ஒற்றுமையை ஏற்படுத்தும் யோகா ஐ.நா., பொது சபை தலைவர் பாராட்டு| Dinamalar

நியூயார்க்:”ஆரோக்கியமான மற்றும் வளமான எதிர்காலத்தை தரும், ஒற்றுமையை ஏற்படுத்தும் வலிமை யோகாவுக்கு உள்ளது,” என, ஐ.நா., பொது சபையின் தலைவர் அப்துல்லா ஷாகித் தெரிவித்தார். எதிர்காலம்எட்டாவது சர்வதேச யோகா தினம் நேற்று உலகெங்கும் கொண்டாடப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா., சபையில், இதற்கான ஏற்பாடுகளை, ஐ.நா.,வுக்கான இந்தியத் துாதர் டி.எஸ். திருமூர்த்தி ஏற்பாடு செய்திருந்தார்.பல நாடுகளின் துாதர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விழாவில், ஐ.நா., பொது சபையின், 76வது கூட்டத்தின் தலைவராக உள்ள, மாலத்தீவின் வெளியுறவு அமைச்சர் … Read more

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட இந்தியர் உயிர் பிழைத்தார்| Dinamalar

துபாய்:ஐக்கிய அரபு எமிரேட்சில், அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய இந்தியர், 18 நாள் தொடர் சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார்.ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர் லால்டேலு ராம் ஹர்கேஷ், 52. இவர், வளைகுடா நாடுகளில் ஒன்றான, ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில், ‘போர்மேனாக’ பணியாற்றி வருகிறார்.இவருக்கு சில நாட்களுக்கு முன் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. வாயு தொல்லை என நினைத்து உதாசீனப்படுத்தினார். சில நாட்களுக்கு பின் காய்ச்சல் ஏற்பட்டது. டாக்டர்களை அணுகிய போது, சந்தேகத்தின் … Read more

ஒரே நாளில் இரு பெண்களை திருமணம் செய்த வாலிபர்| Dinamalar

ராஞ்சி,:ஜார்க்கண்ட்டில் ஒரு இளைஞர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டார். ஜார்க்கண்ட்டின் பாண்டா கிராமத்தில் வசிக்கும் சந்தீப் ஓரான் என்பவர், அதே ஊரில் வசிக்கும் குசும் லக்ரா என்ற பெண்ணுடன் மூன்று ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்தார். இந்த ஜோடிக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில், சந்தீப் சில மாதங்களுக்கு முன் மேற்கு வங்கத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு வேலை பார்த்த சுவாதி குமாரி என்ற பெண் மீது சந்தீப் … Read more

மாலத்தீவு யோகா நிகழ்வில் வன்முறை| Dinamalar

மாலே:தெற்காசிய நாடான மாலத்தீவில், இந்திய துாதரகம் சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தலைநகர் மாலேவில் நடந்த யோகா நிகழ்வில், துாதரகம் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட, 150க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். அப்போது, மைதானத்திற்குள் புகுந்த ஒரு கும்பல், யோகாவில் ஈடுபட்டோர் மீது தாக்குதல் நடத்தியது. அங்கிருந்த பொருட்களை சூறையாடியது. வன்முறையில் ஈடுபட்டோரை கலைக்க, போலீசார் கண்ணீர் புகை குண்டுகள், ‘பெப்பர் ஸ்பிரே’ ஆகியவற்றை பயன்படுத்தினர்.இந்த சம்பவம் தொடர்பாக, ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். … Read more

வேட்டையாட வந்தவரை வேட்டையாடிய கரடி.. பழிக்கு பழித்தீர்த்த சம்பவம்.!

ரஷ்யாவின் சைபீரியா மாகாணத்தில் தன்னை வேட்டையாட வந்தவரை கரடி திடீரென்று பாய்ந்து தாக்கி கொன்றுள்ளது. 62 வயதுடைய வேட்டைக்காரர், துலுன் மாவட்ட வனப்பகுதிக்குள் சென்று கரடியை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடினார். கரடி இறந்துவிட்டதாக நம்பி, மரத்தில் இருந்து இறங்கி வந்த வேட்டைக்காரர் அதன் அருகில் சென்று பார்த்தார். அப்போது, இறந்தது போல் நடித்த கரடி, திடீரென்று பாய்ந்து வேட்டைக்காரரை தாக்கி பழிக்குப் பழி தீர்த்து கொன்றது. பின்னர், அந்த கரடியையும் அதே இடத்தில் உயிரிழந்தது. Source link

பாரசீக வளைகுடாவில் அமெரிக்க போர்க்கப்பலை இடைமறித்த ஈரான் கடற்படை படகு; எச்சரிக்க துப்பாக்கிச்சூடு

தெஹ்ரான், வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் தினமும் பல கப்பல்கள் பாரசீக வளைகுடா பகுதியில் வழியாக அரபிக்கடலில் பயணம் மேற்கொள்கிறது. இந்த கப்பல்களின் பாதுகாப்பிற்காக அமெரிக்க கடற்படையின் போர் கப்பல்களும் அதேபகுதியில் பயணம் மேற்கொள்கின்றன. இந்நிலையில், வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு பாரசீக வளைகுடாவின் கடல் பகுதியில் எண்ணெய் கப்பல்கள் இன்று வழக்கபாக பயணித்துக்கொண்டிருந்தன. இந்த கப்பல்களுக்கு பாதுகாப்பிற்காக அமெரிக்க போர் கப்பலும் உடன் பயணித்து. பாரசீக வளைகுடாவின் ஸ்ரிட் ஜலசந்தி பகுதியில் கப்பல்கள் … Read more

சீனாவின் பெய்டெய்ஹே நகரத்திற்குள் டெஸ்லா கார்கள் நுழைய தடை.. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என செய்தி வெளியீடு!

சீனாவின் கடற்கரை நகரமான பெய்டெய்ஹேவிற்குள் ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை டெஸ்லா கார்கள் நுழைய தடைசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் பிரிட்டனில் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹெபே மாகாணத்தில் ஜூலை இறுதியில் தொடங்கும் கோடைக்கால உச்சி மாநாட்டில் டெஸ்லா கார்களில் பொருத்தப்பட்டுள்ள 8 கேமராக்கள், மில்லிமீட்டர் அலை ரேடார் மற்றும் 12 அல்ட்ராசோனிக் சென்சார்கள் மூலம் உளவு பார்க்கப்படலாம் என்பதால் தடை விதிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக … Read more

பிறந்த குழந்தையின் தலை துண்டிப்பு; துண்டிக்கப்பட்ட தலை தாயின் வயிற்றிலேயே வைத்து தைத்த கொடூரம்

இஸ்லாமாபாத் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கிராமப்புற சுகாதார மையத்தின் ஊழியர்களின் அலட்சியத்தால், பிறந்த குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி துண்டிக்கப்பட்ட அந்தத் தலை தாயின் வயிற்றிலேயே வைத்துத் தைத்தும் உள்ளனர். இந்த காரணமாக 32 வயது இந்து பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதற்கு காரணமானவர்களைக் கண்டறிய மருத்துவ விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பேராசிரியர் ரஹீல் சிக்கந்தர் கூறியதாவது:- தார்பார்கர் மாவட்டத்தில் … Read more

ஹாங்காங்கின் பிரம்மாண்ட மிதக்கும் உணவகம் ஜம்போ கடலில் மூழ்கியது

ஹாங்காங்கின் புகழ் பெற்ற பிரம்மாண்ட மிதக்கும் உணவகம், ஜம்போ கடலில் மூழ்கிவிட்டதாக வெளியான அறிவிப்பு உலகெங்கிலும் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹாங்காங்கின் புகழ் பெற்ற பிரம்மாண்ட மிதக்கும் உணவகம், 1976 ஆம் ஆண்டு 3.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்டது. உலக பிரபலங்கள் பலரின் மனம் கவர்ந்த இந்த பிரம்மாண்ட ஹோட்டல் ஹாங்காங்கின் அடையாளமாக திகழ்ந்தது என்றால் மிகையில்லை. ஹாங்காங் வரும் பலரும் இந்த ஹோட்டலில் உணவருந்த வருவார்கள். சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்பும் இடமாக … Read more

ஆசியாவிலும் நுழைந்த குரங்கு அம்மை… லெபனானில் ஒருவருக்கு தொற்று கண்டுபிடிப்பு!

பொதுவாக ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் குரங்கு அம்மை நோய் தற்போது பல்வேறு நாடுகளுக்கு பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை மற்றும் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், போர்ச்சுகல், ஸ்பெயின் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அண்மையில் அறிவித்திருந்தது. இந்நிலையில், மேற்காசிய நாடுகளில் ஒன்றான லெபனானில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது … Read more