பிறந்த குழந்தையின் தலை துண்டிப்பு; துண்டிக்கப்பட்ட தலை தாயின் வயிற்றிலேயே வைத்து தைத்த கொடூரம்

இஸ்லாமாபாத் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கிராமப்புற சுகாதார மையத்தின் ஊழியர்களின் அலட்சியத்தால், பிறந்த குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி துண்டிக்கப்பட்ட அந்தத் தலை தாயின் வயிற்றிலேயே வைத்துத் தைத்தும் உள்ளனர். இந்த காரணமாக 32 வயது இந்து பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதற்கு காரணமானவர்களைக் கண்டறிய மருத்துவ விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பேராசிரியர் ரஹீல் சிக்கந்தர் கூறியதாவது:- தார்பார்கர் மாவட்டத்தில் … Read more

ஹாங்காங்கின் பிரம்மாண்ட மிதக்கும் உணவகம் ஜம்போ கடலில் மூழ்கியது

ஹாங்காங்கின் புகழ் பெற்ற பிரம்மாண்ட மிதக்கும் உணவகம், ஜம்போ கடலில் மூழ்கிவிட்டதாக வெளியான அறிவிப்பு உலகெங்கிலும் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹாங்காங்கின் புகழ் பெற்ற பிரம்மாண்ட மிதக்கும் உணவகம், 1976 ஆம் ஆண்டு 3.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்டது. உலக பிரபலங்கள் பலரின் மனம் கவர்ந்த இந்த பிரம்மாண்ட ஹோட்டல் ஹாங்காங்கின் அடையாளமாக திகழ்ந்தது என்றால் மிகையில்லை. ஹாங்காங் வரும் பலரும் இந்த ஹோட்டலில் உணவருந்த வருவார்கள். சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்பும் இடமாக … Read more

ஆசியாவிலும் நுழைந்த குரங்கு அம்மை… லெபனானில் ஒருவருக்கு தொற்று கண்டுபிடிப்பு!

பொதுவாக ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் குரங்கு அம்மை நோய் தற்போது பல்வேறு நாடுகளுக்கு பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை மற்றும் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், போர்ச்சுகல், ஸ்பெயின் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அண்மையில் அறிவித்திருந்தது. இந்நிலையில், மேற்காசிய நாடுகளில் ஒன்றான லெபனானில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது … Read more

சீரியஸான மேட்சில் சிரிப்பை கிளப்பிய இலங்கை அம்பயர் குமார் தர்மசேனா.!

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை, இலங்கை நடுவர் குமார் தர்மசேனா, கேட்ச் செய்வது போல் பாவனை செய்தது அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது. ஷாட் பால் ஆக வந்த அந்த பந்தை அலெக்ஸ் கேரி அடிக்க, ஸ்கொயர் லெக் அம்பயராக நின்றிருந்த குமார் தர்மசேனா கேட்ச் பிடிக்க எத்தனித்தார். ஆனால், தாம் பீல்டர் இல்லை அம்பயர் தான் என்பதை … Read more

மாலத்தீவில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது சரமாரி தாக்குதல் – பரபரப்பு வீடியோ…!

மெல், சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த யோகா நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று யோகா பயிற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் அருகே அமைந்துள்ள தீவு நாடான மாலத்தீவிலும் இன்று யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அந்நாட்டின் தலைநகர் மெலில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இந்த யோகா நிகழ்ச்சி மாலத்தீவு அரசு மற்றும் இந்திய கலாச்சார … Read more

Employment CUT: டெஸ்லா நிறுவனத்தின் 10 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மஸ்க்

சர்வதேச பிரபல நிறுவனமான டெஸ்லா ஊழியர்களை பணிநீக்கம் செய்வது தொடர்பான செய்தியை எலோன் மஸ்க் உறுதி படுத்தினார். ஆனால் தற்காலிகமாக பணியமர்த்தப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை தொடரும் என்று மஸ்க் கூறுகிறார்.  இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ள எலான் மஸ்க், டெஸ்லா ஊழியர்களை எச்சரிக்கும் விதமாக அவர் சொல்வது வைரலாகிறது. ‘அலுவலகத்தில் இருந்து வேலை செய்யுங்கள் அல்லது வெளியேறி விடுங்கள்’ என்று எச்சரிக்கை பல ஊழியர்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. டெஸ்லா தனது ஊழியர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை குறைக்கும் என்று எலோன் மஸ்க் கூறியுள்ளார். மூன்று … Read more

நோபல் பரிசை விற்று ரூ.808 கோடியை உக்ரைன் குழந்தைகளுக்காக வழங்கிய ரஷிய பத்திரிகையாளர்

நியூயார்க், உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடந்து வருகிறது. இந்த போரினால் பொதுமக்கள் பலர் உயிர் இழந்துள்ளனர். குறிப்பாக பல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை இழந்துள்ளனர். இந்த போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் குழந்தைகளுக்கு உதவும் வகையில் தனக்கு வழங்கப்பட்ட நோபல் தங்க பதக்கத்தை விற்க ரஷியாவை சேர்ந்த பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவ் முடிவு செய்தார். கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுயுடன் இவருக்கு தங்க பதக்கமும், 5 லட்சம் டாலரும் … Read more

தாய்லாந்து சுற்றுலா செல்ல திட்டமா; இந்த செய்தி உங்களுக்குத் தான்

தாய்லாந்தில் விடுமுறையை கழிக்க அல்லது வணிகப் பயணத்தைத் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளவர்கள் என்றால் , இதோ உங்களுக்கான நல்ல செய்தி! தாய்லாந்து அரசாங்கம் தாய்லாந்து பாஸ் மற்றும் கட்டாய மருத்துவக் காப்பீட்டின் நிபந்தனையை நீக்கி, நாட்டிற்குள் பயணம் செய்வதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இந்த தடை தாய்லாந்து குடிமக்களுக்கு ஜூன் 1 ஆம் தேதி நீக்கப்பட்டது, இப்போது அது வெளிநாட்டினருக்கும் நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார காப்பீடு கட்டாயமில்லை தாய்லாந்தின் கோவிட்-19 சூழ்நிலை நிர்வாகத்திற்கான மையம் (CCSA) இப்போது … Read more

காங்கோவின் விடுதலை நாயகன்: 61 ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்படைக்கப்பட்ட பாட்ரிஸின் பல்

பெல்ஜியத்தால் மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட காங்கோவின் விடுதலை நாயகன் பாட்ரிஸ் லுமும்பாவின் ‘பல்’ 61 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாட்ரிஸ் லுமும்பா… ஆப்பிரிக்கவின் விடுதலை வரலாற்று நாயகர்களில் மறுக்க முடியாத பெயர். 1925-ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் நாள், பெல்ஜிய காங்கோவின் அனாலுவா என்ற கிராமத்தில் பழங்குடி குடும்பத்திற்கு பிறந்தவர்தான் பாட்ரிஸ் லூமம்பா. பெல்ஜியத்திடம் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக காங்கோ அடிமைப்பட்டு இருந்த காலக்கட்டம் அது. பாட்ரிஸ் தனது இளம் வயதிலேயே … Read more

எலான் மஸ்க் உடனான உறவை முறித்து கொள்ள விரும்புவதாக கூறியுள்ள அவரது திருநங்கை மகள்.. நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

உலகப் பெருங் கோடீஸ்வரருமான எலான் மஸ்க் உடனான உறவை முறித்து கொள்ள விரும்புவதாக கூறிய அவரது திருநங்கை மகள், தனது பெயர் மற்றும் பாலினத்தை மாற்ற கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். டெஸ்லா நிறுவன உரிமையாளரான எலான் மஸ்கிற்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்தவர் சேவியர் அலெக்சாண்டர் மஸ்க். தந்தை எலான் மஸ்க் உடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க விரும்புவதாக கூறியுள்ள அவர், தனது பெயரை விவியன் ஜென்னா வில்சன் என மாற்ற கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் … Read more