நியூயார்க்கில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 100 சட்டவிரோத பைக்குகள் மீது புல்டோசர் ஏற்றி சிதைக்கப்பட்ட சம்பவம் – வைரல் வீடியோ

நியூயார்க், நியூயார்க் போலீசாரால் கைப்பற்றப்பட்ட கிட்டத்தட்ட 100 சட்டவிரோத பைக்குகள் மற்றும் பிற வாகனங்கள் மற்றும் பிற சட்டவிரோத மோட்டார் சைக்கிள்கள் நேற்று புல்டோசர் மூலம் இடித்து தூள் தூளாக்கப்பட்டன. இந்த சம்பவத்தை நியூயார்க நகர நிர்வாகம் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளது. மேயர் அலுவலகம் தரப்பில் பேஸ்புக்கில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், புரூக்ளினில் உள்ள எரி பேசின் வாகன பார்க்கிங் இடத்தில், புல்டோசரின் அடியில், 92 சட்டவிரோத வாகனங்கள் தூள் தூளாக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. மேயர் எரிக் … Read more

“இந்தியாவும், சீனாவும் ரஷ்ய எண்ணெயை அதிக அளவில் வாங்கக்கூடும்” – அமெரிக்கா

அமெரிக்கா எதிர்பார்த்ததை விட இந்தியாவும், சீனாவும் ரஷ்ய எண்ணெயை அதிக அளவில் வாங்கலாம் என்பதால், சர்வதேச சந்தையில் விநியோக நெருக்கடி தணித்து விலை குறைந்துள்ளதாக அதிபர் ஜோ பைடனின் பொருளாதார ஆலோசகர் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது இம்மாத தொடக்கத்தில் பேரலுக்கு 122 டாலர்களாக இருந்த நிலையில், தற்போது 105 டாலர்கள் என்ற அளவிற்கு குறைந்துள்ளது. இது குறித்து தெரிவித்த பைடனின் பொருளாதார ஆலோசகர்கள் குழுவின் தலைவரான சிசிலியா, தற்போது கச்சா எண்ணெய் சந்தை … Read more

அறுவை சிகிச்சை செய்து கொண்ட முன்னாள் பிரேசில் அழகி மரணம்

மெகே 2018ஆம் ஆண்டு மிஸ் பிரேசில் பட்டம் வென்ற அழகி கிளெய்சி கொரிய்யா. தென்கிழக்கு நகரமான மெகேயில் ஒப்பனை நிரந்தர ஒப்பனை நிபுணராகப் பணிபுரிந்து வந்தார். சில மாதங்களுக்கு முன் டான்சில் பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அடுத்த 5 நாட்களில் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிளெய்சிக்கு ஏப்ரல் மாதம் மாரடைப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து 2 மாதங்களாக கோமா நிலையில் இருந்த கிளெய்சி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட … Read more

அமேசான் நிறுவனத்தில் சுயமாக செயல்படும் ரோபோக்கள் அறிமுகம்.. பொருட்களை ஏற்றும் ட்ராலிகளை கையாளுவதில் கன கச்சிதம்..!

மின்னனு வர்த்தகத்தில் தலைசிறந்து விளங்கும் அமேசான் நிறுவனம் முழுவதும் சுயமாக இயங்கும் டெலிவரி ரோபோக்களை அறிமுகம் செய்துள்ளது. அந்நிறுவனத்தின் பொருட்களை அனுப்பி வைக்கும் பிரிவில் இந்த ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெரிய டிஸ்க் வடிவத்தில் காணப்படும் இந்த ரோபோக்கள், பொருட்கள் அடுக்கப்பட்ட டிராலிகளை கொண்டுவருவது, காலி டிராலிகளை கொண்டு வந்து சேர்ப்பது போன்ற பணிகளை கனகச்சிதமாக செய்கின்றன. பேட்டரியால் இயங்கும் இந்த ரோபோக்களில் சார்ஜ் குறைந்தால் தானாகவே சென்று மின்இணைப்பில் பொருந்தி, அவை சார்ஜ் ஏற்றிக்கொள்கின்றன. … Read more

Viral Marriage: பொம்மையை கல்யாணம் செய்த பெண்: குழந்தையும் பிறந்தது

37 வயதான பெண் ஒருவர் பொம்மையை ‘திருமணம்’ செய்துக் கொண்டார். தற்போது குழந்தையும் பிறந்துள்ளது. அதிசயமான செய்தியாக இது வைரலாகிறது.  பிரேசிலை சேர்ந்த பெண் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட மார்செலோ ரோச்சா மோரேஸ் (Meirivone Rocha Moraes) என்ற பெண் பொம்மையை திருமணம் செய்துக் கொண்டார். தனது கணவரின் வருகை, வாழ்க்கையை முழுமையடையச் செய்ததாக  அவர் தெரிவிக்கிறார்.  தன் திருமண வாழ்க்கை சிறப்பானதாக இருப்பதாக அவர் சொல்கிறார். காதல் என்பது மிக அழகான உணர்வு என்று சொல்லும் இந்த … Read more

ரயில் நிலையத்தில் திடீரென மயங்கி தண்டவாளத்தில் விழுந்த பெண்.. துரிதமாக செயல்பட்டு பெண்ணை காப்பாற்றிய காவலர்..!

நியூ யார்க் நகரில் உள்ள பே பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் திடீரென மயங்கி தண்டவாளத்தில் விழுந்த பெண்ணை, காவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய வீடியோ வெளியாகியுள்ளது. பிளாட்பாரத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்த அந்த பெண், ரயில் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன் மயங்கி தண்டவாளத்தில் விழுந்துள்ளார். இதனைக் கண்ட காவலர், துரிதமாக செயல்பட்டு மற்றொரு காவலரின் உதவியுடன் மேலே தூக்கி காப்பாற்றிய காட்சிகள், காவலரின் உடையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. Source link

நீச்சல் குளத்திற்குள் மயக்கமடைந்து மூழ்கிய வீராங்கனையை, குளத்திற்குள் குதித்து மீட்ட பெண் பயிற்சியாளர்..!

ஹங்கேரியில், நீச்சல் போட்டியின் போது நினைவிழந்து நீருக்குள் மூழ்கிய வீராங்கனையை அவரது பெண் பயிற்சியாளர் மின்னல் வேகத்தில் நீச்சல் குளத்திற்குள் குதித்து மீட்டார். தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பங்கேற்ற அனிட்டா அல்வாரஸ் என்ற அந்த அமெரிக்க வீராங்கணை, போட்டி முடிந்ததும் நீச்சல் குளத்திலேயே மூழ்கத் தொடங்கியுள்ளார். இதனை கவனித்த அவரது பயிற்சியாளர் ஆண்டிரியா ஃபுயெண்டஸ் பாதுகாவலர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அவர்கள் புரியாமல் விழிக்க அந்த பெண்ணே நீச்சல் குளத்திற்குள் குதித்து மயங்கிய நிலையில் நீருக்கடியில் … Read more

சந்தையில் ஏலம் விடப்படும் சிறுமிகள்: மாடுகளை கொடுத்து மணமகள்களை வாங்கும் அவலம்!

உலகம் முழுவதும் திருமண சடங்கு என்பது பல விதமாக நடைபெற்றாலும் அவை அனைத்தும் பெண்களின் வாழ்வியல் சூழலையும், வளர்ச்சியையும் பாதிக்கும் வகையில்தான் அமைகிறது. குழந்தை திருமணம், வரதட்சனை கொடுமைகள் உள்ளிட்ட அனைத்தும் பெண்களை நோக்கியே நகர்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளை பெற்றுதருவற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட பெண்கள், இன்றைய காலகட்டத்தில் உலகின் அனைத்து துறைகளிலும் கால் பதித்து அசாத்தியமான சாதனைகளை புரிந்து வருகிறார்கள். இருப்பினும் பெண்கள் மீதான பொருளியல் பார்வை மறைமுகமாக மனிதர்கள் மத்தியில் இன்றும் … Read more

புதுப்பொலிவுடன் மீண்டும் திரைக்கு வரும் டைட்டானிக் திரைப்படம்.!

உலகம் முழுவதும் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட டைட்டானிக் திரைப்படத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிவு அடுத்த ஆண்டு காதலர் தினத்தன்று வெளியிடப்படும் என கூறப்படுகிறது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த டைட்டானிக் திரைப்படம் பல ஆஸ்கர் விருதுகளை தட்டிச்சென்றது மட்டுமல்லாமல் வசூலிலும் சக்கை போடு போட்டது. இந்த திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதன் புதுப்பிக்கப்பட்ட முப்பரிமாண பதிவை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.  Source link

அம்மாடியோவ்! ஒரு தலையணையின் விலை இத்தனை லட்சங்களா?

நெதர்லாந்தைச் சேர்ந்தவர் டச்சு மருத்துவர் திஜ்ஸ் வான் டெர் ஹில்ஸ்ட் ( Thijs van der Hilst). பிசியோதெரப்பிஸ்ட் ஆன இவர் கடந்த 15 வருடங்களாக ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். இவரது ஆராய்ச்சியின் முடிவில் ஒரு பிரத்தியேகமான தலையணையை தயாரித்தார். இந்த தலையணையின் சிறப்பம்சம் என்னவென்றால் அதில் பயன்படுத்தப்பட்ட பருத்தி பஞ்சு எகிப்து தேசத்தில் இருந்து வரவழைக்கப்பட்டதாம். அதேபோல் பஞ்சுகளை அடைக்க மல்பெரி பட்டு நூலால் நெய்த பட்டுத்துணியை பயன்படுத்தியுள்ளனராம். இது என்ன பிரமாதம் என்று எண்ணுவோருக்கு … Read more