கடலில் மூழ்கிய ஜம்போ கிங்டம் ஹோட்டல் கப்பல்.. ஹாங்காங் மக்கள் வருத்தம்..!

ஹாங்காங்கின் பெருமைக்குரிய அடையாளமாக திகழ்ந்த ஜம்போ கிங்டம் ஹோட்டல் கப்பல், கடலில் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன அரண்மைனை போன்ற தோற்றத்தில் இருந்த அந்த புகழ்பெற்ற கப்பல் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்தது. ஆனால், இதன் பராமரிப்பு செலவினால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த கப்பல் அண்மையில் துறைமுகத்திலிருந்து அகற்றப்பட்டது. இழுவை படகுகள் மூலம் இழுத்துச்செல்லப்பட்ட அந்த கப்பல் பாரசெல் தீவுக்கு அருகே கடலில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஹாலிவுட் திரைப்படங்களிலும், பல உலக பிரபலங்களின் … Read more

3ம் உலகப் போர் ஏற்பட்டால் பிரிட்டன் முழுமையாக அழிக்கப்படுவது உறுதி – ரஷியாவின் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் எச்சரிக்கை !

மாஸ்கோ, மூன்றாம் உலகப் போர் ஏற்பட்டால் பிரிட்டன் முழுமையாக அழிக்கப்படுவது உறுதி என்று ரஷியாவின் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் ஈவ்ஜெனி புஷ்கின்ஸ்கை எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரிட்டனில் புதிய ராணுவ தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள சர் பேட்ரிக் சாண்டர்ஸ், 3-ம் உலகப் போரில் ரஷியாவைத் தோற்கடிக்க வேண்டும் என்று படை வீரர்களுக்கு அறைகூவல் விடுத்திருந்தார். இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள ரஷிய அதிபர் புதினின் ஆதரவாளரும் ஓய்வு பெற்ற ராணுவ தளபதியுமான ஈவ்ஜெனி, மூன்றாம் உலகப்போரின் விளைவாக பிரிட்டன் … Read more

உலகின் மிக அழகான முக அமைப்பை கொண்டவர்கள் இவர்கள்தானாம்.. லண்டன் நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்.!

ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பாட்டின்சனும், நடிகை ஆம்பர் ஹெர்டும் உலகின் மிக அழகான முக அமைப்பை கொண்டுள்ளதாக லண்டனை சேர்ந்த முக அறுவை சிகிச்சை மையம் தெரிவித்துள்ளது. முக அமைப்பு குறித்து இந்நிறுவனம் கிரேக்க பாரம்பரிய PHI முறையில் நடத்திய ஆய்வில், ராபர்ட் பாட்டின்சனை தொடர்ந்து, ஹென்றி கேவிலும், ஆம்பர் ஹெர்டை தொடர்ந்து, கிம் கர்தாஷியனும் அழகான முக அமைப்பை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. Source link

சர்வதேச நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை தங்கம் வென்று சாதனை..!

ஹங்கேரியின் புத்தபெஸ்ட் நகரில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில், 1,500 மீட்டர் freestyle பிரிவில் அதிவேகமாக நீந்திய அமெரிக்க வீராங்கனை கேட்டி லெடக்கி தங்கம் வென்று சாதனை படைத்தார். போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கேட்டி, சகபோட்டியாளர்களை காட்டிலும் வேகமாக நீந்தி, எல்லை கோட்டை 15 நிமிடம் 30 புள்ளி 15 விநாடிகளில் கடந்தார். எல்லைக்கோட்டை தொட்ட அவர், சக போட்டியளர்களுக்காக காத்திருக்க வேண்டி இருந்தது.   Source link

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,000 ஆக அதிகரிப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1,000 ஆக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று (புதன்கிழமை) காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து சுமார் 44 கிமீ (27 மைல்) தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகளால் 1000 பேர் வரை பலியானதாகவும், 1,500 பேர் வரை காயமடைந்து இருப்பதாகவும் அங்கிருந்து வரும் … Read more

தண்டவாளத்தை கடக்க முயற்சித்து நின்ற காரை இடித்து தள்ளிவிட்டு சென்ற ரயில்..!

கனடாவின் டொரோண்டோவில் தண்டவாளத்தை கடக்க முயற்சித்து நின்ற காரை, ரயில் இடித்து தள்ளிய வீடியோ வெளியாகியுள்ளது. ரயில்வே கேட் மூடப்பட்டிருந்த நிலையில், கார் ஓட்டுநர், ரயில் வருவதற்குள் தண்டவாளத்தை கடந்துவிடலாம் என நினைத்து முன்னேறி சென்றார். திடீரென ரயில் வருவதை பார்த்த ஓட்டுநர், தண்டவாளம் அருகே காரை நிறுத்தினார். அதிவேகமாக வந்த ரயில் காரை இடித்து தள்ளிவிட்டு சென்றது.  Source link

அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசகர் – இந்திய வம்சாவளி பெண் நியமனம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆர்த்தி பிரபாகர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதன் மூலம் அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை ஆர்த்தி பிரபாகர் பெற்றுள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: அதிபர் பைடன் முனைவர் ஆர்த்தி பிரபாகரை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கைக்கான அலுவலகத்தின் இயக்குநராக நியமனம் செய்துள்ளார். மேலும், அவரது பொறுப்பு … Read more

ஆப்கன் நிலநடுக்கம்: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 920 ஆக அதிகரிப்பு – மீட்பு பணிகள் தீவிரம்!

ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு நகரமான கோஸ்டில் இருந்து 44 கி.மீ தொலைவில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இந்த நிலநடுக்கம் 6.1-ஆக பதிவானது. சுமார் 51 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய மத்தியதரைக் கடல் நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், சுமார் 500 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலிலும், பாகிஸ்தானின் … Read more

தரையிறங்கிய பின் தீப்பிடித்த விமானம்; மனம் பதற வைக்கும் வீடியோ

மியாமி சர்வதேச விமான நிலையத்தில், விமானம் ஒன்று தரையிறங்கிய பின் தீப்பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரையிறங்கும் கியர் செயலிழந்ததால், ரெட் ஏர் விமானம் 203 ஓடுபாதையில் விபத்துக்குள்ளானது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.  செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) விமானம் டொமினிகன் குடியரசின் சாண்டோ டொமிங்கோவில் இருந்து வந்து கொண்டிருந்த நிலையில், இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நேரிட்டுள்ளது. … Read more

காரின் ஜன்னல் ஓரத்தில் நின்று கொண்டு கிளி உல்லாச பயணம்

காரின் ஜன்னல் ஓரத்தில் நின்று கொண்டு கிளி ஒன்று உற்சாகமாக பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஒவ்வொரு பயணமும் இனிமையாக அமைய வேண்டும் என்பது பலரின் விருப்பமாக இருக்கும் நிலையில், சுதந்திரக் காற்றை சுவாசிப்பது போல் இந்த கிளியும் தனது பயணத்தை உல்லாசமாக மேற்கொண்டது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. Source link