ஈக்வேடாரில் எரிபொருள் மற்றும் உணவு பொருட்களின் விலை உயர்வை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.!

தென் அமெரிக்க நாடான ஈக்வேடாரில் எரிபொருள் மற்றும் உணவு பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். புயோ நகரில் கட்டிடங்களை அடித்து நொறுக்கிய ஆர்ப்பாட்டக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலில் போலீசார் 6 பேர் காயமடைந்தனர். போலீசார் வீசிய கண்ணீர் புகை குண்டு தலையில் விழுந்ததில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் உயிரிழந்தார். Source link

Pornhub: ப்ரோன்ஹப் நிறுவனத்தின் உயரதிகாரிகள் திடீர் ராஜினாமா: அதிர வைக்கும் பின்னணி

நியூடெல்லி. உலகின் மிகப்பெரிய ஆபாச இணையதளமான Pornhub இன் தலைமை செயல் அதிகாரி (CEO) Ferrous Anton மற்றும் அந்த இணையதளத்தின் தலைமை இயக்க அதிகாரி (COO) ஆகியோர் பதவி விலகியுள்ளனர். அவர்களே தங்கள் விருப்பப்படி ராஜினாமா செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த செய்தி மிகவும ஆச்சரியமானதாக இருக்கிறது. இந்த பதவி விலகலுக்கு பின் இருக்கும் காரணம் என்ன? ராஜினாமா ஏன்? வயது வந்தோருக்கான பொழுதுபோக்கு போர்ட்டலான Pornhub இன் தாய் நிறுவனம் MindGeek இன் CEO ஃபெரஸ் அன்டன் … Read more

பிரேசிலில் அழகி பட்டம் வென்ற 27 வயது இளம்பெண்.. உடல் உபாதைகளால் உயிரிழந்தார்.!

பிரேசில் நாட்டில் அழகி பட்டம் வென்ற 27 வயது இளம்பெண், டான்சில அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து ஏற்பட்ட உடல் உபாதைகளால் உயிரிழந்தார். 2018ஆம் ஆண்டு மிஸ் பிரேசில் பட்டம் வென்ற கிளெய்சி கொரெய்யா  சில மாதங்களுக்கு முன் டான்சில் பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அடுத்த 5 நாட்களில் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிளெய்சிக்கு ஏப்ரல் மாதம் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து 2 மாதங்களாக கோமா நிலையில் இருந்த கிளெய்சி சிகிச்சை … Read more

அமெரிக்காவில் துப்பாக்கிகளுக்குக் கட்டுப்பாடு : செனட் சபையில் மசோதா நிறைவேற்றம்

அமெரிக்காவில் தனிநபர் துப்பாக்கி வைத்திருக்க அனுமதி உள்ள நிலையில், அங்கு அண்மையில் அதிகரித்து வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் துப்பாக்கி பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. அதே சமயம் துப்பாக்கி வைத்திருப்பது தனி நபரின் உரிமை என்ற கருத்தும் ஒருபுறம் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருக்க கூடுதல் கட்டுப்பாடு விதிக்கும் மசோதா, செனட் சபையில் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 64 வாக்குகளும், எதிராக 34 வாக்குகளும் பதிவாகின. இதனையடுத்து … Read more

அமெரிக்காவில் ஓடும் ரயிலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு.!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில், ஓடும் ரயிலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முனி ஃபாரஸ்ட் ஹில் ஸ்டேஷனில் இருந்து காஸ்ட்ரோ ரயில் நிலையத்தை நோக்கிச் சென்ற ரயிலில் இந்நிகழ்வு நடந்ததாகவும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தப்பிச் சென்றுவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரத்தில் ஒருவர் மற்றொருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சான் பிரான்சிஸ்கோ ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன … Read more

இந்திய, ஆஸ்திரேலியா பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் வலுவடைந்து நெருக்கம் பெறவேண்டும் – ஆஸ்திரேலிய துணைப்பிரதமர்!

இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்புகள் மேலும் வலுவடைந்து நெருக்கம் பெற வேண்டும் என்று இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய துணைப்பிரதமரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர் இதனை தெரிவித்துள்ளார். Source link

உலகின் மிக அழகான பெண் என்கிற பெருமையை பெற்றார் ஆம்பர் ஹெர்ட்!

லண்டனில் உள்ள மேம்பட்ட முக ஒப்பனை மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மையத்தைச் சேர்ந்த டாக்டர் ஜூலியன் டி சில்வா, அறிவியலின் படி உலகின் மிக அழகான பெண் ஆம்பர் ஹெர்ட் என்று அறிவித்தார்.  டாக்டர் ஜூலியன் டி சில்வா, 2016 ஆம் ஆண்டில், உலகின் மிக அழகான முகம் யாருடையது என்பதைக் கண்டறிய ‘PHI’ என்ற பழங்கால முக மேப்பிங் நுட்பத்தைப் பயன்படுத்தினார்.  மேலும் அவரது ஆராய்ச்சிக்குப் பிறகு, நடிகர் ஆம்பர் ஹியர்ட் ‘உலகத்திலேயே மிக … Read more

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானை உலுக்கிய 6.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும், மிக மோசமான கால கட்டங்களில் அந்நாட்டு மக்களுக்கு இந்தியா துணையாக இருப்பதாகவும், தேவையான அனைத்து நிவாரணப் பொருள்களையும் விரைந்து வழங்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். … Read more

இந்தியா, சீனாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரிப்பு – அதிபர் புதின்

இந்தியா மற்றும் சீனாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளதாக ரஷ்ய  அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான போருக்குப் பிறகு ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய மேற்கத்திய நாடுகள் மறுத்து விட்டன. கடுமையான பொருளாதார நெருக்கடியும் ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா தொடர்ந்து ரஷ்யாவின் நட்பு நாடாக நீடித்து வருகிறது.சீனாவின் தலைமையில் நடைபெறும் 14வது பிரிக்ஸ் வர்த்தக மாநாட்டை ஒட்டி காணொலியில் பேசிய புதின், பிரிக்ஸ் குழும நாடுகளிடையே பரஸ்பர வர்த்தகம் … Read more

பணப் பற்றாக்குறை: சீனாவிடமிருந்து 2.3 பில்லியன் டாலர் கடன் வாங்கியது பாகிஸ்தான்

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் சீனாவிடமிருந்து 2.3 பில்லியன் டாலர் கடன் ஒப்பந்த பத்திரம் மூலம் கடன் பெற்றது. இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் அந்நாடுகளை அரசியல் நெருக்கடியை நோக்கி கொண்டு செல்லும் நிலையில் இதன் பின்னணியில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டமும், அதன் மூலம் கொடுக்கப்பட்ட கடன்களும் மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் தற்போது மீண்டும் சீனாவிடம் 2.3 பில்லியன் டாலர் அளவுக்கு கடன் வாங்கியுள்ளது. … Read more