யோகா நிகழ்ச்சியில் புகுந்து தாக்குதல்; மாலத்தீவில் அத்துமீறல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாலத்தீவில் இன்று சர்வதேச யோகா தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கலவரக்காரர்கள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பலர் காயமுற்றனர். மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம், இந்திய கலாச்சார மையம், மற்றும் மாலத்தீவு இளைஞர் நலத்துறை ஆகியன இணைந்து சர்வதேச யோகா தினத்தை கொண்டாடினர். இன்று காலை 6 மணிக்கு அங்குள்ள கலோலு விளையாட்டு அரங்கில் யோகா நிகழ்வு நடந்துகொண்டிருந்தபோது மாலத்தீவு நாட்டைச் சேர்ந்த சிலர் ஆயுதங்களுடன் உள்ளே புகுந்து அங்கு … Read more

அதிபர் கோத்தபயா பதவி விலகக் கோரி மாணவர்கள், புத்த பிக்குகள் பேரணி.!

இலங்கையில் அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் அதிபர் கோத்தபயா பதவி விலகக் கோரி மாணவ அமைப்புகள், புத்த பிக்குகள், தொழிற்சங்கங்கள், பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆட்சி பொறுப்பில் அதிபர் கோத்தபயாவுக்கு உள்ள அதிகாரத்தை குறைக்கும் 21-வது சட்டதிருத்தத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  Source link

வானில் திடீரென நீல வண்ண சுருள் தோன்றியதால் மக்கள் பீதி

நியூசிலாந்தில் வானத்தில் திடீரென நீல வண்ணத்தில் சுருள் போன்று தோன்றின. இணையத்தில் புகைப்படங்கள் வேகமாக பரவிய நிலையில், ஏலியன்களின் பறக்கும் தட்டு என சந்தேகத்தை கிளப்பியது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் தொலைத் தொடர்பு செயற்கைகோளை சுற்றுபாதைக்கு கொண்டு சென்ற போது நீள வர்ண சுருள் உருவாக்கியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ராக்கெட்டின் உந்துசக்தி மூலம் வெளியேறும் புகை காற்றிலுள்ள தண்ணீர் மற்றும் கார்பன் டை ஆக்சைடுடன் கலந்து சூரிய ஒளியில் படும் போது … Read more

நான்கு ஆண்டுகளில் 5-வது முறையாக இஸ்ரேலில் தேர்தல்.. அடுத்த வாரம் ஆட்சியை கலைப்பதற்கான மசோதா தாக்கல்

இஸ்ரேலில் பிரதமர் நப்தாலி பென்னட் தலைமையிலான அரசு கவிழ உள்ள நிலையில், அங்கு 5-வது முறையாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. அடுத்த வாரம் ஆட்சியை கலைப்பதற்கான மசோதா தாக்கல் செய்ய உள்ளதாகவும், மசோதா வெற்றி பெற்றால் மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை காபந்து அரசின் பொறுப்பாளராக வெளியுறவு அமைச்சராக உள்ள Yair Lapid தலைமை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 5-வது முறையாக இஸ்ரேலில் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில் முன்னாள் … Read more

கம்போடியா நாட்டில் ராட்சத stingray எனப்படும் உலகின் மிகப் பெரிய நன்னீர் மீன் கண்டுபிடிப்பு.!

கம்போடியா நாட்டில் ராட்சத stingray எனப்படும் உலகின் மிகப் பெரிய நன்னீர் மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மீன் 661பவுண்டு எடை உடையதாகும். அந்நாட்டின் வடக்குப் பகுதியில் பாயும் Mekong ஆற்றில் இந்த மீன் இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீனவர் ஒருவர் வலையில் சிக்கி இருந்த இந்த மீனை மீன் ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்ததில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. இதற்கு முன்பு தாய்லாந்தில் கடந்த 2005ஆம் ஆண்டு பிடிக்கப்பட்ட மீன் 646பவுண்டு எடை கொண்டதாக இருந்த து குறிப்பிடத்தக்கது. Source … Read more

வெள்ளத்தில் சீனா| Dinamalar

பீஜிங், : சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் வரலாறு காணாத அளவில் பெய்த கோடை மழையால் பல நகரங்கள் வெள்ளக்காடாகின. தெருக்களில் ஆறு போல மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சிறிய வீடுகள், கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்தது. இதனால் பல கிராமங்கள் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.மழை வெள்ளத்தின் போது ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்புக்குழுவினர் மீட்கும் பணியில் தீவிரம் … Read more

எத்தியோப்பியா கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 230 பேர் பலி| Dinamalar

நைரோபி : எத்தியோப்பியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 230 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. குறிப்பாக அந்நாட்டில் உள்ள ஒரொமியா மாகாணத்தில் கிளர்ச்சியாளர் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. ஒரொமியா மாகாணத்தை எத்தியோப்பாவில் இருந்து பிரிந்து தனிநாடாக அறிவிப்பதை அந்த அமைப்புகள் நோக்கமாக கொண்டுள்ளன.இந்த அமைப்புகள் அவ்வப்போது மக்கள், ராணுவம் மீது கொடூர தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஒரொமியா மாகாணம் கிம்பி நகரில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்த … Read more

உணவு, குடிநீரின்றி மக்கள் தவிப்பு| Dinamalar

டாக்கா : வங்கதேசத்தில் கன மழை, வெள்ளத்தில் சிக்கியுள்ள லட்சக்கணக்கானோர் உணவு, குடிநீரின்றி தவித்து வருகின்றனர். நம் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த ஒருவாரமாக கன மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சுனாம்கஞ்ச், சையல்ஹட் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ராணுவத்தின் உதவியுடன் அங்கிருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 40 லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கும் பகுதி களை வெள்ளம் சூழ்ந்துஉள்ளது. அவர்கள் உணவு, குடிநீர் இன்றி … Read more

அதிபர் அலுவலகம் முற்றுகை; இலங்கையில் 21 பேர் கைது| Dinamalar

கொழும்பு : இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி தலைநகர் கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்திற்குச் செல்லும் அனைத்து வழிகளையும் போராட்டக்காரர்கள் மூடியதால் பதற்றம் ஏற்பட்டது. நம் அண்டை நாடான இலங்கையில் கடும் அன்னியச் செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, மின்வெட்டு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல நெருக்கடிகளில் சிக்கியுள்ளது.இதற்கு காரணம் அதிபர் கோத்தபய ராஜபக்சே என குற்றம் சாட்டும் பொதுமக்கள், அவர் … Read more