாம்?| Dinamalar

ரியோடிஜெனீரோ :ஒற்றைக் காலில் குறைந்தபட்சம், 10 வினாடிகள் நிற்கத் திணறும் 50 வயதினருக்கு, 10 ஆண்டுகளுக்குள் மரணம் ஏற்படும் ஆபத்து உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.பிரிட்டனைச் சேர்ந்த, ‘ஸ்போர்ட்ஸ் மெடிசன்’ என்ற பத்திரிகை உடல் நலம் சார்ந்த ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:பிரேசிலில், 50 வயதினரின் உடல் திடகாத்திரம் குறித்து, 1,702 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதை, பிரேசில், அமெரிக்கா, பின்லாந்து, ஆஸ்திரேலியா, பிரிட்டனைச் சேர்ந்த அறிஞர்கள் மேற்கொண்டனர்.இதில் பங்கேற்றவர்களிடம், கைகளை மேலே துாக்கி, ஒரு காலை … Read more

சிங்கப்பூரில் காதலியை தாக்கிய இந்திய வம்சாவளிக்கு சிறை| Dinamalar

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு, காதலியை அடித்து, உதைத்து, கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென் கிழக்காசிய நாடான மலேஷியாவில் வசித்து வருபவர், பார்த்திபன். இந்திய வம்சாவளியான இவருக்கு, சிங்கப்பூரில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் மூன்று ஆண்டுகளாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பார்த்திபன் சிங்கப்பூர் வந்து அந்த பெண்ணுடன் இரண்டு மாதங்கள் வசித்துள்ளார். அதற்குள் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு உள்ளதாக பார்த்திபனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குடித்து விட்டு, அந்தப் … Read more

இலங்கை அதிபருடன் இந்திய குழு சந்திப்பு| Dinamalar

கொழும்பு:இந்திய வெளியுறவு செயலர் தலைமையிலான குழு, இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து, அந்நாட்டு அதிபர், பிரதமர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியது.நம் அண்டை நாடான இலங்கை அன்னியச் செலாவணி பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, மின் வெட்டு உள்ளிட்ட பல நெருக்கடிகளில் சிக்கி தத்தளித்து வருகிறது.’இலங்கை பொருளாதாரம் அடியோடு சீர்குலைந்து விட்டது’ என பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நேற்று முன்தினம் பார்லி.,யில் அறிவித்தார். இந்நிலையில், நம் வெளியுறவு துறை செயலர் வினய் கவத்ரா தலைமையிலான குழு, … Read more

நிலநடுக்க மீட்பு நடவடிக்கை: திணறி தவிக்கும் ஆப்கன்| Dinamalar

கயன்:ஆப்கன் நிலநடுக்கத்தில்சிக்கியவர்களை மீட்க போதுமான இயந்திர வசதிகள் இல்லாததால், கைகளால் மண் குவியலை அகற்றி உள்ளே சிக்கியோரை மீட்கும் பணி நடந்து வருகிறது.தெற்காசிய நாடான ஆப்கனின் கோஸ்ட் நகரில், நேற்று முன்தினம் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 1,000க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலிபான் அரசு ஒப்புதல் இங்கு, இறந்து போனவர்களின் உடல்களை மீட்கவும், இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடுவோரை உடனடியாக காப்பாற்றவும் முடியாத நிலை உள்ளது. கிராம மக்கள் கைகளால் மண் … Read more