எலான் மஸ்க் உடனான உறவை முறித்து கொள்ள விரும்புவதாக கூறியுள்ள அவரது திருநங்கை மகள்.. நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

உலகப் பெருங் கோடீஸ்வரருமான எலான் மஸ்க் உடனான உறவை முறித்து கொள்ள விரும்புவதாக கூறிய அவரது திருநங்கை மகள், தனது பெயர் மற்றும் பாலினத்தை மாற்ற கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். டெஸ்லா நிறுவன உரிமையாளரான எலான் மஸ்கிற்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்தவர் சேவியர் அலெக்சாண்டர் மஸ்க். தந்தை எலான் மஸ்க் உடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க விரும்புவதாக கூறியுள்ள அவர், தனது பெயரை விவியன் ஜென்னா வில்சன் என மாற்ற கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் … Read more

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை 54.47 கோடியை தாண்டியது

ஜெனிவா, சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,47,99,140ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 52,00,68,585 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா … Read more

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் ராக்கெட்டை விண்ணில் ஏவியது தென்கொரியா..!

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் ராக்கெட்டை இரண்டாவது முயற்சியில் தென்கொரியா விண்ணில் ஏவியது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் முயற்சியில் ராக்கெட்டின் இயந்திரம் திட்டமிட்டதை விட முன்னதாக எரிந்ததால் சுற்றுப்பாதையில் ராக்கெட் நுழையமுடியவில்லை. தற்போது நூரி ராக்கெட் வெற்றிகரமாக அனுப்பப்பட்டுள்ளதால் தனது சொந்த தொழில்நுட்பத்தில் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் உலகின் 10-வது நாடாக தென்கொரியா மாறியுள்ளது. வரும் ஆண்டுகளில் மேலும் 4 நூரி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தவும், அடுத்த தலைமுறை விண்வெளி ஏவுகணைகளை உருவாக்கவும் தென்கொரியா திட்டமிட்டுள்ளது.  … Read more

கடலில் மூழ்கிய ஜம்போ கப்பல் உணவகம்!

ஹாங்காங்கில் அடையாளங்களின் ஒன்றாக திகழ்ந்தது ஜம்போ கப்பல் உணவகம். 1976ஆம் ஆண்டில் சேவையை தொடங்கிய இந்த கப்பல் பார்ப்பதற்கு அரண்மனை போன்ற தோற்றம் கொண்டது. இங்கிலாந்து ராணி எலிசபத் முதல் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் வரை பல பிரபலங்கள் இந்த கப்பல் உணவகத்திற்கு வருகை புரிந்துள்ளனர். நகரின் அடையாளமாக இருந்த இந்த கப்பல் உணவகம் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்த்து வந்தது. மேலும், ஏராளமான திரைப்படங்களும் இந்த கப்பலில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கொரோனாவால் 2 … Read more

இஸ்ரேலில் மீண்டும் அரசியல் நெருக்கடி; கூட்டணி அரசு கலைந்தது

மத்திய கிழக்கில் குடியேறிய உலகின் ஒரே யூத நாடான இஸ்ரேல் மீண்டும் அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ளது. அங்கு திங்கள்கிழமை நஃப்தலி பென்னட் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் திடீரென காட்சிகள் மாறின. கூட்டணி அரசில் இருந்த இரு கட்சிகளும் பரஸ்பரம் பிரிந்து செல்வதாக அறிவித்தன. எவ்வாறாயினும், தற்போதைக்கு தற்காலிக அரசாங்கம் ஆட்சியில் இருக்கும். அக்டோபரில் புதிய தேர்தல்கள் நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நஃப்தாலி மற்றும் யாயிர் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் கடந்த தேர்தலுக்குப் பிறகு நஃப்தாலி பெனட் … Read more

சீனாவில் 60 ஆண்டுகளில் இல்லாத கனமழை: மக்கள் இயல்பு வாழ்கை பாதிப்பு

தென் பகுதி சீனாவில் 60 ஆண்டுகள் இல்லாத அளவு கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக தென் பகுதிகள் பல நீரில் மூழ்கியுள்ளன. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ சீனாவில் தென் பகுதியில் பெய்த கனமழை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழையில் 7 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கவுண்டான் மாகாணத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு, கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக சாலைகள், ரயில் தண்டவாளங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சுமார் 1,77,660 பேர் வேறு இடங்களுக்கும் … Read more

யோகா நிகழ்ச்சியில் புகுந்து தாக்குதல்; மாலத்தீவில் அத்துமீறல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாலத்தீவில் இன்று சர்வதேச யோகா தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கலவரக்காரர்கள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பலர் காயமுற்றனர். மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம், இந்திய கலாச்சார மையம், மற்றும் மாலத்தீவு இளைஞர் நலத்துறை ஆகியன இணைந்து சர்வதேச யோகா தினத்தை கொண்டாடினர். இன்று காலை 6 மணிக்கு அங்குள்ள கலோலு விளையாட்டு அரங்கில் யோகா நிகழ்வு நடந்துகொண்டிருந்தபோது மாலத்தீவு நாட்டைச் சேர்ந்த சிலர் ஆயுதங்களுடன் உள்ளே புகுந்து அங்கு … Read more

அதிபர் கோத்தபயா பதவி விலகக் கோரி மாணவர்கள், புத்த பிக்குகள் பேரணி.!

இலங்கையில் அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் அதிபர் கோத்தபயா பதவி விலகக் கோரி மாணவ அமைப்புகள், புத்த பிக்குகள், தொழிற்சங்கங்கள், பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆட்சி பொறுப்பில் அதிபர் கோத்தபயாவுக்கு உள்ள அதிகாரத்தை குறைக்கும் 21-வது சட்டதிருத்தத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  Source link

வானில் திடீரென நீல வண்ண சுருள் தோன்றியதால் மக்கள் பீதி

நியூசிலாந்தில் வானத்தில் திடீரென நீல வண்ணத்தில் சுருள் போன்று தோன்றின. இணையத்தில் புகைப்படங்கள் வேகமாக பரவிய நிலையில், ஏலியன்களின் பறக்கும் தட்டு என சந்தேகத்தை கிளப்பியது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் தொலைத் தொடர்பு செயற்கைகோளை சுற்றுபாதைக்கு கொண்டு சென்ற போது நீள வர்ண சுருள் உருவாக்கியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ராக்கெட்டின் உந்துசக்தி மூலம் வெளியேறும் புகை காற்றிலுள்ள தண்ணீர் மற்றும் கார்பன் டை ஆக்சைடுடன் கலந்து சூரிய ஒளியில் படும் போது … Read more

நான்கு ஆண்டுகளில் 5-வது முறையாக இஸ்ரேலில் தேர்தல்.. அடுத்த வாரம் ஆட்சியை கலைப்பதற்கான மசோதா தாக்கல்

இஸ்ரேலில் பிரதமர் நப்தாலி பென்னட் தலைமையிலான அரசு கவிழ உள்ள நிலையில், அங்கு 5-வது முறையாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. அடுத்த வாரம் ஆட்சியை கலைப்பதற்கான மசோதா தாக்கல் செய்ய உள்ளதாகவும், மசோதா வெற்றி பெற்றால் மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை காபந்து அரசின் பொறுப்பாளராக வெளியுறவு அமைச்சராக உள்ள Yair Lapid தலைமை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 5-வது முறையாக இஸ்ரேலில் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில் முன்னாள் … Read more