கார்கிவில் ரஷ்ய படைகள் குண்டுவீசித் தாக்குதல் – 8 வயது குழந்தை உட்பட 15 பேர் பலி

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் ரஷ்ய படைகள் நிகழ்த்திய குண்டுவீச்சு தாக்குதலில் 8 வயது குழந்தை உட்பட 15 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான போர் 5 மாதங்களை நெருங்கி விட்ட நிலையில், கிழக்கு உக்ரைனைக் கைப்பற்றும் முயற்சியில் ஆயிரக்கணக்கான வீரர்களை குவித்து ரஷ்யா கடும் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில், வடகிழக்கு உக்ரைனின் நான்கு வெவ்வேறு இடங்களில் நடந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 16 பேர் … Read more

இலங்கை பொருளாதாரம் சீர்குலைவு | கச்சா எண்ணெய் வாங்க நிதி இல்லை – பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு

கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கையில் மக்கள் போராட்டத்தால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகினார். அதன்பின், ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பொறுப்பேற்றார். இந்நிலையில், இலங்கையின் நிதி அமைச்சர் பொறுப்பையும் விக்ரமசிங்கே வகித்து வருகிறார். நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். நாடு மிகப்பெரும் கடன் சுழலில் சிக்கியுள்ளது. இலங்கையின் சுற்றுலா துறை வருமானமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கரோனா பாதிப்பு பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக … Read more

வீட்டினுள் புதைந்து கிடந்த ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லறை கண்டெடுப்பு.!

தென் அமெரிக்க நாடான பெருவில் வீட்டினுள் புதைந்து கிடந்த ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்து உள்ளனர். கல்லறையில் இருந்த உடலைச் சுற்று சில்வர் மற்றும் தாமிரம் உலோகம் கொண்டு போர்த்தப்பட்டு இருந்ததாகவும், இன்கா பேரரசை சேர்ந்த செல்வ செழிப்புடையை குடும்பத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வீட்டு பராமரிப்பு பணியின் போது கல்லறை கண்டெடுக்கப்பட்ட நிலையில், சுற்றுவட்டார பகுதிகளில் இன்கா பேரரசின் எச்சங்கள் உள்ளதா என ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.    … Read more

6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ஆப்கானிஸ்தானில் 920 பேர் உயிரிழப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 920 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்று காலையில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து சுமார் 44 கி.மீ. தொலைவில் பூமியில் 51 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவிக்கிறது. 600-க்கும் மேற்பட்டோர் காயம் இந்த நிலநடுக்கத்தால் கோஸ்ட் மற்றும் பக்திகா மாகாணங்களில் … Read more

சரக்கு போக்குவரத்துக்கு தடை விதித்த லிதுவேனியாவுக்கு ரஷ்யா எச்சரிக்கை – 3-ம் உலகப் போருக்கு வழிவகுக்குமா?

மாஸ்கோ: இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜெர்மனியிடம் இருந்து கலினின்கிரேடு பகுதியை ரஷ்யா தன் வசமாக்கி கொண்டது. எனினும், ரஷ்யாவுடன் இணைந்த ஒரே நிலப்பரப்பாக இல்லாத கலினின்கிரேடு பகுதி, நேட்டோ உறுப்பு நாடுகளாக உள்ள போலந்து – லிதுவேனியாவுக்கு இடையில் பால்டிக் கடல் பகுதியை ஒட்டியுள்ளது. கலினின்கிரேடு பகுதிக்கு லிதுவேனியா வழியாக ரயிலில் சரக்குப் போக்குவரத்தும் காஸ் குழாய்களையும் ரஷ்யா கொண்டு செல்கிறது. இந்நிலையில், உக்ரைன் மீது போர் தொடுத்ததால், ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார … Read more

கனரக வாகனங்களை விழுங்கும் அளவுக்கு 20 அடி ஆழத்திற்கு ஏற்பட்ட திடீர் பள்ளம்

லண்டனில் கனரக வாகனங்களையே விழுங்கும் அளவுக்கு சாலையில் திடீரென 20 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இரவில் தீடிரென ஏற்பட்ட பள்ளத்தில் இரு சக்கர வாகன ஒட்டி தலைகுப்புற விழுந்து விபத்துள்ளானார். மேற்கொண்டு வாகனங்கள் விழாமல் இருக்க சாலை மூடப்பட்ட நிலையில், சீரமைப்பு பணி தொடர்கிறது. Source link

உலகம் முழுவதும் 2,500-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி.!

உலகம் முழுவதும் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சிங்கப்பூர் மற்றும் தென்கொரியாவில் முதல் முறையாக குரங்கம்மை பாதிப்பு பதிவாகியுள்ளது அந்நாட்டினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டனில் இருந்து சிங்கப்பூர் வந்த நபருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஜெர்மனியில் இருந்து தென்கொரியாவிற்கு திரும்பிய நபருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. Source link